Monday, February 8, 2016

தமிழக அரசிடமிருந்து ஜேக்டோவிற்கு அழைப்பு

.முத்துப்பாண்டியன் சிவகங்கை மாவட்டச்செயலாளர் தமிழ்நாடு
ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில மநாடு தீர்மானம் எதிரொலி
தமிழக அரசிடமிருந்து ஜேக்டோவிற்கு அழைப்பு.

தமிழ்நாடு ஆரம்பப்ள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில மநாடு பிப்ரவரி 5, 6, 7 ஆகிய தேதிகளில் கோவில்பட்டியில் நடைபெற்றது. இறுதி நாளான நேற்று 40 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்ற மாபெரும் பேரணியால் கோவில்பட்டி நகரமே குலுங்கியது. ஆசிரியர்களின் கோரிக்கை முழக்கம் கோட்டை கதவுகளில் அதிர்வை ஏற்படுத்தியதின் விளைவாக
நாளை அமைச்சரவை மட்டத்தில் கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தைக்கு ஜேக்டோவிற்கு அழைப்பு விடுத்துள்ளதாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் திரு.பாலச்சந்தர் தகவல் தெரிவித்துள்ளார். மாநாடு அறைகூவலாக இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் மற்றும் தன் பங்கேற்பு ஓய்வூதியத்தை இரத்து செய்தல் உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாநாடு தீர்மான எதிரொலிதான் நமது கோரிக்கைகள் குறித்து பேச்சு வார்த்தை நடத்த ஜேக்டோவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment