
Tuesday, October 8, 2019
அரசுப்பள்ளி ஆசிரியர்களின் பிள்ளைகள் அரசுப்பள்ளியில் பயில்கிறார்களா? அனைத்து ஆசிரியர்களும் பதிலளிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
அரசுப்பள்ளி ஆசிரியர்களின் பிள்ளைகள் அரசுப்பள்ளியில் பயில்கிறார்களா? என்பதை அறியும் நோக்கில், அதுகுறித்து அனைத்து ஆசிரியர்களும் பதில் தர பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் பிள்ளைகள் பற்றிய விவரங்களை பள்ளிக்கல்வித்துறை கேட்டுள்ளது. கல்வித்தகவல் மேலாண்மை இணையதளத்தில்(EMIS), அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளின் விவரங்களை உள்ளீடு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்காக EMIS இணையதளத்தில் Teachers Children details என்ற புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.
குறுவள மைய தலைமை ஆசிரியர்கள் தங்கள் கீழ் இணைக்கப்பட்டுள்ள அனைத்து பள்ளிகளின் தரத்தினை மேம்படுத்தும் வகையில் செயல்பட வேண்டும் - CEO
புதுக்கோட்டை,செப்.5 :ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநில திட்ட இயக்குநரின் செயல்முறையின் படியும் புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் மேல்நிலை,உயர்நிலைப் பள்ளியினை குறுவளமையமாக கொண்டு ஒன்றிய அளவில் தொடக்க ,நடுநிலை,உயர்நிலைப் பள்ளிகளை இணைத்து புதிய குறுவளமையமாக மாற்றி அமைக்கப்பட்டதை தொடர்ந்து குறுவளமைய தலைமைஆசிரியர்கள் ,வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் ( பொறுப்பு) குறுவள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள் ஆகியோருக்கு கல்வி மேம்பாட்டு பணியினை மேற்கொள்ளுதல் குறித்த ஆலோசனைக் கூட்டம் புதுக்கோட்டை அருள்மிகு பிரகதம்பாள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள தேர்வுக் கூட அரங்கில் நடைபெற்றது.
கற்பித்தல் பணிகளை மேம்படுத்த அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பணியிடை பயிற்சி: அக்டோபர் 14-ம் தேதி தொடங்கும் என கல்வித் துறை தகவல் ( அனைவரும் ஸ்மார்ட் போன் வைத்திருக்க வேண்டும் )
கற்பித்தல் பணிகளை மேம் படுத்த அரசுப் பள்ளி ஆசிரியர் களுக்கு 5 நாட்கள் பணியிடை பயிற்சி வழங்கி அதன் முடிவில் சிறப்பு தேர்வு நடத்தப்பட உள்ளது.
அரசுக்கு ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை 'தாமதமாகும் ஆசிரியர் கலந்தாய்வு
மாணவர்களின் நலன் கருதி பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியர் இடமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும் என ஆசிரியர் சங்கங்கள் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன.
Subscribe to:
Posts (Atom)

