6–வது ஊதியக்குழுவில் மத்திய அரசுக்கு இணையாக தமிழகத்தில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களுக்கும் சம்பளம் வழங்க வேண்டும். 50 சதவீத அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைக்க வேண்டும்
.
பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி வெஸ்டரி பள்ளி அருகில் இன்று 3–வது நாளாக ஆசிரியர்களின் மறியல் போராட்டம் நடந்தது.
இந்த போராட்டத்திற்கு ஜேக்டோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகரன், உதுமான் அலி ஆகியோர் தலைமை தாங்கினர். தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் தியாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். இதில் ஜேக்டோ மாவட்ட உயர்மட்ட குழு உறுப்பினர்கள் நீலகண்டன், நாகராஜன் உள்பட பலர் விளக்கவுரையாற்றினர்.
இதை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த உதவி கமிஷனர் அசோக்குமார் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்ட 770 ஆசிரியைகள் உள்பட மொத்தம் 1,300 ஆசிரியர்களையும் கைது செய்தனர்.
இந்த மறியல் போராட்டத்தால் சிறிதுநேரம் கலெக்டர் அலுவலக சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் மாவட்டத்தில் உள்ள 1,326 தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள், 250 உயர் நிலைப்பள்ளிகள், 146 மேல்நிலைப்பள்ளிகளிலும் ஆசிரியர்கள் செல்லாததால் கற்பித்தல் பணி பாதிக்கப்பட்டது.
இதற்கிடையே மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஆனந்தி உத்தரவின் பேரில் பயிற்சி ஆசிரியர்கள் உள்பட பலரை பணியில் ஈடுபடுத்தினர். ஆனாலும் ஏராளமான பள்ளிகளில் கற்பித்தல் பணி பாதிக்கப்பட்டதால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்
No comments:
Post a Comment