Tuesday, August 30, 2016

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் செய்தியாளர்களை சந்திக்கவோ, அவர்களுக்கு பேட்டி அளிக்கவோ கூடாது - பள்ளிக் கல்வித் துறை உத்தரவு.

செய்தியாளர்களிடம் பேசக் கூடாது: ஆசிரியர்களுக்கு கட்டுப்பாடு

தமிழகத்தைச் சேர்ந்த 23 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது டெல்லியில் செப்.5-ல் நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவர் வழங்குகிறார்.

தமிழகத்தைச் சேர்ந்த 23 ஆசிரியர்கள் தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.அவர்களுக்கு டெல்லியில் செப்டம்பர் 5-ம் தேதி நடைபெறும் ஆசிரியர் தினவிழாவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நல்லாசிரியர் விருதுகளை வழங்கி கவுரவிக்கிறார்.
ஆசிரியர் பணியைப் போற்றும் வகையில் மத்திய அரசு ஆண்டுதோறும் சிறந்த ஆசிரியர்களைத் தேர்வுசெய்து அவர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த விருது, ரூ.50 ஆயிரம் ரொக்கம், வெள்ளிப்பதக்கம், பாராட்டுச்சான்று ஆகியவற்றை உள்ளடக்கியது.கடந்த 2015-ம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருது பட்டியலை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் தொடக்கக்கல்வி பிரிவின் கீழ் 15 ஆசிரியர்களும், மேல்நிலைக் கல்வி பிரிவின் கீழ் 7 பேரும், சிறப்புப்பிரிவின் கீழ் ஒருவரும் என மொத்தம் 23 பேர் தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். டெல்லியில் செப்டம்பர் 5-ம் தேதி நடைபெறும் ஆசிரியர் தினவிழாவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தேசிய நல்லாசிரியர் விருதுகளை வழங்கி கவுரவிக்கிறார்.

தமிழகத்தில் இருந்து தேசிய நல்லாசிரியர் விருது பெறுவோர் விவரம் வருமாறு:

தொடக்கக்கல்வி பிரிவு

1. கே.சயீத் பசீர், தலைமை ஆசிரியர், பாஹீ யத் சலிஹத் தொடக்கப்பள்ளி, வேலூர்.
2. ஏ.பர்னபாஸ், தலைமை ஆசிரியர், ஆர்.சி. நடுநிலைப்பள்ளி, மேலபழங்கூர், சங்கரா புரம், விழுப்புரம்.
3. ஆர்.பாலு, தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கீச்சாங்குப்பம், நாகப்பட்டினம்.
4. ஜி.சத்தியமூர்த்தி, தலைமை ஆசிரியர், சரஸ் வதி அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி, ஏரி ஊத்துக்காடு, வலங்கைமான்,திருவாரூர்.
5. சி.பழனியம்மாள், தலைமை ஆசிரியை, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மீன்சுருட்டி, அரியலூர்.
6. கே.பவுன், தலைமை ஆசிரியை, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, நொச்சிப்பாளை யம், ஆத்தூர், கரூர்.
7. எஸ்.அபிராமி, தலைமை ஆசிரியை, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, ராஜ சூரியமடை, ராமநாதபுரம்.
8. எஸ்.கணேசன், தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கே.உன்னிப்பட்டி, கள்ளிக்குடி, மதுரை.
9. பி.தனலட்சுமி, தலைமை ஆசிரியை, ரங்ககிருஷ்ணன் நடுநிலைப்பள்ளி, வடகரை, பெரியகுளம், தேனி.
10. எஸ்.பொன்னகேசா, தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பேட்டரப்பள்ளி, ஓசூர்.
11. சி. தங்கவேலு, தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பெருந்துறை வடக்கு, ஈரோடு.
12. கே.சந்திரசேகர், தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கன்னந்தேரி, சங்ககிரி, சேலம்.
13. கே.எஸ்.மணி, தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, சோமவாரப்பட்டி- பெதப்பம்பட்டி, உடுமலைப்பேட்டை, திருப்பூர்.
14. கே.கலாவதி, தலைமை ஆசிரியை, அரசு பழங்குடியினர் உறைவிட நடுநிலைப்பள்ளி, கூடலூர், நீலகிரி.
15. எஸ்.தங்கலட்சுமி, தலைமை ஆசிரியை, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, ராமு தேவன்பட்டி, விருதுநகர்.

மேல்நிலைக்கல்வி பிரிவு

1. எஸ்.சரஸ்வதி, தலைமை ஆசிரியை, திரு.அஞ்சுவட்டத்தம்மன் அரசு உயர்நிலைப் பள்ளி, கீழ்வேளூர், நாகப்பட்டினம்.
2. வி.ராஜூ, தலைமை ஆசிரியர், சிஎஸ்ஐ கார்லி மேல்நிலைப்பள்ளி, கிழக்கு தாம்பரம்
3. என்.டி.நடராஜன், தலைமை ஆசிரியர், ஏ.எஸ். அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருக்கோவிலூர், விழுப்புரம்.
4. அருட்சகோதரர் கே.ஜெ.வர்கீஸ், தலைமை ஆசிரியர், மாண்ட்போர்டு ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி, ஏற்காடு.
5. என்.ரமணிசேகர், பட்டதாரி ஆசிரியர், காந்தி நிகேதன் ஜி.வெங்கடாசலபதி மேல்நிலைப்பள்ளி, டி.கல்லுப்பட்டி, மதுரை.
6. ஏ.விஜயகுமார், தலைமை ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, தேவதானம்பட்டி, பெரியகுளம், தேனி.
7. எஸ்.ஞானசேகரன், பட்டதாரி ஆசிரியர், பி.எஸ்.உயர்நிலைப்பள்ளி (வடக்கு), மயிலாப்பூர்.

சிறப்பு பிரிவு

1. எம்.வி.ரவிச்சந்திரன், தலைமை ஆசிரியர் அரசு உயர்நிலைப்பள்ளி, வேலந்தூர், அரூர், தருமபுரி.

கல்வி அலுவலர்கள் பதவி உயர்வு

 மதுரை முதன்மை கல்வி அலுவலகத்தில் கல்வித்துறை அலுவலர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடந்தது.

Monday, August 29, 2016

கட்டாய இடம் மாற்றத்தால் பயனில்லை!

அரசு பள்ளிகளில், கூடுதலாக உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கான கட்டாய இடம் மாற்றம் இன்று முடிகிறது.

Wednesday, August 24, 2016

கட்டாய இடமாற்றம்; ஆசிரியர்கள் பதற்றம்

ஆசிரியர்கள் இடமாறுதல் கவுன்சிலிங், முடிவு கட்டத்தை எட்டியுள்ளது.

Tuesday, August 23, 2016

2,100 ஆசிரியர்களுக்கு விருப்ப இடமாற்றம்

முதுநிலை ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங்கில், இரண்டு நாட்களில், 2,100 பேருக்கு விருப்ப இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

பட்டதாரி ஆசிரியருக்கான கவுன்சிலிங் துவங்கியது

 பட்டதாரி ஆசிரியர்களுக்குமாநில அளவிலான பதவி உயர்வு கவுன்சிலிங்நேற்று துவங்கியது. 

மாணவர்கள் போராட்டத்தினால் ஆசிரியர்கள் இடமாற்றம்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள மாங்கோட்டையில் அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இங்கு முதல் 5ம் வகுப்பு வரை உள்ளது.150க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். 

Friday, August 19, 2016

ஆசிரியர்களுக்கு 2ம் நாளாக பயிற்சி

பள்ளி மாணவர்களின் கற்கும் திறனை மேம்படுத்தமுதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்குமாநில அளவிலான திறன் வளர்க்கும் பயிற்சிஈரோடு சி.எஸ்.ஐ.பள்ளியில்இரண்டாம் நாளாக நேற்று நடந்தது. 

Wednesday, August 17, 2016

மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் ஆகஸ்ட் 20ம் தேதி துவக்கம்!

சேலம் மாவட்ட அரசு உயர்நிலைமேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங் ஆக., 20ம் தேதி தொடங்குகிறது.

ஊர் மாறிய ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு கட்டுப்பாடு

தொடக்கக் கல்வி ஆசிரியர்களில்ஒன்றியம் விட்டு ஒன்றியம் இடமாறுதல் பெற்றவர்களுக்குபணிமூப்பு ஊதிய உயர்வில் மாற்றம் கிடையாது எனஅறிவிக்கப்பட்டு உள்ளது.
அரசு பள்ளி ஆசிரியர்களுக்குஆக., 3 முதல்கவுன்சிலிங் மூலம் விருப்ப இடமாறுதல் வழங்கப்படுகிறது. தொடக்கக் கல்வித் துறை மற்றும் பள்ளிக்கல்வித் துறை எனதனித்தனியாக கவுன்சிலிங் நடக்கிறது. 
இதில்தொடக்கக் கல்வித் துறையில்எட்டாம் வகுப்பு வரை பணியாற்றும் ஆசிரியர்கள்விருப்ப இடமாறுதலில்ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறினால்அவர்களுக்குபணிமூப்பு ஊதிய உயர்வு தனியாக பராமரிக்கப்படாது. அதாவதுஏற்கனவே எந்த ஒன்றியத்தில் பணியாற்றினார்களோஅந்த ஒன்றியத்தில்மூத்தவர்இளையவர் என்ற அடிப்படையில்தான்ஊதிய முரண்பாடு இருக்கும். 
மாறாகபுதிதாக சேர்ந்த ஒன்றியத்திலுள்ள மூத்தவர்இளையவர் பட்டியலை கணக்கிட்டுஅதன்படி,தமக்கு ஊதிய வேறுபாடு களையப்பட வேண்டும் எனகேட்கக் கூடாது எனதொடக்கக் கல்வி இயக்குனர் இளங்கோவன் உத்தரவிட்டு உள்ளார்.

ரத்தாகிறது சமூக அறிவியல் பணியிடம்; ஆசிரியர்கள் எதிர்ப்பு

உபரி ஆசிரியர்கள் பெயரில் சமூகஅறிவியல் பணியிடங்களை ரத்து செய்வதற்கு வரலாறு ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

வேலையில்லா பட்டதாரிகள், ஆசிரியர்கள் 18 லட்சம் பேர்

தமிழகத்தில் கலை, அறிவியல் பட்டம் பெற்ற, 14 லட்சம் பேர் வேலை இல்லாமல் உள்ளனர்; அதேபோல், நான்கு லட்சம் பட்டதாரி ஆசிரியர்களும் வேலைக்காக காத்திருக்கின்றனர்.

Sunday, August 14, 2016

ஆசிரியர்கள் தமிழில் கையெழுத்திட உத்தரவு

ஆசிரியர்கள் தமிழில் கையெழுத்திட வேண்டும்என தொடக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

பள்ளிகளில் மதிய உணவு; ஆசிரியர் சுவைக்க உத்தரவு

பள்ளிகளில் மதிய உணவு திட்ட விதிகளை முறையாக பின்பற்ற அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

’பள்ளி ஆசிரியர்களுக்கு கட்டாய இடமாற்றம் வேண்டும்’

மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, தொடக்கப் பள்ளிகளில், 5ம் வகுப்பு வரை, 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர்; நடுநிலைப் பள்ளிகளில், 35 பேருக்கு ஒரு ஆசிரியர் இருக்க வேண்டும்

சீனியாரிட்டி பட்டியல் வெளியிடாமலேயே பதவி உயர்வு கவுன்சிலிங்!

வரலாறு பாடத்தில் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் சீனியாரிட்டி பட்டியல் வெளியிடாமலேயே, பதவி உயர்வு கவுன்சிலிங்கை பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

அரசு மேல்நிலைப் பள்ளி முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு பதவி உயர்வு மூலம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். இதற்கான கவுன்சிலிங் நடத்துவதற்கு முன்பே ஒவ்வொரு பாடத்திலும் தகுதியான பட்டதாரி ஆசிரியர்களின் சீனியாரிட்டி பட்டியலை வெளியிட வேண்டும். அதில் ஆட்சேபனை இருந்தால் பட்டியல் சரி செய்யப்படும்.

ஆக., 22 ல் முதுநிலை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறுவதற்கான கவுன்சிலிங் நடப்பதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. ஆனால் வரலாறு பாடத்திற்கான சீனியாரிட்டி பட்டியல் இதுவரை வெளியிடப்படவில்லை. இதனால் வரலாறு பட்டதாரி ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்தனர்.

பட்டதாரி ஆசிரியர்கள் கூறுகையில், 'வரலாறு பாடத்தில் சீனியாரிட்டி பட்டியலில் குளறுபடி இருக்க வாய்ப்புள்ளது. அதனால் பட்டியலை வெளியிட கல்வித்துறை மறுத்து வருகிறது,' என்றனர்.

கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகுதியான ஆசிரியர்கள் பட்டியலை இயக்குனரகத்திற்கு அனுப்பி விட்டோம். இயக்குனரகம் தான் சீனியாரிட்டி பட்டியலை வெளியிட வேண்டும்,' என்றார்

Tuesday, August 9, 2016

திரை மூலம் கற்பிக்கும் ஆசிரியர்!

பத்தாம் வகுப்புபிளஸ் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறசொந்த செலவில் திரை மூலம் கற்பித்து வருகிறார்,விருதுநகர் மாவட்டம் திருச்சுழியை சேர்ந்த ஆசிரியர் பி.வில்சன் பிரபாகர். 

நல்லாசிரியர் விருதுக்கு தகுதி பட்டியல் தயாரிக்க சிறப்புக் குழு

நல்லாசிரியர் விருது பெற விண்ணப்பித்துள்ளஆசிரியர்களின் தகுதிகளை ஆராய்ந்துஇறுதி பட்டியல் தயாரித்து பரிந்துரைக்கமாவட்ட அளவிலான சிறப்பு குழுஇன்று ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளது.

மாணவன் முதுகில் அமர்ந்து பாடம் நடத்திய ஆசிரியர்

அரசு பள்ளியில்மாணவனின் முதுகில் அமர்ந்துஆசிரியர் பாடம் நடத்திய சம்பவம்கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம்அன்னுார் அரசு பள்ளி, 7ம் வகுப்பு மாணவன் பிரவீன்குமார். 

Saturday, August 6, 2016

மேல்நிலை பள்ளி ஆசிரியர் கவுன்சிலிங் துவக்க

அரசு உயர்மேல்நிலை பள்ளி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங் இன்று துவங்குகிறது.