Tuesday, February 9, 2016

ஜாக்டோ அமைப்பின் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை

09.02.2016 அன்று மாலை தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில் ஜாக்டோ அமைப்பின் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் விவரக் குறிப்புகளை உங்கள் முன்னால் கொண்டுவருகிறோம்

********************************************************************************** பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட அமைச்சர்கள்
----------------------------------------------------------------------------
நிதித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களும் மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அவர்களும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களும் உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் அவர்களும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி அவர்களும் கலந்துகொண்டனர்.
கலந்துகொண்ட இந்திய ஆட்சிப்பணி அலுவலர்கள்
---------------------------------------------------------------------------
மதிப்புமிகு க.சண்முகம் இ.ஆ.ப தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் நிதிதுறை அவர்களும் பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் மதிப்புமிகு த.சபீதா இ.ஆ.ப அவர்களும் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை முதன்மைச் செயலாளர் அவர்களும் மற்றும் தமிழக அரசின் இணைச் செயலாளர்கள்,துணைச் செயலாளர்கள் கலந்துகொண்டனர்.
பங்கேற்றிருந்த ஜாக்டோ பிரதிநிதிகள்
---------------------------------------------------------
ஜாக்டோ அமைப்பின் 21 உயர்மட்டக் குழு உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் பொதுச் செயலாளர் திரு.கோ.முருகேசன் அவர்கள் கலந்துகொண்டார்.
15 அம்ச கோரிக்கைகளை 21 பிரதிநிதிகளும் மிக விரிவாக விளக்கிப் பேசி தீர்வுகாண வேண்டுமென வலியுறுத்தி கேட்டுக்கொண்டார்கள்.2 மணி நேரம் தொடர்ச்சியாக நடைபெற்ற பேச்சுவார்த்தையின் நிறைவுரையில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் உங்கள் கோரிக்கைகளை மிகவும் விளக்கமாக எடுத்துக் கூறினீர்கள்.முதலமைச்சர் அம்மா அவர்களிடம் இவற்றை விவரமாக எடுத்துக்கூறி உங்களுக்கு சாதகமாக நாங்கள் விரைவில் அறிவிப்போம் என்று அவரது கருத்தை பதிவு செய்துள்ளார்.
பேச்சுவார்த்தைக்கு பிறகு கூடிய ஜாக்டோ அமைப்பின் உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் தமிழகத்தின் நிதிநிலை அறிக்கை பிப்ரவரி 16 தாக்கல் செய்ய இருப்பதால் அந்த அறிக்கை வெளியாகும் வரை ஜாக்டோ பொருத்திருந்து பார்க்கலாம்.நிதிநிலை அறிக்கையில் எவ்வித பணப்பயன் அறிவிப்புகளும் இல்லையெனில் ஜாக்டோ மாநிலப் பொதுக்குழு கூடி ஜாக்டோவின் அடுத்தகட்ட முடிவினை அறிவிக்கலாம் என முடிவு செய்துள்ளார்கள்.ஜாக்டோ எடுத்துள்ள முடிவு நிதானமான முடிவாகும்.16 ஆம் தேதிவரை காத்திருப்போம்.
நிதித் துறை அமைச்சரும் நிதித் துறை செயலாளரும் துறை அமைச்சர்களும் துறை செய்லாளர்களும் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டது ஜாக்டோவின் எழுச்சிமிகு மறியல் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும்.
அன்புடன்
வா.அண்ணாமலை
ஐபெட்டோ அகில இந்தியச் செய்லாளர்.

No comments:

Post a Comment