Saturday, February 20, 2016

பொதுத்தேர்வு பணிகள்; ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க தடை

ஆசிரியர்களின் போராட்டத்தால், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு பணிகள் முடங்கி உள்ளன. இதனால், தனியார் பள்ளி ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

பிப்., 25ல் பேரணி&'ஜாக்டோ&' ஆசிரியர் கூட்டுக்குழுவின் உயர்மட்டக் குழுபட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச் செயலர் பேட்ரிக் ரைமண்ட் மற்றும் தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலர் ரங்கராஜன் தலைமையில்இன்று கூடிமாவட்ட தலைநகரங்களில் பேரணிபிப்., 25ல் சென்னையில் கோட்டை நோக்கி பேரணி போராட்டத்தை அறிவித்துள்ளது.
பிப்., 26ம் தேதி முதல், 3.5 லட்சம் ஆசிரியர்கள்ஸ்டிரைக் அறிவித்து உள்ளனர். இதனால்கல்வித் துறையினர் மற்றும் தேர்வுத் துறையினர் கடும் அதிர்ச்சியடைந்து உள்ளனர். நிலைமையை சமாளிக்க பொதுத்தேர்வில்தேர்வு மையங்கள் அமைக்கும் பணி முடிந்துள்ளது. தேர்வு மைய மற்றும் தேர்வு அறை கண்காணிப்பாளர்கள்விடைத்தாள் மையம் பாதுகாப்புவினாத்தாள் பாதுகாப்பாளர்கள்பறக்கும் படை அமைத்தல்நிலையான கண்காணிப்பு படை அமைத்தல் எனபல பணிகள் நடக்க வேண்டியுள்ளது. இவைஆசிரியர்களின் போராட்டத்தால் முடங்கியுள்ளன.
எனவேநிலைமையை சமாளிக்கதனியார் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பகுதிநேர ஆசிரியர்களை பயன்படுத்தலாம் எனஅதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அதனால்தனியார் பள்ளி ஆசிரியர்கள் யாரும் விடுப்பு எடுக்கக் கூடாது எனதனியார் பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment