சேலம்: தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் குறித்த பட்டியல் தயார் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
Thursday, December 31, 2015
Thursday, December 24, 2015
SLAS Test என்றால் என்ன?
மாணவர் பெறும் மதிப்பெண் ஆசிரியர்களின் திறன் மதிப்பீடுஅரசு பள்ளி ஆசிரியர் முறையாக பாடம் கற்றுக் கொடுத்தாரா என்பதை சோதிக்க, மாணவர்களுக்கு ஜன., 5 முதல் தேர்வு நடக்கிறது. இந்த தேர்வில், மாணவர் பெறும் மதிப்பெண்ணை வைத்தே ஆசிரியரின் தரம் நிர்ணயம் செய்யப்படுகிறது.
தமிழகத்தில், அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., திட்டம் மூலம், மாணவர்களுக்கு செயல் வழி கற்றலும், ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சியும் அளிக்கப்படுகிறது; இதற்காக, மத்திய அரசு சார்பில் பல கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. பயிற்சிக்கு வரும் ஆசிரியர்களுக்கு, பயணப்படி, சாப்பாடு போன்ற வசதிகளும் செய்து தரப்படுகின்றன. பயிற்சி பெற்ற ஆசிரியர் ஒழுங்காக பணியாற்றியுள்ளாரா, அவர் கற்றுக் கொடுத்ததால், மாணவர்கள் மேம்பட்டுள்ளனரா என, ஆண்டுதோறும் சோதனை நடத்தப்படும்.

இந்த ஆண்டுக்கான கற்றல் அடைவு திறன் தேர்வு, 3ம் வகுப்பு மற்றும், 5ம் வகுப்பு மாணவர்களுக்கு, ஜன., 5 முதல் நடக்க உள்ளது.மாவட்டம், வட்டம் மற்றும் பள்ளி வாரியாக சில மாணவர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு இந்த தேர்வு நடத்தப்படுகிறது.மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில், சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் கற்றல் அடைவு திறன் பட்டியல் தயாரிக்கப்படும். இதில், எந்த பகுதியில் மாணவர்கள் பின் தங்கியுள்ளனரோ, அந்த பகுதியில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களிடம், எஸ்.எஸ்.ஏ., விளக்கம் கேட்கும்
அரசு பள்ளி ஆசிரியர் முறையாக பாடம் கற்றுக் கொடுத்தாரா என்பதை சோதிக்க, மாணவர்களுக்கு ஜன., 5 முதல் தேர்வு நடக்கிறது.
இந்த தேர்வில், மாணவர் பெறும் மதிப்பெண்ணை வைத்தே ஆசிரியரின் தரம் நிர்ணயம் செய்யப்படுகிறது. தமிழகத்தில், அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., திட்டம் மூலம், மாணவர்களுக்கு செயல் வழி கற்றலும், ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சியும் அளிக்கப்படுகிறது;இதற்காக, மத்திய அரசு சார்பில் பல கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. பயிற்சிக்கு வரும் ஆசிரியர்களுக்கு, பயணப்படி, சாப்பாடு போன்ற வசதிகளும் செய்து தரப்படுகின்றன. பயிற்சி பெற்ற ஆசிரியர் ஒழுங்காக பணியாற்றியுள்ளாரா, அவர் கற்றுக் கொடுத்ததால்,மாணவர்கள் மேம்பட்டுள்ளனரா என, ஆண்டுதோறும் சோதனை நடத்தப்படும்.
இந்த ஆண்டுக்கான கற்றல் அடைவு திறன் தேர்வு, 3ம் வகுப்பு மற்றும், 5ம் வகுப்பு மாணவர்களுக்கு,ஜன., 5 முதல் நடக்க உள்ளது. மாவட்டம், வட்டம் மற்றும் பள்ளி வாரியாக சில மாணவர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு இந்த தேர்வு நடத்தப்படுகிறது.
மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில், சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் கற்றல் அடைவு திறன் பட்டியல் தயாரிக்கப்படும். இதில், எந்த பகுதியில் மாணவர்கள் பின் தங்கியுள்ளனரோ, அந்த பகுதியில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களிடம், எஸ்.எஸ்.ஏ., விளக்கம் கேட்கும்.
Monday, December 21, 2015
வருங்கால வைப்பு நிதி: செலவுக்கான காரணத்தைத் தெரிவிக்க வேண்டும்; தமிழக அரசு உத்தரவு
வருங்கால வைப்பு நிதியில் இருந்து அவசரத் தேவைக்காக எடுக்கப்படும் பணம், எந்த நோக்கத்துக்காகச் செலவிடப்பட்டது என்பதைத் தெரிவிக்க வேண்டுமென தமிழக அரசு தெரிவித்துள்ளது.தமிழகத்தில் பணியில் உள்ள அனைத்து ஊழியர்கள்-ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு பொது வருங்கால வைப்பு நிதியாக, மாத ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படுகிறது.
மொத்தமாகச் சேரும் பணம், அவர்கள் ஓய்வு பெறும் காலத்தில் வழங்கப்படுகிறது.பணிக் காலத்தில் ஏதேனும் அவசரத் தேவைக்காகவும் பணத்தை எடுத்துக்கொள்ள வழி செய்யப்பட்டுள்ளது.இந்த நிலையில், பொது வருங்கால வைப்பு நிதியில் இருந்து பணம் எடுக்கப்படும்போது அது எந்த நோக்கத்துக்காகச் செலவிடப்பட்டது என்பதை தமிழக அரசுக்குத் தெரிவிக்க வேண்டும்.
இதுகுறித்த அரசு உத்தரவில், ஊழியர்கள் எந்த நோக்கத்துக்காக பொது வருங்கால வைப்பு நிதியில் இருந்து பணத்தைப்பெற்றார்களோ, அந்த நோக்கத்துக்காகத்தான் பணம் செலவிடப்பட்டது என்பதைத் தெரிவிப்பதற்கான சான்றுகளை அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

7 வது ஊதியக்குழு -குறைந்தபட்ச ஊதியம் ரூ.18 ஆயிரம் 7 வது ஊதியக்குழு நிர்ணயித்தது எப்படி?-
காய்கறி, பால், எண்ணெய், எரிபொருள், பொழுதுபோக்கு போன்றவற்றின் அடிப்படையில் 7 வது ஊதியக்குழு மத்திய அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச அடிப்படை ஊதியமாக ரூ.18 ஆயிரம்
நிர்ணயித்துள்ளது.இந்த ஊதியம் கணவர், மனைவி, 2 குழந்தைகள் என, 4 பேர் கொண்ட குடும்பம் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டது.
நிர்ணயித்துள்ளது.இந்த ஊதியம் கணவர், மனைவி, 2 குழந்தைகள் என, 4 பேர் கொண்ட குடும்பம் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டது.
இதில் ஆணுக்கு ஒரு யூனிட், பெண்ணுக்கு 0.80 யூனிட், 2 குழந்தைகளுக்கு தலா 0.60 யூனிட் என, குடும்பத்திற்கு மொத்தம்3 யூனிட்டாக கணக்கிடப்பட்டுள்ளது.தினமும் ஒரு யூனிட்டிற்கு 475 கிராம் அரிசி அல்லது கோதுமை, 80 கிராம் பருப்பு வகைகள், 100 கிராம் பலசரக்கு பொருட்கள்,125 கிராம் பச்சை காய்கறிகள், 75 கிராம் இதர காய்கறிகள் தேவைப்படும். அதேபோல் 120 கிராம் பழங்கள், 200 மி.லி, பால், 56 கிராம் சர்க்கரை, 40 கிராம் எண்ணெய் தேவைப்படும். அதன் அடிப்படையில் ஒரு மாதத்திற்கு கணக்கிடப்பட்டுள்ளது.
மேலும் குடும்பத்திற்கு மாதம் 2.5 கிலோ மீன், 5 கிலோ இறைச்சி, 90 முட்டைகள், 5.5 மீ., புது துணி தேவைப்படும்.வாங்கப்படும் பொருட்களின் விலை (ஒரு கிலோவிற்கு): அரிசி அல்லது கோதுமைக்கு ரூ.25.93, பருப்பு வகைகளுக்கு ரூ.97.84, பலசரக்கு ரூ.58.48, பச்சை காய்கறிகளுக்கு ரூ.38.12, இதர காய்கறிகளுக்கு ரூ.32.80, பழங்களுக்கு ரூ.64.16, சர்க்கரைக்கு ரூ.37.40, எண்ணெய்க்கு ரூ.114.02, மீன்களுக்கு ரூ.268.38, இறைச்சிக்கு ரூ.400.90 செலவாகும்.அதேபோல் ஒரு லிட்டர் பாலுக்கு ரூ.37.74, ஒரு மீ.,துணிக்கு ரூ.164.88, ஒரு குடும்பத்திற்கு சோப்பு ரூ.291.31, எரிபொருள், குடிநீர், மின் கட்டணத்திற்கு ரூ.2,304, திருமணம், பொழுதுபோக்கு, திருவிழாக்களுக்கு ரூ.2,033.38, இதர செலவிற்கு ரூ.4,444.13, மொத்தம்ரூ.18 ஆயிரம் இருந்தால் போதும் என, 7 வது ஊதியக்குழு தெரிவித்துள்ளது.
Saturday, December 19, 2015
NMMS ஊக்கத்தொகை தேர்வில் சிக்கல்
பள்ளிக் கல்வி முடிக்கும் வரை, இடைநிற்றல் இல்லாமல் படிக்க, உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன. இதற்காக, தேசிய திறன் படிப்பு உதவித்தொகை தேர்வு, எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சி பெறுவோருக்கு, மாதம், 500 ரூபாய் வீதம், பிளஸ் 2 முடிக்கும் வரை வழங்கப்படும்.
இந்த ஆண்டு தேர்வுக்கான விண்ணப்பங்களை, 24ம் தேதி வரை, தேர்வுத் துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம் என, தலைமை ஆசிரியர்களுக்கு, தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி அறிவித்தார். ஆனால், இணையதளத்துக்கான, 'பாஸ்வேர்டு' வழங்கப்படவில்லை. அதனால், மாணவர்களின் விவரங்களை, இணையதளத்தில் பதிவேற்ற முடியாமல், தலைமை ஆசிரியர்கள் திணறுகின்றனர்.
மனநல ஆலோசனை கூற10 நடமாடும் மருத்துவ குழு
பள்ளி மாணவர்களுக்கு, மனநல ஆலோசனை வழங்கும் பணியில், 10 நடமாடும் மருத்துவக் குழுக்கள் ஈடுபட்டுள்ளன.வெள்ளம் பாதித்த சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலுார் மாவட்டங்களில், நோய் பாதிப்புகளைத் தடுக்க, சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த மாவட்டங்களில், நீண்ட விடுமுறைக்கு பின், பள்ளிகள் திறந்துள்ளன.
வெள்ள பாதிப்பால், மாணவர்கள் மனரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம் என்பதால், பள்ளிகளுக்கே சென்று, மனநல ஆலோசனை வழங்கும் பணியை, அரசு துவக்கி உள்ளது. மனநல டாக்டர்கள் கொண்ட, 10 நடமாடும் மருத்துவக் குழுக்கள், இந்த பணியில் ஈடுபட்டுள்ளன. வெள்ள பாதிப்பால் ஏற்பட்ட மன குழப்பம் தீரவும், அதிக மதிப்பெண் பெறும் வகையிலும், ஆலோசனைகள் தரப்படுகின்றன. ஒரு வாரத்திற்கு, இது தொடரும் என, சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். இது தவிர, நிவாரண முகாம்களில் தங்கி உள்ளோருக்கும், மனநல ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.
ஆர்.எம்.எஸ்.ஏ., திட்ட நிதியில் முறைகேடு: அமைச்சர்கள் பெயரில் அதிகாரிகளுக்கு மிரட்டல்
தமிழகத்தில் அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்ட (ஆர்.எம்.எஸ்.ஏ.,) நிதியில், ரூ.பல லட்சம் முறைகேடு நடப்பதை தடுக்க கல்வித்துறை செயலாளர் சபீதா நடவடிக்கை எடுப்பாரா என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.இத்திட்டத்தில் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள அரசு பள்ளிகளில், ஆண்டுதோறும் பள்ளி பராமரிப்பு மானியம் ரூ.50 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதில் இருந்து மாணவர் நலன் கருதி பள்ளி நுாலகங்களுக்கு ரூ.7,500க்கு புத்தகங்கள், அறிவியல் ஆய்வகங்களுக்கு ரூ.15 ஆயிரத்திற்கு அறிவியல் உபகரணங்கள் வாங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
'புத்தகங்கள், உபகரணங்களை சில தனியார் கம்பெனிகளில் மட்டும் வாங்க வேண்டும்,' என சில அமைச்சர்கள் பெயரை குறிப்பிட்டு தலைமையாசிரியர்களுக்கு அரசியல்வாதிகள் நெருக்கடி கொடுக்கின்றனர். பணியாத தலைமையாசிரியர், கல்வி அதிகாரிகளிடம் "'டிரான்ஸ்பர்' செய்து விடுவோம்," என மிரட்டுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால், வேறு வழியில்லாமல் புத்தகம், உபகரணங்களை பெற்றுக்கொண்டு, அதற்காக அந்த கம்பெனிகளுக்கே ரூ.22500 க்கான காசோலையை பள்ளிகள் அனுப்பி வைக்கின்றன.
கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது: பல ஆண்டுகள் ஒரே மாதிரியான உபகரணங்களையே மீண்டும் மீண்டும் பள்ளிக்கு அனுப்பி வைக்கின்றனர். பல பள்ளிகளில் சாக்கு மூட்டைக்குள் அப்பொருட்கள் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளன.இதற்கு காரணம் அரசியல்வாதிகள் ஆதரவில் பெயரளவில் செயல்படும் சில கம்பெனிகள் தான். பள்ளிகளுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை கமிஷனாக பெற்றுக்கொண்டு கல்வி அதிகாரிகளை அவர்கள் மிரட்டுகின்றனர். இதுகுறித்து விசாரித்து செயலாளர் சபீதா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்

Tuesday, December 15, 2015
பாடம் நடத்தாத ஆசிரியர்கள் விளக்கம் கேட்டு 'நோட்டீஸ்'
சரிவர பாடம் நடத்தாத ஆசிரியர்கள், ஏழு பேரிடம் விளக்கம் கேட்டு, முதன்மைக் கல்வி அலுவலர், 'நோட்டீஸ்' கொடுத்துள்ளார். வேலுார் மாவட்டம், பள்ளிகொண்டா அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில், தமிழ், ஆங்கிலம் மற்றும் உருது மொழிக்கல்வி கற்றுக் கொடுக்கப்படுகிறது; 21 ஆசிரியர்கள் உள்ளனர்.
கடந்த ஆண்டு பொதுத் தேர்வில், 10ம் வகுப்பில், 76 சதவீதம், பிளஸ் 2வில், 48 சதவீதம் மட்டுமே, மாணவர்களின் தேர்ச்சி இருந்தது; வேலுார் மாவட்டத்திலேயே மிகக் குறைந்த தேர்ச்சி, இந்தப் பள்ளியில் தான்.சமீபத்தில், இந்த பள்ளிக்கு சென்ற முதன்மை கல்வி அலுவலர் பூபதி, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் விசாரணை நடத்தினார்.
அப்போது, அந்த பள்ளியின், ஏழு ஆசிரியர்கள், மாணவர்களுக்கு சரிவர பாடங்களை நடத்தாதது தான், தோல்விக்கு காரணம் என, மாணவர்கள் மற்றும் பெற்றோர் கூறினர். இதையடுத்து, அந்த ஏழு ஆசிரியர்களுக்கும், 'சரி வர பாடம் நடத்தாதது ஏன்?' என கேட்டு, கல்வி அலுவலர், நோட்டீஸ் கொடுத்துள்ளார். பிற ஆசிரியர்களையும் கண்டித்த அலுவலர், 'வரும் பொதுத்தேர்வில், அதிக வெற்றி பெற பாடுபட வேண்டும்' என, அறிவுறுத்தினார்.
பணியில் இருந்து கொண்டே ஒரே நேரத்தில் இரு படிப்பை முடித்த ஆசிரியைக்கு பதவிஉயர்வு கிடையாது: உயர் நீதிமன்றம் உத்தரவு
பணியில் தொடர்ந்தவாறு ஒரே நேரத்தில் பி.எட். மற்றும் முதுநிலை ஆங்கில இலக்கிய பட்டப்படிப்பை முடித்த ஆசிரியைக்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க மறுத்தது சரிதான் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியையாக பணிபுரிந்து வருபவர், தனக்கு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அவர் மனுவை தனி நீதிபதி தள்ளுபடி செய்ததால், அவர் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.அந்த மனுவை விசாரித்து நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், என்.கிருபாகரன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:
மனுதாரர் இடைநிலை ஆசிரியராக 1986-ல் பணியில் சேர்ந்துள்ளார். 1988-ல் இளங் கலை ஆங்கில இலக்கியம் முடித்துள்ளார். பின்னர் 1989-ல் ஓராண்டு பி.எட். மற்றும் 1990-ல் இரண்டாண்டு முதுகலை ஆங்கில இலக்கியம் முடித்துள்ளார்.
இவ் விரண்டு படிப்புகளையும் அவர் ஆசிரியராக பணிபுரிந்து கொண்டே படித்துள்ளார். இது எப்படி முடிந்தது என்பதுதெரியவில்லை. பொதுவாக பணியில் இருக்கும் ஒருவரால் ஒரு படிப்புக்கே நேரம் ஒதுக்க முடியாது. இவர் இரு படிப்புகளை படித்துள்ளார். அந்த கல்வி தரமானதாக இருக்குமா என்ற சந்தேகம் ஏற்படுகிறது.பணியில் இருந்துகொண்டே ஒரே நேரத்தில் இரு படிப்புகளை முடித்த காரணத்தால் மனுதாரருக்கு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க மறுத்து பள்ளிக் கல்வி இயக்குநர் கடந்த ஆண்டு உத்தரவிட்டுள்ளார்.
இதை எதிர்த்து மனுதாரர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவிட்டதில் தவறில்லை. மேலும் மனுதாரர் யுஜிசி நிபுணர் குழுவின் தீர்மானத்தையும் மீறியுள்ளார்.எனவே கூடுதல் கல்வித் தகுதி அடிப்படையில் தனக்கு பதவி உயர்வு வழங்க உத்தரவிடக் கோரிய மனுதாரர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது எனநீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

7–வது சம்பள கமிஷன் அறிக்கையை அமல்படுத்துவது 6 மாதம் தாமதமாகும்?: குறைபாடுகளை நீக்க தீவிர ஆலோசனை
மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒரு தடவை சம்பள விகிதம் சீரமைக்கப்படும்.இதற்காக மத்திய அரசு ‘‘சம்பள கமிஷன்’’ ஏற்படுத்தி ஆய்வு செய்து, அதனிடம் அறிக்கை பெற்று நடவடிக்கை எடுக்கும் .மத்தியில்பா.ஜ.க. ஆட்சி அமைந்ததும் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை, விலைவாசி உயர்வுக்கு ஏற்ப சீரமைக்க 7–வது சம்பள கமிஷன் அமைக்கப்பட்டது.
அந்த கமிஷன் மாநில அரசுகள் மற்றும் பல்வேறு தொழிற்சங்கத்திடம் ஆலோசனை நடத்தி அறிக்கை தயார் செய்து மத்திய அரசிடம் கொடுத்தது.அந்த அறிக்கையின் அடிப்படையில் 2016–ம் ஆண்டு 7–வது சம்பள கமிஷன் அறிக்கையின் பரிந்துரைகள் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் 7–வது சம்பள கமிஷன் பரிந்துரைகளில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கும் மற்ற அதிகாரிகளுக்கும் சம்பள விகிதத்தில் மிகப் பெரும் வித்தியாசம் இருப்பதாக அதிருப்தி எழுந்துள்ளது.இது தவிர சம்பள உயர்வால் தங்களுக்கு பெரும் நிதிச்சுமை ஏற்படும் என்று பல மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும் போக்குவரத்து அலவன்சு உயர்த்தப்படாததற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகையை குறைகளை, முரண்பாடுகளை சரி செய்ய மத்திய அமைச்சக செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு மாநில அரசுகள் மற்றும் முக்கிய தொழிற்சங்கங்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறது.அதில் ஒருமித்த கருத்து உருவானதும் 7–வது சம்பள கமிஷன் அறிக்கை பரிந்துரைகள் அமலுக்கு வரும். இதனால் மத்திய அரசு ஊழியர்கள் புதிய சம்பள உயர்வை பெறுவது 6 மாதம் முதல் ஓராண்டு வரை தள்ளிப் போகலாம் என்று கூறப்படுகிறது.
Subscribe to:
Posts (Atom)