Thursday, February 25, 2016

தனியார் பள்ளிகளில் பகுதிநேர பணி; சி.இ.ஓ., எச்சரிக்கை

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள்வேறு தனியார் பள்ளிகளில் பகுதி நேர பணியில் ஈடுபட்டிருந்தால்அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என,மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஞானகவுரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சேலம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஞானகவுரிபள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றிக்கை: 
அரசு பள்ளி ஆசிரியர்கள் சம்பந்தப்பட்ட பள்ளி மாணவர்களின் கல்வி மேம்பாட்டில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். தனியார் பள்ளிகளில் வகுப்பெடுக்க செல்லக்கூடாது எனஅனைவருக்கும் கட்டாயக்கல்விச்சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு பணியாளராக பணிபுரிந்துஅரசு ஊதியம் பெற்றுவரும் நிலையில்தனியார் பள்ளிகளில் பகுதிநேரமாக பணிபுரிவதுஅரசு பணியாளர் நடத்தை விதிகளை மீறிய செயல். 
எனவேசேலம் மாவட்டத்தில் அரசுநகரவைநிதியுதவி பெறும்தொடக்கநடுநிலைஉயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும்தலைமை ஆசிரியர்கள்ஆசிரியரல்லா பணியாளர்கள்,ஆசிரியர்கள் ஆகியோர் தனியார் பள்ளிகளில் பணிபுரிவதாக கண்டறியப்பட்டால்அவர் மீதுகடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment