ஜாக்டோ போராட்டத்தில் கலந்துகொள்ள ஆசிரியர்கள் சென்று விட்டதால், அரசு பள்ளியில் கிராமப்புறத்தைச் சேர்ந்த வேலையில்லா பட்டதாரிகள், மாணவர்களுக்கு பாடம் நடத்தினர்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே கொட்டப்பட்டி கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 10-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இந்த பள்ளியில் கொட்டப்பட்டி, மாயாண்டிபட்டி, வரதராஜபுரம், கதிர்நரசிங்கபுரம் ஆகிய கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.
இந்நிலையில், தேனியில் நேற்று நடைபெற்ற ஜாக்டோ அமைப்பினரின் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக பள்ளி யைத் திறந்துவைத்துவிட்டு, தலைமை ஆசிரியர் உட்பட ஆசிரியர்கள் அனைவரும் சென்று விட்டனர். இதன் காரணமாக தற்கா லிகமாக மாவட்டம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் பகுதிநேர மற்றும் சிறப்பு ஆசிரியர்கள் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டன.
ஆனால், இந்த பள்ளியில் ஆசிரியர்கள் யாரும் நியமிக்கப்படவில்லையென கூறப்படுகிறது. பள்ளிக்கு வந்த மாணவ, மாணவியர் ஆசிரியர்கள் இல்லாததால் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த கொட் டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வேலையில்லா பட்டதாரிகள் 9 பேர், மாணவர்களின் கல்வி பாதிக் கப்படக் கூடாது என்பதற்காக, வகுப்பறைகளுக்குச் சென்று மாணவ, மாணவியருக்கு பாடம் நடத்தினர்.
பள்ளியில் ஆசிரியர்கள் இல்லாதது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
#இதேபோன்று மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் ,தேர்தல் பணிகள் போன்றவற்றிற்கு வேலையில்லா பட்டதாரிகளை பயன்படுத்தினால், அவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்
ஆசிரியர்களும் பணி பளு குறைந்து மாணவர்களுக்கு கற்பித்தலில் மட்டும் ஈடுபட்டு கல்வித்தரம் உயரும்..
No comments:
Post a Comment