Saturday, September 26, 2015

வருங்கால வைப்பு நிதி பராமரிப்பு!


1.6.1981 முதல் ஊராட்சி ஒன்றியங்களின் கீழ் செயல்பட்டு வந்த தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் அரசுப் பள்ளிகளாக ஈர்த்துக் கொள்ளப்பட்டன. இதனைத் தொடர்ந்து தொடக்க மற்றும்
நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் அரசுப் பணியில் இணைக்கப்பட்டனர்.ஏற்கனவே அரசுப் பணியில் இருந்து வரும் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் வருங்கால வைப்பு நிதி மாநில கணக்காயர் அலுவலகத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அரசுப் பணியில் இணைக்கப்பட்ட தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களின் வருங்கால வைப்பு நிதி மட்டும் அரசுத் தகவல் மையத்தின் கட்டுப்பாட்டிலேயே தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருகிறது. இவ்வாசிரியர்கள் தங்களது வருங்கால வைப்பு நிதி கணக்கினை மாநில கணக்காயர் அலுவலகத்தில், பராமரிக்க வேண்டுமென்று அரசுக்கு நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இக்கோரிக்கையினை ஏற்று, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 31.3.2003-க்கு முன்னர் பணி நியமனம் பெற்று பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களின் வருங்கால வைப்பு நிதிக் கணக்குகள் அரசு தகவல் தொகுப்பு மையத்திலிருந்து நடப்புக் கல்வி ஆண்டு முதல் மாநிலக் கணக்காயர் அவர்களின் பராமரிப்பில் கொண்டு வரப்படும். இதன் மூலம் சுமார் 1 லட்சத்து 19 ஆயிரம் ஆசிரியர்கள் பயனடைவர் .

தமிழகம் முழுவதும் உபரி ஆசிரியர்கள் கணக்கெடுப்பு :

 ஆசிரியர்கள் கலக்கம்
சென்னை : தமிழகம் முழுவதும் அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால், ஆசிரியர்கள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில், 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளும், 5,000க்கும் மேற்பட்ட உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளும் உள்ளன. பள்ளிகளில், பணிநிரவல் நடத்துவதற்காக, 1 முதல் 5ம் வகுப்பு வரை 1:30, 6 முதல் 8ம் வகுப்பு வரை 1:35 என்ற ஆசிரியர் - மாணவர் விகிதத்தில் கணக்கெடுப்பு செய்யப்பட்டு வருகிறது. இவற்றில், உபரி ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது தெரியவந்துள்ளது. அரசு உதவி பெறும் பள்ளிகளில் உபரி ஆசிரியர் பணியிடங்கள் அதிகரித்து கொண்டே வருகிறது. மாதந்தோறும் பல லட்சம் சம்பளம் வழங்கப்பட்டு வருவதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. கிராம மற்றும் நகர பகுதிகளில் அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகளை போன்று உதவி பெறும் பள்ளிகளும் இயங்கி வருகின்றன. அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் குறைந்து வருகிறது. இதனால் ஆசிரியர் பணியிடம் உபரி அதிகரித்து கொண்டே வருகிறது. அரசு பள்ளியில் உபரியாக இருக்கும் ஆசிரியர்கள் ஆண்டுதோறும் கவுன்சலிங் மூலம் மாற்றப் படுகின்றனர்.
ஆனால், உதவி பெறும் பள்ளிகளில் பணி மாறுதல் பல ஆண்டுக்கும் மேல் நடத்தப் படாமல் உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினமும் நேற்றும் உதவி கல்வி அலுவலர், வட்டார வளமைய அலுவலர் ஆகியோர் தலைமையில் தமிழகம் முழுவதும் அனைத்து அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் இருக்கும் உபரி ஆசிரியர்களின் எண்ணிக்கையை தெரிந்து கொள்வதற்காக ஆய்வு மேற்கொண்டுள்ளனர். மேலும், சில அரசு பள்ளிகளிலும் இந்த ஆய்வு நடைபெற்றுள்ளது. தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு செல்லும் இந்த அதிகாரிகள், வகுப்புகளில் இருக்கும் மாணவர்களை எண்ணுவதுடன், அசிரியர்கள் எண்ணிக்கை மற்றும் தேவைக்கு அதிகமாக உபரியாக இருக்கும் ஆசிரியர்களின் எண்ணிக்கையை கணக்கெடுத்து வருகின்றனர். அதிகாரிகளின் இந்த திடீர் ஆய்வு அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் பல ஆண்டுகளாக பணிமாறுதல் இல்லாமல் பணியாற்றிய உபரி ஆசிரியர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆசிரியர் மாணவர் விகிதம்
அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் தொடக்க பள்ளிகளில் ஒன்று முதல் 60 மாணவர்கள் இருந்தால் 2 ஆசிரியர், 61 முதல் 90 வரை மூன்று, 91 முதல் 120 வரை 4, 121 முதல் 200 வரை 5 ஆசிரியர்கள், அதன்பிறகு ஒவ்வொரு 50 மாணவர்களுக்கும் ஒரு கூடுதல் ஆசிரியர் என

தமிழகம் முழுவதும் உபரி ஆசிரியர்கள் கணக்கெடுப்பு : ஆசிரியர்கள் கலக்கம்


சென்னை : தமிழகம் முழுவதும் அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால், ஆசிரியர்கள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில், 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளும், 5,000க்கும் மேற்பட்ட உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளும் உள்ளன. பள்ளிகளில், பணிநிரவல் நடத்துவதற்காக, 1 முதல் 5ம் வகுப்பு வரை 1:30, 6 முதல் 8ம் வகுப்பு வரை 1:35 என்ற ஆசிரியர் - மாணவர் விகிதத்தில் கணக்கெடுப்பு செய்யப்பட்டு வருகிறது. இவற்றில், உபரி ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது தெரியவந்துள்ளது. அரசு உதவி பெறும் பள்ளிகளில் உபரி ஆசிரியர் பணியிடங்கள் அதிகரித்து கொண்டே வருகிறது. மாதந்தோறும் பல லட்சம் சம்பளம் வழங்கப்பட்டு வருவதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. கிராம மற்றும் நகர பகுதிகளில் அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகளை போன்று உதவி பெறும் பள்ளிகளும் இயங்கி வருகின்றன. அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் குறைந்து வருகிறது. இதனால் ஆசிரியர் பணியிடம் உபரி அதிகரித்து கொண்டே வருகிறது. அரசு பள்ளியில் உபரியாக இருக்கும் ஆசிரியர்கள் ஆண்டுதோறும் கவுன்சலிங் மூலம் மாற்றப் படுகின்றனர்.
ஆனால், உதவி பெறும் பள்ளிகளில் பணி மாறுதல் பல ஆண்டுக்கும் மேல் நடத்தப் படாமல் உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினமும் நேற்றும் உதவி கல்வி அலுவலர், வட்டார வளமைய அலுவலர் ஆகியோர் தலைமையில் தமிழகம் முழுவதும் அனைத்து அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் இருக்கும் உபரி ஆசிரியர்களின் எண்ணிக்கையை தெரிந்து கொள்வதற்காக ஆய்வு மேற்கொண்டுள்ளனர். மேலும், சில அரசு பள்ளிகளிலும் இந்த ஆய்வு நடைபெற்றுள்ளது. தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு செல்லும் இந்த அதிகாரிகள், வகுப்புகளில் இருக்கும் மாணவர்களை எண்ணுவதுடன், அசிரியர்கள் எண்ணிக்கை மற்றும் தேவைக்கு அதிகமாக உபரியாக இருக்கும் ஆசிரியர்களின் எண்ணிக்கையை கணக்கெடுத்து வருகின்றனர். அதிகாரிகளின் இந்த திடீர் ஆய்வு அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் பல ஆண்டுகளாக பணிமாறுதல் இல்லாமல் பணியாற்றிய உபரி ஆசிரியர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆசிரியர் மாணவர் விகிதம்
அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் தொடக்க பள்ளிகளில் ஒன்று முதல் 60 மாணவர்கள் இருந்தால் 2 ஆசிரியர், 61 முதல் 90 வரை மூன்று, 91 முதல் 120 வரை 4, 121 முதல் 200 வரை 5 ஆசிரியர்கள், அதன்பிறகு ஒவ்வொரு 50 மாணவர்களுக்கும் ஒரு கூடுதல் ஆசிரியர் என வரையறை செய்யப்பட்டுள்ளது.

அக்.,8 ம் தேதி வேலை நிறுத்த போராட்டம்: 'ஜாக்டோ' ஆசிரியர் கூட்டுகுழு அறிவிப்பு


மேட்டூர்: கோரிக்கை நிறைவேற்றக்கோரி அக்., 8 ம் தேதி தமிழகம் முழுவதும், 'ஜாக்டோ' சார்பில் அரசு பள்ளி ஆசிரியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
கடந்த, 2003ல் கோரிக்கை நிறைவேற்றக்கோரி தமிழகம் முழுவதும் அரசு பள்ளி ஆசிரியர்கள், ஜேக்டோ-ஜியோ என்ற கூட்டு கமிட்டி அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் காரணமாக மாணவர்கள் படிப்பு பாதித்ததால், 1.5 லட்சம் ஆசிரியர்களை, அரசு கைது செயததுடன், 999 ஆசிரியர்கள், சங்க நிர்வாகிகள் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். பரபரப்பை ஏற்படுத்திய இந்த போராட்டம் நடத்தி, 12 ஆண்டுக்கு பின் மீண்டும், கடந்த பிப்ரவரி மாதம் தமிழகத்தை சேர்ந்த, 32 ஆசிரியர் சங்கங்கள் ஒன்றிணைந்து, 'ஜாக்டோ' (ஜாயின் ஆக்ஷன் கமிட்டி) என்ற கூட்டு குழுவை துவங்கினர். பின்னர், ஆறாவது ஊதிய குழு முரண்பாடுகளை களைய வேண்டும், ஆசிரியர்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்பன உள்பட, பல்வேறு கோரிக்கையை நிறைவேற்றக்கோரி, கடந்த சில மாதங்களாக, உண்ணாவிரதம், பேரணி, ஆர்ப்பாட்டம் என, அரசின் கவனத்தை ஈர்க்க பல்வேறு போராட்டங்களை நடத்தினர். எனினும், கோரிக்கை தொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்காததால் அடுத்த கட்ட போராட்டத்துக்கு, 'ஜாக்டோ' தயாராகி வருகிறது.
இதுகுறித்து 'ஜாக்டோ' சேலம் மாவட்ட தொடர்பாளர் பாரி கூறியதாவது: ஜாக்டோ குழுவின் சேலம் மாவட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், 22 சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், கோரிக்கை நிறைவேற்றக்கோரி, மாநிலம் முழுவதும் அக்., 8ம் தேதி, ஆசிரியர்கள் ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Thursday, September 24, 2015

விடுமுறை நாளிலும் கட்டாய பணிபள்ளிக்கல்வி ஊழியர்கள் அவதி


அரசு விடுமுறை நாட்களிலும், அலுவலகம் வரச் சொல்லி கட்டாயப்படுத்துவதால், ஊழியர்களுக்கு மன அழுத்தம் அதிகரித்துள்ளதாக, பள்ளிக் கல்வி அலுவலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
தமிழக பள்ளி கல்வித் துறையில், 20க்கும் மேற்பட்ட இயக்குனரக மற்றும் இணை இயக்குனர் அலுவலகங்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம், தொடக்க கல்வி அலுவலகம் மற்றும் மத்திய அரசின் கல்வி திட்ட அலுவலகங்கள் உள்ளன. இவற்றிலும், பள்ளிகளிலும், 15 ஆயிரம் நிர்வாக அலுவலர்கள் பணியாற்றுகின்றனர்.
இந்த அலுவலகங்களில், சில ஆண்டுகளாக, ஓய்வு பெறுவோர், பணி மாறுதல் பெறுவோர், விருப்ப ஓய்வு பெறுவோர் மற்றும் ஏற்கனவே உள்ள காலியிடங்களில் தேவையான ஆட்கள் நியமிக்கப்படவில்லை. இதனால், தேக்கமடைந்த பணிகளைக் கவனிக்க, அரசு விடுமுறை, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும், ஊழியர்களை அலுவலகத்துக்கு வரச் சொல்லி, அதிகாரிகள் கட்டாயப்படுத்துகின்றனர்.
இதனால் பல ஊழியர்கள், தங்கள் குடும்ப உறுப்பினர்கள், குழந்தைகளிடம் கூட ஒன்றாக இருக்க முடியாமல், மன அழுத்த பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக சென்னையில், இன்று பள்ளி கல்வி நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட மாநாடு, எழும்பூர் மாநில மகளிர் பள்ளியில் நடக்கிறது.
பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வுப் பணிகள், நீதிமன்ற வழக்குகளுக்கு ஆவணம் சேகரித்தல், பள்ளி வாரியாக புள்ளிவிவரம் சேகரித்தல் உள்ளிட்ட பல பணிகள், ஊழியர்கள் மீது கூடுதலாக சுமத்தப்படுகின்றன. எனவே, ஆசிரியர் அல்லாத பணியிடங்களை கூடுதலாக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; விடுமுறை நாட்களில் ஊழியர்கள் அலுவலகம் வர நிர்ப்பந்திக்க கூடாது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Wednesday, September 16, 2015

ஊராட்சி பள்ளி ஆசிரியருக்கு கலெக்டர் சுரேஷ்குமார் பாராட்டு


கடலுார்: விருத்தாசலம் அடுத்த கீழப்பாலையூர் பள்ளி ஆசிரியர் வசந்தனின் பள்ளி வளர்ச்சிப் பணி மற்றும் சமூகப் பணியை பாராட்டி,
கலெக்டர் சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கினார்.
விருத்தாசலம் அடுத்த கீழப்பாலையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 120 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். தலைமை ஆசிரியை தரணி உட்பட 6 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.
இங்கு பணிபுரியும் இடைநிலை ஆசிரியர் வசந்தன், 33; இப்பள்ளியைத் தனியார் பள்ளியைப் போன்று மாற்றியமைக்க தீர்மானித்து, தனது நண்பர்கள் மற்றும் முகநுால் (Face Book) மூலம், முகம் தெரியாத நண்பர்களின் உதவியை நாடினார்.
அவர்கள் உதவியுடன், கடந்த ஓராண்டில் இப்பள்ளி தனியார் பள்ளிக்கு நிகராக மாற்றம் கண்டுள்ளது. 6 லட்சம் ரூபாய் செலவில், குளிர்சாதன வசதியுடன் கூடிய வகுப்பறை, ஸ்மார்ட் கிளாஸ் முறையில் பாடம் நடத்த புரொஜக்டர், ஸ்பீக்கர், மைக், டேபிள், சேர் உள்ளிட்ட தளவாடப் பொருட்கள், சுத்திகரிப்பு சாதனத்துடன் கூடிய குடிநீர் டேங்க் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இதன் மூலம் மாணவ, மாணவியர்கள் ஆர்வமுடன் பள்ளிக்கு வந்து, பாடங்களைக் கற்கின்றனர்.
இவரது பணி குறித்து, கடந்த 11ம் தேதி 'தினமலர்' நாளிதழில், செய்தி வெளியிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, ஆசிரியர் வசந்தனின் பணியைப் பாராட்டி, கலெக்டர் சுரேஷ்குமார் சால்வை அணிவித்து, சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கினார்.

தேர்வு நேரத்தில் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்கு கண்டனம்தேர்வு நேரத்தில் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்கு கண்டனம்


தேர்வு நேரத்தில் எஸ்.எஸ்.ஏ சார்பில் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிப்பதால் மாணவர்களின் கல்வி பாதிப்புக்குளாகி வருவதாக
தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி தெரிவித்துள்ளது.
1-ஆம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு, 19-ஆம் தேதி முதல் பருவத் தேர்வு தொடங்குகிறது. தேர்வு சார்ந்த பயிற்சிகளை மாணவர்களுக்குத் தர வேண்டிய சூழலில், ஆசிரியர்கள் பயிற்சிக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
எஸ்.எஸ்.ஏ. சார்பில் கணித உபகரணப் பயிற்சி, 9, 10, 11-ஆம் தேதிகளில் நடத்தப்பட்டது. இப்பயிற்சி இரண்டாம் கட்டமாக, 14, 15, 16-ஆம் தேதிகளில் நடத்தப்படவுள்ளது. இதேபோல், அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கு 15, 16, 18-ஆம் தேதிகளிலும், ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு 15-ஆம் தேதியும் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. தேர்வு நெருங்கி வரும் நிலையில் பள்ளிகளில் இருந்து ஏராளமான ஆசிரியர்கள் பயிற்சிக்குச் சென்று விடுகின்றனர். இதனால், மாணவர்களின் கல்வி பாதிக்கிறது.
எஸ்.எஸ்.ஏ., சார்பில் ஆண்டுக்கு, 20 நாள்கள் தர வேண்டிய பயிற்சியை ஒரே சமயத்தில் பருவத் தேர்வு நேரத்தில் அவசரமாக அளிப்பது கேள்விக்குறியாக உள்ளது என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி தெரிவித்துள்ளது.

Saturday, September 12, 2015

அனைவருக்கும் கல்வி' திட்டம்: மத்திய அரசு நிதி 50% ஆகக் குறைகிறது


அனைவருக்கும் கல்வி திட்டத்துக்கான (சர்வ சிக்ஷா அபியான்) தனது நிதிப் பங்களிப்பை 65 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக குறைத்துக்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டத்தை செயல்படுத்தத் தேவைப்படும் நிதியில், மத்திய அரசின் பங்களிப்பு 65 சதவீதமாகவும், வடகிழக்கு மாநிலங்கள் நீங்கலாக பிற மாநில அரசுகளின் பங்களிப்பு 35 சதவீதமாகவும் உள்ளது. இந்த நிலையில், இதற்கான தனது நிதிப் பங்களிப்பை 50 சதவீதமாக குறைத்துக்கொள்ள மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
14-ஆவது நிதி ஆணைத்தின் பரிந்துரைப்படி, மாநிலங்களுக்கு அதிக அளவு வரிகளைப் பகிர்ந்தளிக்க வேண்டியுள்ளதைக் கவனத்தில்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
மத்திய அரசின் இந்த முடிவுக்கு ஒடிஸா உள்ளிட்ட மாநிலங்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளன.
அனைவருக்கும் கல்வி திட்டத்துக்கு, கடந்த 2014-15ஆம் நிதியாண்டில் மத்திய அரசு ரூ.27,758 கோடி ஒதுக்கிய நிலையில், நிகழ் நிதியாண்டில் இந்த நிதி ரூ.22,000 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தகக்கது

Saturday, September 5, 2015

ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பட்டதாரி ஆசிரியர் பணி


ஆசிரியர் பயிற்றுநர்கள் 500 பேருக்கு பணிமூப்பு அடிப்படையில், பட்டதாரி ஆசிரியர் பணி மாறுதல் வழங்க அரசு முடிவெடுக்க வேண்டும்,' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.அனைத்துவளமைய பட்டதாரி ஆசிரியர் முன்னேற்ற சங்க பொதுச்செயலர் ராஜ்குமார் தாக்கல் செய்த மனு:
அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் (எஸ்.எஸ்.ஏ.,) கீழ் 4582 பேர் மாவட்ட மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள், வட்டார வளமைய பயிற்றுநர்களாக பணிபுரிகின்றனர்.தமிழக அரசு 2006 ல்,' ஆண்டுதோறும் 500 வட்டார வளமைய பயிற்றுநர்கள் பணி மூப்பு அடிப்படையில் அரசு பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கப்படுவர்,' என தெரிவித்தது. 2006 முதல் 2012 வரை அந்நடைமுறை பின்பற்றப்பட்டது. 2012--13 ல் 115 வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் மட்டுமே, பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். அரசாணைப்படி ஆண்டுக்கு 500 வட்டார வளமைய பயிற்றுநர்களை பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும். 385 வட்டார கண்காணிப்பாளர்களை முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக நியமித்தது தவறு. எனவே, 2012--14 வரை 885வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்களை, பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்க உத்தரவிட வேண்டும். பட்டதாரி ஆசிரியர்களை நேரடியாக நியமிக்க ஆசிரியர் தேர்வுவாரியம் 2014 ஜூலை 14 ல் வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு, ராஜ்குமார் மனு செய்திருந்தார்.
தனி நீதிபதி,' 885 வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்களை, பட்டதாரி ஆசிரியர்களாக நியமிப்பது பற்றி பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்,' என 2014 ல் உத்தரவிட்டார்.இதை எதிர்த்து பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் மேல்முறையீடு செய்தார்.நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், ஜி.சொக்கலிங்கம் கொண்ட அமர்வு உத்தரவு: ஆசிரியர் பயிற்றுநர்கள் 500 பேருக்கு பணிமூப்பு அடிப்படையில்,2015--16 ல்பட்டதாரி ஆசிரியர்களாக பணி மாறுதல் வழங்க அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளோம்;ஒப்புதல் கிடைத்ததும் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பள்ளிக் கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் அரசு 6 வாரங்களில் தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றனர். ராஜ்குமார் தரப்பு வழக்கறிஞர் சண்முகராஜா சேதுபதி ஆஜரானார்.

ஆசிரியர் என்பவர் யார்? அவரின் கடமை எப்படிப்பட்டது?


ஆசிரியர் என்பது பணி அல்ல, ஒரு தொண்டு. மாணவர்களின் அறியாமை எனும் இருளை நீக்கி அவர்களது வாழ்வில் ஒளி ஏற்றுகின்றனர் ஆசிரியர்கள். எழுத்தறிவித்தவன் இறைவன், மாணவர்கள் கல் என்றால், ஆசிரியர்கள் சிற்பிகள் போன்ற பொன்மொழிகள் ஆசிரியர்களுக்கு புகழ் சேர்க்கின்றன.
ஒரு நாட்டின் தலைவிதி வகுப்பறைகளில் தீர்மானிக்கப்படுகிறது என்பது நூறு சதவீதம் உண்மை. தாய், தந்தையை விட, ஆசிரியரிடம் தான் ஒரு குழந்தை அதிக நேரம் செலவழிக்கிறது. எனவேதான், ஆசிரியர்கள் இரண்டாவது பெற்றோர் என அழைக்கப்படுகின்றனர். தன்னிடம் படிக்கும் மாணவர்களை, சமுதாயத்துக்கு ஏற்ற வகையில் மனிதனாக மாற்ற வேண்டிய கடமை ஆசிரியர்களுக்கு உண்டு. மாணவனுக்கு சமூகத்தில் கிடைக்கும் வெற்றிதான் கற்பித்த ஆசிரியரின் வெற்றி.
உலகில் ஆசிரியர் தினம், வெவ்வேறு தேதிகளில் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் ஆசிரியர் தினம், மறைந்த ஜனாதிபதி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப். 5ம் தேதி கொண்டாடப்படுகிறது. ஆசிரியர்களின் பொறுப்பை உணர்த்தும் விதத்திலும், ஆசிரியர்களுக்கு மாணவர்கள் மரியாதை அளிக்க வேண்டும் என்பதையும் இத்தினம் வலியுறுத்துகிறது.
சிறந்த ஆசிரியரின் பண்புகள் மாணவர்களை ஈர்ப்பது மட்டுமன்றி, அவர்களது மனதில் அப்படியே பதிகிறது. ஆசிரியரே மாணவனுக்கு முன்மாதிரியாக இருக்கிறார். தன்னலமற்ற, தியாக மனப்பான்மை கொண்ட ஆசிரியரால்தான், சிறந்த மாணவ சமுதாயத்தை உருவாக்க முடியும்.
தோன்றியது எப்படி: சிறந்த கல்வியாளராகவும், தத்துவமேதையாகவும் திகழ்ந்த ராதாகிருஷ்ணன் 1962, மே 13ம் தேதி இந்தியாவின் இரண்டாவது ஜனாதிபதியாக பதவியேற்றார். அவரது பிறந்த நாளை கொண்டாட வேண்டுமென அவரது மாணவர்கள் அனுமதி கேட்டனர். அதற்கு அவர், "தனது பிறந்த நாளை தனியாக கொண்டாடுவதை விட, அதை ஆசிரியர் தினமாக கொண்டாடினால் தனக்கு பெருமை" எனக் கூறினார். ஆசிரியர் தொழிலில் தனக்கு இருந்த ஈடுபாடு காரணமாக அவர் இவ்வாறு கூறினார்.
இதன் காரணமாக அவரது பிறந்த தினம் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி கலாம் "சிறந்த ஆசிரியர் என்பவர் சிறப்பாக கற்பிப்பவர் மட்டுமல்ல, கற்பிக்கும் தொழிலை நேசிப்பவராக இருக்க வேண்டும்; அவரால் தான் மாணவர்களின் மனதில் நன்னெறிகளை வளர்க்க முடியும்" என்றார்.
ஆசிரியரும் ஒரு மாணவரே...
தற்போது ஆசிரியர் - மாணவர் உறவில் பல பிரச்னைகள் எழுகின்றன. ஆசிரியர் மற்றும் மாணவர்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட்டால் விரும்பத்தகாத சம்பவங்களை தடுக்கலாம். பட்டதாரி ஆசிரியரை விட, ஆரம்பப்பள்ளி ஆசிரியரின் பணி சிறப்பானது. ஏனெனில், குழந்தைகளுக்கு கல்வி அளிப்பது எளிதான விஷயமல்ல.
மற்ற பணிகளைப்போல, ஆசிரியர் பணியில் சாதித்து விட முடியாது. பொறுமை, அர்ப்பணிப்பு, கற்றுக்கொள்ளும் ஆர்வம் இருந்தால்தான், தரமான கல்வியை அளிக்க முடியும். மாணவரைப் போல, ஆசிரியரும் அறிவை பெருக்கிக்கொள்ள தயங்கக் கூடாது. ஆண்டுதோறும் ஆசிரியர் தினத்தன்று நாடு முழுவதும் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு ஜனாதிபதியே விருது வழங்கி கவுரவிக்கிறார். இது ஆசிரியர்களுக்கு கிடைக்கும் பெரிய கவுரவம்.