Thursday, February 19, 2015

3 நபர் கமிஷன் பரிந்துரைப்படி
இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பளம் 4 வாரத்துக்குள் பரிசீலிக்க வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு
இடை ஆசிரியர்களுக்கு சம்பளம் நிர்ணயிப்பது குறித்து 4 வாரத்துக்குள் பரிசீலித்து பதில் அளிக்க வேண்டும் அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தில், இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் ஜெ.ராபட் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் 1999ம் ஆண்டுக்கு முன்பு பணி நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்கள், 2009ம் ஆண்டுக்கு முன்பு பணி நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்கள், 2009ம் ஆண்டு ஜூன் மாதத்துக்கு பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு இடையே சம்பள தொகையில் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது.
இந்த நிலையில், மத்திய அரசு 6வது சம்பள கமிஷன் பரிந்துரையின்படி, மத்திய அரசு பள்ளிகளில் பணியாற்றி வரும் இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை சம்பளம் ரூ9,300, தரச்சம்பளம் ரூ.4,200 என்று நிர்ணயம் செய்துள்ளது. இதையடுத்து இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பளத்தை நிர்ணயம் செய்ய தமிழக அரசு 3 நபர் கமிஷன் அமைத்தது. இந்த 3 நபர் கமிஷன், 6வது சம்பள கமிஷன் பரிந்துரைகளின் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பளம் நிர்ணயம் செய்யவேண்டும் என்று தமிழக அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தது.
ஆனால், இந்த அறிக்கையின் அடிப்படையில் சம்பளத்தை மாற்றி அமைக்காமல் தமிழக அரசு மவுனம் காத்து வருகிறது. எனவே, 3 நபர் கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசின் கீழ் செயல்படும் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தை தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த மனு நீதிபதி கே.கே.சசிதரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் வக்கீல் சஞ்சய் காந்தி, மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல் சி.செல்வராஜ் ஆகியோர் ஆஜராகி வாதிட்டார்கள்.
இதை கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது 6வது சம்பள கமிஷன் பரிந்துரை, அதனடிப்படையில் அமைக்கப்பட்ட 3 நபர் கமிஷன் அறிக்கை அடிப்படையில், தமிழக நிதித்துறை செயலர், பள்ளிக்கல்வித்துறை செயலர், தொடக்கப்பள்ளி இயக்குனர் ஆகியோர் 4 வாரத்துக்குள் சட்டப்படி பரிசீலித்து தகுந்த உத்தரவினை பிறப்பிக்க வேண்டும்.
பணிச்சுமையை சமாளிக்க முடியாமல் திணறும் நடமாடும் உளவியல் மைய நிபுணர்கள்
பள்ளி மாணவர்களின் மன அழுத்தம், உளவியல் ரீதியான பிரச்னைகளுக்கு தீர்வுகாணும் பொருட்டு, நடமாடும் உளவியல் ஆலோசனை மையம் தமிழகத்தில், மூன்று ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. 32 மாவட்டங்கள், 10 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மண்டலத்திற்கும் தலா ஒரு உளவியல் ஆலோசகர் வீதம் மொத்தம் 10 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதில், மூன்று பெண்கள், ஏழு ஆண் உளவியல் நிபுணர்கள் உள்ளனர். ஒரு மண்டலத்தில் குறைந்தபட்சம் மூன்று மாவட்டங்களும், அதிகபட்சமாக நான்கு மாவட்டங்களும் அடங்கியுள்ளன. கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களை ஒருங்கிணைத்து, ஒரு மண்டலமாக பிரித்து, மாணவ, மாணவிகளுக்கு உளவியல் ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.
தோல்வியை எதிர்கொள்ளுதல், தேர்வு பயம், உணவு உட்கொள்ளுதல், நேர மதிப்பீடு, மனதை ஒரு நிலைபடுத்துதல், கடினமான கேள்விகளை புரிந்து படித்தல் உள்ளிட்ட பயிற்சிகளும், ஆலேசானைகளும் வழங்கப்பட்டு வருகிறது. கோவை, திருப்பூர், ஊட்டி ஆகிய மாவட்டங்களில், 1000 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
ஒரு கல்வியாண்டிற்கு மொத்தம் 200 வேலைநாட்களே உள்ள நிலையில், 1000 பள்ளிகளுக்கு செல்ல வாய்ப்பே இல்லை. அதிலும், தேர்வு, பள்ளி விழாக் காலங்களில் இப்பணிகள் நிறுத்திவைக்கப்படும். மிகவும் குறைந்த நாட்களில், அதிகமான பள்ளிகளுக்கு செல்லவேண்டி இருப்பதால், மண்டல உளவியல் நிபுணர்கள் திணறி வருகின்றனர்.
அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: தற்போது, திருப்பூர், ஊட்டி பகுதிகளில் நடமாடும் உளவியல் ஆலோசனை மையம் சென்றுள்ளது. கோவை மாவட்டத்திலிருந்து, அவசர அழைப்புகள் சென்றாலும், அம்மாவட்டங்களில் பணிகள் முடிந்த பின்பே வர இயலும். பணி சுமைகளுக்கு மத்தியில், தமிழகம் முழுவதும் மண்டல உளவியல் நிபுணர்கள் திணறி வருகின்னர்.
மாவட்டந்தோறும், ஒரு நடமாடும் உளவியல் ஆலோசனை மையம் அமைத்து, இரண்டு உளவியல் நிபுணர்கள் பணியமர்த்தப்பட வேண்டும். இன்றைய சூழலில், மாணவர்களுக்கு தொடர்ந்து கவுன்சிலிங் கொடுக்க வேண்டியது அவசியம். இவ்வாறு ஆசிரியர் தெரிவித்தார்.
கல்வித்துறை இணை இயக்குனர் மற்றும் நடமாடும் உளவியல் மையங்களின் மாநில ஒருங்கிணைப்பாளர் உஷாராணி கூறுகையில், "மாவட்டந்தோறும், நடமாடும் உளவியல் மையம் அமைக்கப்படலாம். இதுகுறித்து, அரசு மட்டுமே முடிவுசெய்ய இயலும்" என்றார்.
விஸ்வரூபம் எடுக்கும் இடைநிலை ஆசிரியர் ஊதியப்பிரச்சனை
தமிழகத்தில் 1999–ம் ஆண்டுக்கு முன்பு பணி நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்கள், 2009–ம் ஆண்டுக்கு முன்பு பணி நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்கள், 2009–ம் ஆண்டு ஜூன் மாதத்துக்கு பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு இடையே சம்பளம் தொகையில் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது.
இந்த நிலையில், மத்திய அரசு 6–வது சம்பள கமிஷன் பரிந்துரையின்படி, மத்திய அரசு பள்ளிகளின் பணியாற்றி வரும் இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை சம்பளம் ரூ9,300, தரச்சம்பளம் ரூ.4,200 என்று நிர்ணயம் செய்துள்ளது.இதையடுத்து இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பளத்தை நிர்ணயம் செய்த தமிழக அரசு 3 நபர் கமிஷன் அமைத்தது. இந்த 3 நபர் கமிஷன், 6–வது சம்பள கமிஷன் பரிந்துரைகளின் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பளம் நிர்ணயம் செய்யவேண்டும் என்று தமிழக அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தது.ஆனால், இந்த அறிக்கையின் அடிபபடையில் சம்பளத்தை மாற்றி அமைக்காமல் தமிழக அரசு மவுனம் காத்து வருகிறது. எனவே, 3 நபர் கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசின் கீழ் செயல்படும் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தை தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்குள் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி கே.கே.சசிதரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் வக்கீல் சஞ்சய் காந்தி, மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல் சி.செல்வராஜ் ஆகியோர் ஆஜராகி வாதிட்டார்கள்.இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘6–வது சம்பள கமிஷன் பரிந்துரை, அதனடிப்படையில் அமைக்கப்பட்ட 3 நபர் கமிஷன் அறிக்கை அடிப்படையில், தமிழகத்தில் உள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பளத்தை நிர்ணயம் செய்து வழங்கக் கோரி மனுதாரர் அமைப்பு கடந்த 2013–ம் ஆண்டு செப்டம்பர் 10–ந் தேதி கோரிக்கை மனுவை கொடுத்துள்ளார்.எனவே அவரது கோரிக்கை மனுவை தமிழக நிதித்துறை செயலர், பள்ளிக் கல்வித்துறை செயலர், தொடக்கப்பள்ளி இயக்குனர் ஆகியோர் 4 வாரத்துக்குள் சட்டப்படி பரிசீலித்து தகுந்த உத்தரவினை பிறப்பிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
2009 க்குப்பின் பணிநியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு ஊதிய இழப்பை சரி செய்ய -4 வாரத்துக்குள் சட்டப்படி பரிசீலித்து தகுந்த உத்தரவினை பிறப்பிக்க நீதிமன்றம் உத்தரவு.
2009 க்குப்பின் பணிநியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு ஊதிய இழப்பை சரி செய்ய தமிழக நிதித்துறை செயலர், பள்ளிக் கல்வித்துறை செயலர், தொடக்கப்பள்ளி இயக்குனர் ஆகியோர் 4 வாரத்துக்குள் சட்டப்படி பரிசீலித்து தகுந்த உத்தரவினை பிறப்பிக்க வேண்டும்’ என்று நீதிமன்றம் உத்தரவு.
மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் 400 பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி
தலைமை ஆசிரியர்தான் ஒரு பள்ளியின் முன்மாதிரியாக திகழவேண்டும். அப்படி விளங்கினால்தான் சக ஆசிரியர்கள் முன்மாதிரியாக வருவார்கள். ஆசிரியர்கள் சிறப்பாக பணியாற்றினால்தான் மாணவர்கள் சிறப்பாக படிப்பார்கள், ஒழுக்கமாக நடப்பார்கள் என்பதை பள்ளி கல்வித்துறை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் உள்ள நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் அனைவருக்கும் பயிற்சி அளிக்க முடிவு செய்தது.
அதன்படி சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் (ஆசிரியர் பயிற்சி கல்வி இயக்குனரகம்) சார்பில் பயிற்சி தொடங்கியது. பயிற்சி 5 கட்டமாக நடக்கிறது. நேற்று மட்டும் 80 பேர் கலந்துகொண்டனர். மொத்தம் 400 நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பயிற்சி பெறுகிறார்கள்.
இந்த பயிற்சி 4 நாட்கள் நடைபெறுகிறது. தலைமை ஆசிரியர்கள் நேரம் தவறாமல் சரியாக பள்ளிக்கூடத்திற்கு செல்லவண்டும், அவர்களுக்கு உரிய பல்வேறு பதிவேடுகளை அவர்கள் முறைப்படி, சரியாக பராமரிக்க வேண்டும், கல்வி, விளையாட்டு, யோகா உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மாணவர்களை சிறந்தவர்களாக விளங்க வைக்கவேண்டும், பள்ளிகளில் எந்த காரணத்தை கொண்டும் ஒழுங்கீன செயல்கள் நடக்கக்கூடாது, நல்ல நோக்கம் ஆகிய பல்வேறு தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
நேற்று நடிகர் தாமு உள்ளிட்ட பல நிபுணர்கள் வந்து ஆசிரியர்களுக்கு நல்ல நோக்கம் உள்பட பலதலைப்புகளில் பயிற்சி அளித்தனர்.
பயிற்சிக்கான ஏற்பாடுகளை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் செய்திருந்தார்.
தமிழை முதன்மைப் பாடமாக அறிவிக்கக் கோரி தமிழாசிரியர்கள் மார்ச் 8-ல் ஆர்ப்பாட்டம்
தமிழை முதன்மைப் பாடமாக அறிவிக்கக் கோரி வரும் மார்ச் 8-ல் பேரணி நடத்தப்படும் என தமிழக தமிழாசிரியர் கழக மாநில பொதுச் செயலர் இளங்கோ தெரிவித்தார்.
அவர் திண்டுக்கல்லில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது: மத்திய அரசு ஆசிரியர்களுக்கு வழங்கும் ஊதியத்துக்கு இணையாக சிறப்பு ஆசிரியருக்கு ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 8-ல் பேரணி நடத்தப்படும். அனைத்து மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும் இந்த பேரணியில், பல்வேறு ஆசிரியர் சங்க கூட்டமைப்புகள் பங்கேற்கின்றன என்றார்.
இடைநிலை ஆசிரியர்களுக்கு 6–வது சம்பள கமிஷன் பரிந்துரைத்த சம்பளத்தை வழங்க ஐகோர்ட்டு உத்தரவு
சென்னை, பிப்.16–இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் ஜெ.ராபட். சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–தமிழகத்தில் 1999–ம் ஆண்டுக்கு முன்பு பணி நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்கள், 2009–ம் ஆண்டுக்கு முன்பு பணி நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்கள், 2009–ம் ஆண்டு ஜூன் மாதத்துக்கு பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு இடையே சம்பளம் தொகையில் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது.இந்த நிலையில், மத்திய அரசு 6–வது சம்பள கமிஷன் பரிந்துரையின்படி, மத்திய அரசு பள்ளிகளின் பணியாற்றி வரும் இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை சம்பளம் ரூ9,300, தரச்சம்பளம் ரூ.4,200 என்று நிர்ணயம் செய்துள்ளது.இதையடுத்து இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பளத்தை நிர்ணயம் செய்த தமிழக அரசு 3 நபர் கமிஷன் அமைத்தது. இந்த 3 நபர் கமிஷன், 6–வது சம்பள கமிஷன் பரிந்துரைகளின் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பளம் நிர்ணயம் செய்யவேண்டும் என்று தமிழக அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தது.ஆனால், இந்த அறிக்கையின் அடிபபடையில் சம்பளத்தை மாற்றி அமைக்காமல் தமிழக அரசு மவுனம் காத்து வருகிறது. எனவே, 3 நபர் கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசின் கீழ் செயல்படும் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தை தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்குள் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த மனு நீதிபதி கே.கே.சசிதரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் வக்கீல் சஞ்சய் காந்தி, மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல் சி.செல்வராஜ் ஆகியோர் ஆஜராகி வாதிட்டார்கள்.இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘6–வது சம்பள கமிஷன் பரிந்துரை, அதனடிப்படையில் அமைக்கப்பட்ட 3 நபர் கமிஷன் அறிக்கை அடிப்படையில், தமிழகத்தில் உள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பளத்தை நிர்ணயம் செய்து வழங்கக் கோரி மனுதாரர் அமைப்பு கடந்த 2013–ம் ஆண்டு செப்டம்பர் 10–ந் தேதி கோரிக்கை மனுவை கொடுத்துள்ளார்.எனவே அவரது கோரிக்கை மனுவை தமிழக நிதித்துறை செயலர், பள்ளிக் கல்வித்துறை செயலர், தொடக்கப்பள்ளி இயக்குனர் ஆகியோர் 4 வாரத்துக்குள் சட்டப்படி பரிசீலித்து தகுந்த உத்தரவினை பிறப்பிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்
சர்வதேச சிறந்த ஆசிரியர் விருதுக்கான இறுதிப்பட்டியலில் இடம்பிடித்த அகமதாபாத் ரிவர் சைட் பள்ளி ஆசிரியை !!
சர்வதேச அளவில் வர்கி அறக்கட்டளையால் வழங்கப்படும் சிறந்த ஆசிரியருக்கான விருதுப்பட்டியலில் அகமதாபாத்தின் ரிவர் சைட் பள்ளிக்கூடத்தில் குழந்தைகளுக்கு கல்வி புகட்டும் ‘கிரண் பிர் சேத்தி’ இடம் பெற்றுள்ளார்.
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்டனை கவுரவ தலைவராகக் கொண்ட வர்கி அறக்கட்டளை உலக அளவில் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த ஆசிரியருக்கான 1 மில்லியன் டாலர் (6 கோடியே 22 லட்ச ரூபாய்) பரிசுத் தொகையும் வழங்குகிறது. ஆசிரியர் தொழிலில் ஈடுபடுவோர்க்கான நோபல் பரிசாகக் கருதப்படும் இந்த சிறப்புக்குரிய சர்வதேச ஆசிரியர் பரிசு தங்களது தொழிலில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டு, மிக சிறப்பாக சேவையாற்றிய ஆசிரியருக்கே வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி, கென்யா, ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா உட்பட 127 நாடுகளைச் சேர்ந்த 5000 பேர் இந்த பரிசுக்காகப் பரிந்துரைக்கப்பட்டனர். இதில் 1300 பரிந்துரைகள் தேர்வு செய்யப்பட்டு, அதில் சிறப்பாக பணியாற்றிய 50 பேர் இறுதி செய்யப்பட்டனர். அதிலும் ஆசிரியர் தொழிலுக்கு பெருமை தேடித்தந்த 10 பேர் இறுதி செய்யப்பட்டு அதில் ஒருவருக்கே இந்த விருது வழங்கப்படுகிறது.
இந்த பட்டியலில் இடம்பெற்ற சேத்தி தனது கற்பித்தல் அனுபவங்கள் பற்றிக் கூறுகையில், "பிள்ளைகளுக்கு பாடம் கற்பிக்கும் கலையில் நான் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு விதமான அணுகுமுறைகளை கையாணடு வருகிறேன். முதல் நாள் ஒரு ஆராய்ச்சியாளரின் பார்வையில் பாடம் சொல்லித் தரும் நான் மறுநாள் ஒரு கலைஞராகவும், அடுத்த நாள் ஒரு கதை சொல்லியாகவும் மாறி பாடம் நடத்துகிறேன்” எனக் குறிப்பிட்டார்.
இந்த 10 பேர் கொண்ட இறுதிப்பட்டியலில் இடம்பெற்றுள்ள சேத்திக்கு இந்த பரிசை வெல்லும் வாய்ப்பு கிடைத்தால் துபாயில் மார்ச் 15-ம் தேதி நடைபெறும் விழாவில் 6 கோடியே 22 லட்ச ரூபாய் ரொக்கப் பரிசையும் உலகின் சிறந்த ஆசிரியர் என்ற பெருமைக்குரிய விருதையும் பெறுவார்.
தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கான மூன்றாம் பருவ பாடங்கள் வீடியோ வடிவில்...
திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர் திரு.குருமூர்த்தி அவர்கள், 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான அனைத்து பாடங்கள் (கணிதம் தவிர) தொடர்பான வீடியோ காட்சிகளை பல்வேறு இணையதளங்களிலிருந்து பதிவிறக்கம் செய்து, பாடப்பகுதிக்கு உரிய விளக்கங்களுடன் கூடிய வீடியோ காட்சிகளாக தயார் செய்துள்ளார்.
வார்த்தைகளால் விளக்க முடியாத பாடப்பகுதிகளை கற்பிக்க இந்த வீடியோ வடிவிலான பாடங்கள் பெரிதும் துணை புரிகின்றன என ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
1,2,3,4,5 ஆம் வகுப்புகளுக்கு தலா ஒரு குறுந்தகடு வீதம் 5 குறுந்தகடுகளின் விலை ரூபாய்.200/- மட்டுமே. (குரியர் செலவு உட்பட).
மேற்கண்ட குறுந்தகடுகளை வாங்க விரும்புவோர் திரு.குருமூர்த்தி அவர்களின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
குருமூர்த்தி அவர்களின் தொலைபேசி எண் 9791440155
ஆசிரியர் திரு.குருமூர்த்தி, தான் தயாரித்துள்ள வீடியோ காட்சிகள் மூலம் தனது மாணவர்களுக்கு பாடம் கற்பிப்பதை தான் இந்த படத்தில் காண்கிறீர்கள்!
இந்த பதிவை அனைத்து ஆசிரியர்களும் அறிந்து கொள்ளும் பொருட்டு பகிரலாமே !
ஆசிரியர்கள் என்றால் அடிமைகளா?
ந கரின் மையத்தில் பிரமாண்டமாக எழுப்பப்பட்ட பெரிய தனியார் பள்ளியொன்றில் பயிலும் உங்கள் குழந்தைகளுக்கு பாடம் சொல்லித்தரும் ஆசிரியர்கள், உங்களுக்கோ, உங்களது பிள்ளைகளுக்கோ அல்லது இந்த சமுதாயத்துக்கோ மட்டுமே ஆசிரியர்களாக பார்க்கப்படுகிறார்கள்.
வெளியில் இருந்து பார்த்தால் அப்படித்தான் தெரியும்..உண்மையில் அந்தப் பள்ளி நிறுவனருக்கோ அல்லது அப்பள்ளியின் தாளாளருக்கோ அவர்கள் அடிமைகள் அல்லது, சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளைகள்.
ஒரு சராசரி தொழிலாளிக்கு, ஒரு முதலாளியிடம் கிடைக்கும் நியாயமான மரியாதைகூட பெரும்பாலான தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு கிடைப்பதில்லை.
சாதாரணமாக ஆரம்பிக்கப்பட்ட பெரும்பாலான பள்ளிகள் இன்று பெரும் புகழோடும், வானுயர உயர்ந்து நிற்கும் கட்டடங்களோடும், எல்.கே.ஜி-க்கே என்ட்ரன்ஸ் எக்ஸாம் வைத்து சேர்க்கை நடத்தும் அசுர வளர்ச்சிகளுக்கும் பின்னால் இருப்பது மடிப்பு கலையாத முழுக்கை சட்டையும், சட்டைக்கு தோதான டையும் அணிந்தபடி பாடம் நடத்தும் ஆசிரியர்களும், வேலைக்குச் சென்று குடும்பத்தை கரை சேர்த்தாக வேண்டிய ஆசிரியைகளும்தான்.
'எழுத்தறிவித்தவன் இறைவன்' என்னும் சிறப்பு எப்போதோ காலாவதியாகத் தொடங்கிவிட்டது.
ஒரு தனியார் பள்ளி ஆசியரிடம் சென்று "உங்கள் சம்பளம் எவ்வளவு?" என்று கேளுங்கள். அவர் நிச்சயம் கூச்சத்தில் நெளிவார். சொல்லத் தயங்குவார். அதையும் மீறி சட்டென அவர் பதில் சொல்கிறார் எனில் அவர் சொல்வது பொய்யாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்.
காரணம் அவ்வளவு அருமையான, சூப்பரான சம்பளத்தை அந்தப் பள்ளி தரும் என்று நினைத்து விடாதீர்கள்.
தினக்கூலி செய்யும் ஒரு நபரின் மாத வருமானத்தைவிட தனியார் பள்ளியின் ஆசிரியருக்கு சம்பளம் குறைவுதான்.
ஆச்சர்யமாக இருக்கிறதா?
அப்படிஎன்றால் இதையும் படியுங்கள்... குறைந்த சம்பளத்தைக் கொடுத்து அவர்களிடம் வாங்கப்படும் வேலையானது, இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ்காரனும் செய்யாத அளவுக்குக் கொடுமையானது.
காலை முதல் மாலை வரை தொடர்ச்சியான பாடவேளைகள், உட்காருவதற்கு நாற்காலிகளும் இருக்காது, தொண்டை தண்ணி வற்ற கத்த வேண்டிய சூழல், ஓய்வறைகள் இருக்கும்..ஆனால், ஒய்வு இருக்காது. வீடு திரும்ப போதிய பேருந்து வசதிகளும் செய்துகொடுப்பதில்லை.
சில பள்ளிகள், மாணவ மாணவியர் பயன்படுத்தும் பேருந்தை குறைந்தபட்சம் பெண் ஆசிரியைகள்கூட பயன்படுத்த அனுமதிப்பதில்லை. வகுப்பில் நின்றது போக பேருந்திலும் நின்றுகொண்டே பயணித்து செல்லும் களைப்பு சொல்லி மாளாது.
இது தவிர விடுமுறைகள் என்பது அரிதிலும் அரிதானது. வெள்ளிக்கிழமையோ அல்லது திங்கள்கிழமையோ விடுப்பு எடுத்தால், தொடர்ச்சியான மூன்று நாட்களுக்கான சம்பளம் பிடிப்பு என்ற அற்பத்தனமான ஐடியாக்களைப் பின்பற்றும் பள்ளிகளும் உண்டு.
கோடை விடுமுறையிலும் இவர்களுக்கு 'ஆன் டியூட்டி தான். எப்படி என்றால் ஏப்ரல், மே மாதங்களில் புதிய சேர்க்கையையும், பாடநூல் விநியோகமும்,'கேன்வாஸ்' எனும் பெயரில் ஆள்பிடிப்பு வேலைகளையும் செய்ய ஆட்கள் தேவை.
இப்படிப்பட்ட நெருடலான வேளையில், விரக்தியில், தவிர்க்க முடியாத சூழ்நிலையில் வேலையை உதறிவிடலாம் என்று ஒரு ஆசிரியர் நினைத்தாலும் அது முடியாது.
ஏனென்றால், பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்களைப் பணியிலமர்த்தும்போதே அவர்களின் அசல் சான்றிதழ்களை 'லாக்' செய்து வைத்துவிடுவார்கள்.
தேள் கொட்டிய திருடனை போல மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் இருப்போரின் பட்டியல் மிக நீண்டது. இதுபோக பிள்ளைகளைக் கண்டித்தால் பள்ளிக்கே சென்று ஆசிரியரை எச்சரிக்கும் பெற்றோர்களும், 'ஐ' பட விக்ரம் சொல்வதுபோல் 'அதுக்கும் மேல' சொல்ல வேண்டுமானால் சமீபத்தில் சென்னையில் தன்னை கண்டித்த ஆசிரியரை ரவுடிகளை அழைத்து சென்று அடித்து துவைக்கும் மாணவருமாக, பாதுகாப்பற்ற ஆசிரியர் பணி சூழலும், என்னம்மா... இப்படி பண்றீங்களேம்மா? என சொல்லத் தூண்டும் ஆசிரியர்களின் டிராஜடி கதைகளும் நிறையவே உண்டு.
என்னதான் தீர்வு?
* சம்பளத்தை உயர்த்திக் கேட்டால் 'கூரை மேல சோறு போட்டா ஆயிரம் காக்கா' எனும் சொலவடைக்கு ஏற்றார்போல் ஆசியர்களை நோக்கி நீ இல்லாவிட்டால் இன்னொருவன் என்று பள்ளி நிர்வாகிகளால் ஏளனம் செய்யும் செய்யப்படும் நிலை மாற்றப்பட வேண்டும்.
* அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இருப்பதுபோல தனியார் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கும் தனியே ஒரு சங்கம் அமைக்கப்பட வேண்டும்.
* தனியார் பள்ளிகளுக்கு பெற்றோர்கள் செலுத்த வேண்டிய தொகையை அரசு நிர்ணயம் செய்ததுபோல, தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் அவர்களின் கல்வித்தகுதிக்கு ஏற்ப சம்பளம் நிர்ணயிக்கப்பட வேண்டும்
* அரசே நேரடியாகத் தலையிட்டு உரிய சம்பளத்தை பெற்றுத்தர முன்வர வேண்டும். * விடுமுறைகளுக்கு சம்பளப் பிடித்தம் இல்லாமல் நடைமுறைப்படுத்த வேண்டும்
* ஆசிரியைகளுக்கு பேறுகால விடுமுறைக்குப் பின் பணி உத்தரவாதம் தரப்பட வேண்டும் * முறையான வைப்பு நிதித் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும்
* காரணமின்றி ஆசிரியர்களைப் பணிநீக்கம் செய்யக் கூடாது
* இன்க்ரீமென்ட் எனச் சொல்லப்படும் சம்பள உயர்வுகள் சரியான கால இடைவெளியில் தரப்பட வேண்டும் மேற்சொன்ன இவை அனைத்தையும் ஆசிரியர்களுக்கு செய்துகொடுப்பது மட்டுமே கல்வி போதித்து, வருங்கால சாதனையாளர்களை உருவாக்கும் சிற்பிகளாகிய ஆசியர்களுக்கு அரசாங்கம் செய்யும் நன்றிக்கடனாக இருக்கும்.
6% Increase in DA and DR for CG Employees and Pensioners from 1.1.2015
6% Increase in DA and DR for CG Employees and Pensioners from 1.1.2015 - Thus the DA and DR will go up to 113% from the existing rate of 107%.
Increasing of Dearness Allowance for Government Employees and Pensioners is an important event of their economical life. This time is very crucial to assume that the All India CPI for IW is still stands at 253 level. But the calculation of Dearness Allowance is slightly vary from the existing level on every month.
How it is possible...We have given a table to know the way of calculation method of Dearness Allowance, particularly the vital role of multiplication factor of 115.76, which is recommended by 6th Pay Commission.
அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்கிறது: மார்ச் மாதம் அறிவிப்பு வெளியாகும்?
ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களுக்கு நிலுவைத் தொகையாகவும், ஏப்ரல் முதல் ஊதியத்துடன் வழங்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன .
இதன்படி, தற்போது 107 சதவீதமாக உள்ள அகவிலைப்படி, 113 சதவீதமாக உயர்த்தப்படும் எனத்தெரிகிறது.
அதிர்ச்சி !!
கல்வித்துறையை கலக்கும் 'பேப்பர் டிரான்ஸ்பர்': அதிர்ச்சியில் ஆசிரியர்கள் !! DINAMALAR
ஆசிரியர்களுக்கு அல்லாமல் அவர்களின் ஆவணங்களுக்கு 'டிரான்ஸ்பர்' தந்த விஷயம் அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் (எஸ்.எஸ்.ஏ.,) சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் 2002ம் ஆண்டு முதல் அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை இத்திட்டம் அமலில் உள்ளது. மாணவர்கள் படிப்பை இடையில் நிறுத்துவதை தவிர்ப்பது, பள்ளி செயல்பாடுகளை கண்காணிப்பது, புதிய வகுப்பறை கட்டும் பணிகள் இத்திட்டம் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காக மத்திய அரசு நிதி ஒதுக்குகிறது. இத்திட்டத்தில் ஆசிரியர் பயிற்றுனர்கள் அதிகமாக இருப்பதாக கூறி 10 பள்ளிகளுக்கு ஓர் ஆசிரியர் பயிற்றுனர் (10:1) இருந்தால் போதும் என்று முடிவு மேற்கொள்ளப்பட்டு 600 'சர்பிளஸ்' ஆசிரியர் பயிற்றுனர்கள் பிற மாவட்டங்களுக்கு பணிமாற்றம் செய்யப்பட்டனர். இதற்கு ஆசிரியர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் தான் பணிமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களின் ஆவணங்கள் மட்டும் அவர்கள் பணியாற்றிய பழைய மாவட்டத்திற்கே 'மாற்றுப் பணி' என்ற பெயரில் 'பேப்பர் டிரான்ஸ்பர்கள்' செய்யப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதன் அடிப்படையில் மதுரையில் மட்டும் 50பேருக்கு இந்த மாற்றல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஆசிரியர் பயிற்றுனர் கூறுகையில் "ஏற்கனவே எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் 'சர்பிளஸ்' என்ற பெயரில் ஏழு மாதங்களுக்கு முன் எங்களை வேறு மாவட்டத்திற்கு மாற்றினர். ஆனால் தற்போது 'நிர்வாக காரணம்' எனக் கூறி எங்கள் ஆவணங்களை மட்டும் பழைய மாவட்டத்திற்கே மாற்றியுள்ளனர். வேலை ஓரிடம், சம்பளம் பெறுவது வேறு மாவட்டமா. இதனால் நகர் ஈட்டுப்படி, வீட்டு வாடகை படி போன்றவற்றில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
மேலும் பொது 'கவுன்சிலிங்'கில் பங்கேற்புக்கான 'சீனியாரிட்டி' பாதிக்க வாய்ப்புள்ளது" என்றனர்.
கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஒருசில மாவட்டங்களுக்கு திட்ட பட்ஜெட் ஒதுக்கீடு குறைவாக உள்ளது. அந்த மாவட்டத்திற்கே ஜூனில் ஆசிரியர் பயிற்றுனர்கள் மாற்றம் செய்யப்பட்டனர். இதனால் அவர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. முன்பு பணியாற்றிய மாவட்டத்தில் அவர்களுக்கு சம்பளம் உள்ளது. ஜன., பிப்., மற்றும் மார்ச் சம்பளம் பழைய மாவட்டத்தில் தான் வழங்கப்படும். இதற்காக தான் அவர்களின் ஆவணங்கள் மட்டும் மாற்றப்பட்டுள்ளன. மார்ச்க்கு பின் இதற்கு தீர்வு கிடைக்கும் என்றார்.