Thursday, February 11, 2016

'பட்ஜெட் வரை பொறுத்திருங்கள்': அமைச்சர்கள்

ஆசிரியர் சங்கங்களுடன், ஐந்து அமைச்சர்கள், பள்ளி கல்வித்துறை செயலர் சபீதா ஆகியோர் நேற்று தலைமைச் செயலகத்தில் பேச்சு நடத்தினர்.
அப்போது, 'வரும், 16ம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. அதுவரை பொறுத்திருங்கள்; அதற்குள் கோரிக்கைகளை நிறைவேற்றுகிறோம்' என, அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். அதை, ஆசிரியர் சங்கங்கள் ஏற்றுக் கொண்டுள்ளன. 'ஜேக்டோ' நிர்வாகி தியாகராஜன், ''அமைச்சர்கள் கூறியதை ஏற்று, பிப்., 16 வரை பொறுத்திருக்க உள்ளோம். அதன் பிறகும், கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், போராட்டத்தில் ஈடுபடுவோம்,'' என்றார்.

No comments:

Post a Comment