பள்ளி தலைமையாசிரியர்களுக்கு வினியோகம்
பெற்றோர்கள் எளிதாக தொடர்பு கொள்ளவும், தலைமையாசிரியர்களுக்கும், கல்வித்துறைக்கும் இடையே தகவல் பரிமாற்றத்தை எளிதாக்கவும், திருப்பூர் மாவட்ட அரசு பள்ளி தலைமையாசிரியர்களுக்கு கல்வித்துறையின் சார்பில் 'சியுஜி' மொபைல் எண்கள் வழங்கப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்களின் பெற்றோர், கல்வித்துறை அலுவலர்கள் மற்றும் அவசர உதவிகளுக்கு அழைக்கவும், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், தொலைபேசி இணைப்புகள் உள்ளன.
தற்போது அவற்றில் பெரும்பான்மையானவை 'சிக்னல்' கிடை க்காமல் எந்நேரமும் தொடர்பு கொள்ள முடியாத நிலையிலேயே உள்ளது. மொபைல் போன்களின் பயன்பாடு அதிகரித்துவிட்டதால், இப்பிரச்னை குறித்தும் கல்வித்துறை கண்டுகொள்ளவில்லை. இதனால், பெற்றோர் பள்ளி நிர்வாகத்தை தொடர்பு கொள்வதென்பது சாத்தியமில்லாமலே இருந்தது. தவிர, மலைப்பகுதிகளிலும், கடைக்கோடி கிராமப்புற பள்ளிகளிலும் பணியாற்றும் ஆசிரியர்களை, அவர்கள் நகர் பகுதிக்கு வந்தால் மட்டுமே தொடர்பு கொள்ள முடியும் என்ற நிலையும் இருந்தது.
இதனால், கல்வித்துறையிலிருந்து தெரிவிக்கும் உடனடி தகவல்கள், அந்த பள்ளி நிர்வாகத்துக்கு கொண்டு சேர்ப்பதில் தாமதம் ஏற்படுவது போன்ற சிக்கல்கள் தொடர்ந்தன. இப்பிரச்னைகளை முற்றிலுமாக தடுக்கும் வகையில், தற்போது கல்வித்துறையின் சார்பில் புதிய திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு 'சியுஜி' இணைப்புள்ள தொலைபேசி எண்கள் வழங்கப்பட்டுள்ளன.இச்சேவையை பயன்படுத்த, அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்கத்தின் சார்பில் வழங்கபடும் நிதி ஒதுக்கீட்டை பயன்படுத்திக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment