Monday, February 1, 2016

போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு 'சம்பளம் கட்'

ஆசிரியர்கள் போராட்டத்தால் பள்ளிகள் மூடக்கூடாது, முழுமையாக திறந்து செயல்பட வேண்டும் என்பதில் பள்ளிக் கல்வித்துறை தீவிர கவனம் செலுத்தியது
.
அதன் அடிப்படையில் எடுத்த நடவடிக்கைகள் குறித்து பள்ளிக்கல்வி துறை இயக்குனர் எஸ்.கண்ணப்பன், தொடக்க கல்வி இயக்குனர் இளங்கோவன் ஆகியோர் கூறியதாவது:–
சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடந்த ஆசிரியர்கள் போராட்டத்தால் மாணவர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. முதல் நாளில் 22 ஆயிரம் ஆசிரியர்களும், 2–வது நாளில் 16 ஆயிரத்து 930 ஆசிரியர்களும் போராட்டத்தில் பங்கேற்று உள்ளனர்.
இன்றைய போராட்டத்தில் ஆசிரியர்கள் கூடுதலாக பங்கேற்க கூடும் என்பதால் முன்எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அந்தந்த மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் மூலம் பள்ளிகளை பாதுகாப்புடன் திறக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
ஆசிரியர் வராத பள்ளிகளில் மாற்று ஆசிரியர்கள், சத்துணவு பணியாளர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள், ஆசிரியர் பயிற்சி நிறுவன பயிற்சியாளர்கள் மூலம் பள்ளிகள் திறக்கப்பட்டன. தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மட்டுமே அதிகளவு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. உயர்நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளிகளில் போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் தவிர மற்ற ஆசிரியர்களை கொண்டு வகுப்புகள் நடத்தப்பட்டன.
இன்று வேலைக்கு வராத ஆசிரியர்களுக்கு ‘‘நோ ஒர்க் நோ பே’’ என்ற முறையில் சம்பளம் பிடித்தம் செய்யப்படும். மேலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து அரசு தான் முடிவு செய்யும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment