திருவண்ணாமலையில், அரசு பள்ளிகளில் தாமதமாக வந்த, ஒன்பது ஆசிரியர்களுக்கு கல்வித்துறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், கல்வியில் மிகவும் பின்தங்கியுள்ளது. எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2பொதுத்தேர்தவில் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க இந்தாண்டு பல்வேறு நடவடிக்கைகளை கல்வித்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பொன்குமார், கல்வித்துறை அதிகாரிகள் நேற்று காலை, 9 மணி அளவில் திருவண்ணாமலையில் உள்ள சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது இறைவணக்கம் முடிந்து அரை மணி நேரம் கழித்து, ஒன்பது ஆசிரியர்கள் பள்ளிக்கு தாமதமாக வந்தனர். இதையடுத்து அவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என,அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment