Saturday, January 10, 2015

அதிகாரிகளின் மெத்தனம் : அரசாணை வெளியிட்டும் ஊதியம் இல்லை! : அல்லல்படும் பகுதிநேர ஆசிரியர்கள்!
பகுதிநேர ஆசிரியர்களுக்கு, உரிய நேரத்தில் ஊதியம் கிடைக்க இ.சி.எஸ்., முறையை செயல்படுத்த, அரசாணை வெளியிட்டும், அதிகாரிகளின் மெத்தனத்தால், ஊதியம் கிடைக்காமல் அவதிப்படுவதாக, பகுதி நேர ஆசிரியர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன், 16 ஆயிரத்து 500 பேர் மாநிலம் முழுவதும் பகுதி நேர ஆசிரியர்களாக, 5000 ரூபாய் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டனர். 2014 நவம்பரில், இவர்களின் தொகுப்பூதியம், 7000 ரூபாயாக உயர்த்தியும், ஊதியம் வழங்குவதில், இ.சி.எஸ்., முறையை செயல்படுத்தவும் அரசாணை வெளியிடப்பட்டது.
இதன் படி, சக அரசு அலுவலர்கள் போன்று, பகுதி நேர ஆசிரியர்களுக்கும், ஊதியம் ஒவ்வொரு மாதமும் 5ம் தேதிக்கு முன் கிடைக்க, நடவடிக்கைகள் மேற்கொள்ள மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. இருப்பினும், கோவை மாவட்டத்தில், இ.சி.எஸ்., முறையை செயல்படுத்த அதிகாரிகள் மெத்தனம் காண்பித்து வருகின்றனர்.
கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில், 900 பகுதி நேர ஆசிரியர்கள் பணியாற்றிவருகின்றனர்.
இவர்களுக்கு, டிசம்பர் மாத ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லை. இ.சி.எஸ்., முறையில் ஊதியம் வழங்க, போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. இதனால், பகுதி நேர ஆசிரியர்கள் கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.
மேலும், அரசாணையில் அறிவித்த படி ஊதிய உயர்வுக்கான நிலுவை தொகையும் இதுவரை வழங்கப்படவில்லை. குறைந்த ஊதியத்தில், பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஊதியத்தை இழுபறிக்கு பின் மாத இறுதியில் வழங்குவதால், மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
அரசு அலுவலர்கள்,ஆசிரியர்கள் சங்கங்கள் மற்றும் அனைத்து இயக்கமும் கலந்து கொள்ளும் மிகப்பெரிய போராட்டத்தை தமிழக அரசு சந்திக்க இருக்கிறது.
சென்னையில் அரசு அலுவலர்கள்,ஆசிரியர்கள் சங்கங்கள் மற்றும்அனைத்து இயக்கமும் ஒன்றிணைந்தன. இடைநிலை ஆசிரியர்களின்கோரிக்கையை ஏற்றுக்கொண்டால் அதில் இணைந்து போராடுவது,இல்லையென்றால் தனித்து டிட்டோஜாக் போராடுவது என்ற‌
முடிவை பாவலர் க.மீனாட்சிசுந்தரம் அவர்கள் தெரிவித்தார்
அதனை TAAK .ன்பொதுச்செயலாளர் 
திரு இரா.தாஸ் அவர்களும்,TNPTF..ன்பொதுச்செயலாளர் திரு பாலச்சந்தர் அவர்களும் வலியுறுத்திகூறினார்கள்.அதை அலுவலர்க்ள் இயக்கமும்ஏற்றுக்கொண்டது.இறுதியில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கூட்டணியின் பொதுச்செயலாளர் திரு ரெங்கராஜன் அவர்களைசந்தித்து பேசினார்கள்,அடுத்த டிட்டோஜாக் கூட்டத்தில்கலந்துகொள்வதாக கூறினார்..எனவே விரைவில் 1988ல்லும்2003ரிலும் நடந்த போராட்டத்தை விட மிகப்பெரிய போராட்டத்தைஅரசு சந்திக்க இருக்கிறது.