Monday, October 19, 2015

ஆசிரியர்களுக்கு சம்பளம் 'கட்


ஆசிரியர் சங்கங்களின் கூட்டுக்குழுவான, 'ஜாக்டோ' சார்பில், 8ம் தேதி, வேலைநிறுத்த போராட்டம் நடந்தது; 1.5 லட்சம் ஆசிரியர்கள் பங்கேற்றனர்; 50 ஆயிரம் பள்ளிகளில், வகுப்புகள் நடக்கவில்லை.போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள், விடுப்பு எடுத்தனர். சில ஆசிரியர்கள், அனுமதி பெற்று போராட்டத்தில் பங்கேற்றனர்.
பெரும்பாலானோர் விடுப்பு கடிதமும் அளிக்காமல், பள்ளிக்கும் செல்லாமல் போராட்டத்தில் பங்கேற்றனர்.இதில், விடுப்பு கடிதம் கொடுக்காத ஆசிரியர்களுக்கு மட்டும், ஒருநாள் சம்பளம் பிடித்தம் செய்ய, கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.

Monday, October 12, 2015

பாலியல் குற்றங்கள் தடுப்புஆசிரியர்களுக்கு பயிற்சி


பள்ளி மாணவர்களை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்க, தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா மாநிலங்களை சேர்ந்த மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது. கடந்த சில மாதங்களாக, பள்ளி மாணவர்கள் பாலியல் தொல்லைகளில் சிக்கி வருவது அதிகரித்து வருகிறது.
மாணவர்களை இதிலிருந்து பாதுகாக்க, தேசிய குழந்தைகள் வளர்ச்சி கூட்டமைப்பு நிறுவனம் சார்பில், பெங்களூருவில் டிச., 1,2ம் தேதிகளில் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. இதன் மூலம் மாணவர்களிடையே பாலியல் குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. அரசு, அரசு உதவி பெறும் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் பயற்சியில் கலந்து கொள்கின்றனர்.

Wednesday, October 7, 2015

ஆசிரியர்களின் கைகளில்அரசு பள்ளிகளின் தரம் - தொடக்கக் கல்வி இணை இயக்குனர் பேச்சு


'அரசு பள்ளிகளின் தரம் ஆசிரியர்களின் கையில் உள்ளது; அவர்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட்டால் தான் மாணவர் கற்றல் திறனின் இலக்கை எளிதில் அடைய முடியும்,'' என, தொடக்கக் கல்வி இணை இயக்குனர் செல்வராஜ் தெரிவித்தார்.
அனைவருக்கும் கல்வித் திட்டம் (எஸ்.எஸ்.ஏ.,) மற்றும் தொடக்க கல்வித் துறை சார்பில் மண்டல ஆய்வுக் கூட்டம் மதுரையில் நேற்று நடந்தது. முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி வரவேற்றார். எஸ்.எஸ்.ஏ., திட்ட இணை இயக்குனர் நாகராஜமுருகன் முன்னிலை வகித்தார்.
இணை இயக்குனர் செல்வராஜ் இதை துவக்கி வைத்து பேசுகையில், ''தொடக்கக் கல்வியில், தமிழ் மற்றும் ஆங்கில பாடங்களில் வாசித்தல்,
எழுதுதல் திறன் மற்றும் கணிதம், அறிவியலில் அடிப்படை அறிவை வளர்ப்பது கூட்டத்தின் நோக்கம். ஆசிரியர்கள் தங்களின் அர்ப்பணிப்பை அளித்தால் தான் மாணவர் அறிவுத் திறனை பெற முடியும். அரசு பள்ளிகளின் தரம் ஆசிரியர்களின் கையில் உள்ளது. பொறுப்பை உணர்ந்து செயல்பட்டால், மாணவர் கற்றல் திறன் இலக்கை அடைய முடியும்,'' என்றார்.
மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ராஜாமணி, ஆர்.சி., பள்ளிகளின் கண்காணிப்பாளர் ஜோசப், எஸ்.எஸ்.ஏ., திட்ட கூடுதல் முதன்மை கல்வி அலுவலர்கள் சுப்பிரமணியன் (திண்டுக்கல்), ஜெயலட்சுமி (தேனி) மற்றும் உதவித் தொடக்க கல்வி அலுவலர்கள் பங்கேற்றனர்.

போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு 1 நாள் சம்பளம் கட்!!


காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் வியாழக்கிழமை நடைபெறும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டால் 1 நாள் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொகுப்பூதியத்தில் பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களுக்கு பணியில் சேர்ந்தநாள் முதல் பணி வரன்முறை செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். 2011 சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தில் வாக்குறுதி அளித்ததற்கு ஏற்ப தமிழக அரசுதன்பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை நீக்கம் செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (ஜாக்டோ) சார்பில் அக்டோபர் 8-ஆம் தேதி வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
வேலைநிறுத்த போராட்டத்துக்கு ஆதரவு திரட்டி ஜாக்டோ அமைப்பினர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி ஆசிரியர்களுக்கு துண்டுபிரசுரம்விநியோகம் செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் 754 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள், 141 அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகள்,289 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகள், 37 அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளிகள் என மொத்தம் 1,221 பள்ளிகள் இயங்குகின்றன.
இதில் ஓராசிரியர், ஈராசிரியர் பள்ளிகள் உள்ளன.இதனால் வியாழக்கிழமை பள்ளி பணி பாதிக்கும் நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் பா. ரா. விஜயலட்சுமி புதன்கிழமை மாலை வெளியிட்ட செய்தி குறிப்பு:
காஞ்சிபுரம்மாவட்டத்தில் அனைத்து தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் வழக்கம்போல் வியாழக்கிழமை செயல்படும். இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளும் ஆசிரியர்களுக்கு ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்.