Saturday, August 26, 2017

உபரியாக உள்ள ஆசிரியர்கள் அரசு பள்ளிகளுக்கு இடமாற்றம்

நிதியுதவி பெறும் பள்ளிகளில், உபரியாக உள்ள ஆசிரியர்களை, தற்காலிகமாக, அரசு பள்ளிகளில் மாற்றுப் பணியில் ஈடுபடுத்திக் கொள்ள, தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

Thursday, August 24, 2017

விதிமீறல் இன்றி நல்லாசிரியர் விருது : தேர்வுக்குழுவிற்கு அதிகாரிகள் உத்தரவு

ஆசிரியர் தின நல்லாசிரியர் விருதுக்கு, முதற்கட்ட பட்டியலை, பள்ளிக்கல்வி இயக்குனரிடம் அதிகாரிகள் சமர்ப்பித்து உள்ளனர். விதி மீறல் இன்றி ஆசிரியர்களை தேர்வு செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.

Saturday, August 19, 2017

CPS - ஓய்வூதிய திட்டம் குறித்து மீண்டும் கருத்து கேட்பு

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட வல்லுனர் குழு, வரும்
21 முதல் மீண்டும், ஆசிரியர்கள், அரசு ஊழியர் சங்கத்தினரின் கருத்துகளை கேட்க உள்ளது.

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பேராசிரியர்கள் பயிற்சி

தேசிய நுழைவு தேர்வுகளை, அரசு பள்ளி மாணவர்கள் சந்திக்கும் வகையில், ஐ.ஐ.டி., மற்றும் அண்ணா பல்கலை பேராசிரியர்கள் சார்பில், தமிழக ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க, பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. 

தமிழகம் முழுவதும் 40 மையங்களில் அரசு பள்ளிஆசிரியர்களுக்கு தகவல் தொழில்நுட்ப பயிற்சி

மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை: தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்கள் கணினி பயன்பாட்டை தெரிந்து கொள்ளவும் 

ஆசிரியர்கள் சங்கம் அமைப்பதை தடுக்க முடியாது - தமிழக அரசு

ஆசிரியர்கள் சங்கம் அமைப்பதை தடுக்க முடியாது - தமிழக அரசு
# அரசு பள்ளிகளில்தான் தங்கள் குழந்தைகளை சேர்க்க வேண்டும் என்று ஆசிரியர்களை கட்டாயப்படுத்த முடியாது.
# சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல்.
# ஆசிரியர்கள் சங்கம் அமைப்பதை தடுக்க முடியாது - தமிழக அரசு பதில் மனுவில் தகவல்.

Friday, August 11, 2017

CPS : பங்களிப்பு ஓய்வூதியத்திற்கு 7.8 சதவீத வட்டி

பங்களிப்பு ஓய்வூதியதிட்டத்தில், பிடித்தம் செய்யப்பட்ட
தொகைக்கு, 7.8 சதவீத வட்டி நிர்ணயம் செய்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில், தற்போது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்த திட்டத்தில், ஜூன், 30 வரை, பிடித்தம் செய்யப்பட்டுள்ள தொகைக்கு, ஜூலை, 1 முதல், செப்., 30 வரை, 7.8 சதவீதம் வட்டியை, அரசு நிர்ணயம் செய்து உள்ளது.

Monday, August 7, 2017

தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற கலந்தாய்வு

PGT,HSHM TO HSSHM PROMOTION COUNSELLING ANNOUNCED - அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற கலந்தாய்வு 28.07.2017 அன்று காலை 9.00 மணிக்கு இணையதளம் வழியாக அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலங்களில் நடைபெற உள்ளது.