Sunday, June 29, 2014

கட்டாய பணிமாறுதலை கைவிட வேண்டும்

கட்டாயப் பணிமாறுதல் என்ற முடிவை அரசு கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து வளமைய ஆசிரியர்கள் முன்னேற்றச் சங்கம் அரசை வலியுறுத்தியுள்ளது.

திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற இச்சங்கத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இதர தீர்மானங்கள்:

ஆசிரியர் பயிற்றுநர்கள் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணி செய்யக்கூடாது என்ற ஆணையை திரும்பப் பெற வேண்டும், 4857 ஆசிரியப் பயிற்றுநர்களுக்கும் மாறுதல் அளித்திருப்பது விதிகளுக்கு புறம்பானது. அகவிலைப்படி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

சங்கத்தின் மாநிலத் தலைவர், நிறுவனர் கே.சம்பத் தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் சி.மணிவண்ணன், மாநிலச் செய்தித் தொடர்பாளர் ப.ரமேஷ் முன்னிலை வகித்தனர்.

மாநிலப் பொதுச் செயலர் ஜெ.ரவி, பொருளாளர் கார்த்திகேசன், தலைமை நிலையச் செயலர் வேலுச்சாமி உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
நெல்லையில் விடிய விடிய நடைபெற்ற ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு

திருநெல்வேலியில் கல்வித்துறை சார்பில் ஆசிரியர்களுக்கான பணி இடமாறுதல், பதவி உயர்வு உள்ளிட்ட கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. சனிக்கிழமை காலை தொடங்கிய இக்கலந்தாய்வு இணையதளம் சரிவர செயல்படாததால் விடிய விடிய நடைபெற்றது. எனினும் பணியிட மாறுதல் கிடைக்காமல் இடைநிலை ஆசிரியர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

தமிழகத்தில் ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு, பணி நிரவல், பணியிட மாறுதல் கலந்தாய்வு ஜூன் மாதம் 16 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கலந்தாய்வு மாநிலம் முழுவதும் ஒரே சமயத்தில் இணையதளம் மூலம் நடத்தப்படுகிறது.திருநெல்வேலி மாவட்ட ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு வண்ணார்பேட்டையில் உள்ள எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கான கலந்தாய்வு சனிக்கிழமைநடைபெற்றது.

கலந்தாய்வில் 133 பட்டதாரி ஆசிரியர்களும், 33 இடைநிலை ஆசிரியர்களும், 15 தொகுப்பு ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். கலந்தாய்வு நடைபெறும் மையத்திற்கு இவர்கள் காலை 9 மணிக்கே வந்து விட்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் ஆசிரியைகள் என்பது குறிப்பிடத்தக்கது.காலையில் 10 மணிக்கு தொடங்க வேண்டிய கலந்தாய்வு இணையதள சர்வர் செயல்படாத காரணத்தால் பிற்பகல் வரை கலந்தாய்வு தொடங்கவில்லை. பிற்பகல் 2 மணிக்கு பிறகு தொடங்கிய கலந்தாய்வில் முதல் கட்டமாக பட்டதாரி ஆசிரியர்கள்மாவட்டம் விட்டு மாவட்டம் விட்டு பணியிட மாறுதல் நடைபெற்றது. இதில் 8 பேருக்கு மட்டும் விரும்பிய மாறுதல் கிடைத்தது.

தொடர்ந்து சிறப்பாசிரியர்களுக்கான கலந்தாய்வு தொடங்கியது. இதில் 7 பேருக்கு பணி இடமாறுதல் கிடைத்தது. இரவு 10 மணியை கடந்த நிலையில் இணையதள சர்வர் இயங்காததால் இடைநிலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வில் தேக்கம் ஏற்பட்டது.இதனால் கலந்தாய்வுக்கு வந்திருந்த ஆசிரியர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்ட அறைகளில் தங்கியிருந்தனர்.நள்ளிரவில் 2 மணிக்கு பிறகு கலந்தாய்வு சர்வர் செயல்படத் தொடங்கியதால் கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. தூக்கத்தை இழந்து பணியிட மாறுதல் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருந்த இடைநிலை ஆசிரியர்கள் கலந்தாய்வில் பங்கேற்றனர். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை நீடித்த கலந்தாய்வில் ஒருவருக்கு கூட வெளி மாவட்டத்திற்கான பணியிட மாறுதல் கிடைக்கவில்லை.

இதை தொடர்ந்து உடற்கல்வி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது.பின்னர் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெற்றது. இணையதள சர்வர் சரிவர இயங்காத காரணத்தால் அறிவிக்கப்பட்ட கலந்தாய்வு பல மணி நேரம் தாமதமாக

கலந்தாய்வில் குளறுபடி:

கல்வித்துறை சார்பில் நடைபெற்ற கலந்தாய்வில் காலி பணியிடங்கள், பிற மாவட்டங்களில் உள்ள காலி பணியிடங்கள் குறித்த முழுமையான தகவல் தெரிவிக்கப்படவில்லை. கலந்தாய்வில் முறையான நடைமுறைகள் கடைபிடிக்கப்படவில்லை என ஆசிரியர்கள் புகார் தெரிவித்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டாரத்தில் உள்ள இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடம் .

1.வாணக்கன்காடு PUMS
2.கிருஷ்ணம்பட்டி PUMS
3.அதிரான் விடுதி PUES
4.குலப்பென்பட்டி PUMS
5.ராசாக்குடியிறுப்பு PUES
6.தெக்கிக்காடு PUMS
7.தெக்கிக்காடு PUMS
8.குறும்பிவயல் PUMS
9.வெள்ளாளவிடுதி PUMS
10.மேலப்பட்டி PUES
11.கருக்காக்குறிச்சி PUMS
12.முத்தானபட்டி PUES
13.கிளாங்காடு PUES
14.சொக்கம்பேட்டை PUES
15.புதுக்கோட்டை விடுதி PUMS
16.விளாரிப்பட்டி PUES
17.சூரியன் விடுதி PUES
18.மைலன்கோன்பட்டி PUMS

19.ராங்கியன்விடுதி புதியது PUMS
20.ராங்கியன்விடுதி பழையது PUES
21.ஒடப்பவிடுதி PUMS
22.ஒடப்பவிடுதி PUMS
23.குளந்திரான்பட்டு PUMS
24.சாஞ்சாடிதெருPUES
25.பாப்பாப்பட்டி PUMS

Thursday, June 26, 2014

ஆசிரியர்கள் சரிவர பள்ளிக்கு வராததால் மாணவ–மாணவியர் படிப்பு பாழாகிறது: பொதுமக்கள் புகார்

அவினாசி அருகே உள்ள ராவுத்தம்பாளையம் பள்ளிக்கு ஆசிரியர்கள் ஒழங்காக வராததால் மாணவ–மாணவிகள் படிப்பு பாழாவதாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

அவினாசி ஒன்றியம், ராவுத்தம்பாளையம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. 5–ம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் தற்போது 37 மாணவ – மாணவிகள் படித்து வருகின்றனர்.

இப்பள்ளியில் ஒரு தலைமை ஆசிரியர் உள்பட இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். இந்த நிலையில் ஆசிரியர்கள் பள்ளிக்கு ஒழுங்காக வருவதில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:–

இப்பள்ளியில் உள்ள தலைமை ஆசிரியர் வாரத்தில் இரண்டு, மூன்று நாட்கள் பள்ளிக்கு வருவதில்லை. இங்கு தனித்தனியே இரண்டு கட்டிடத்தில் வகுப்பறைகள் செயல்பட்டு வருகிறது. சில நாட்களில் ஒரு கட்டிடம் பூட்டியே இருக்கும்.

கடந்த 23–ந் தேதி தலை மை ஆசிரியர் வரவில்லை. மற்றொரு ஆசிரியர் காலை 9.45 மணிக்கு வந்தார். அதுவரை பள்ளி மாணவ–மாணவிகள் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது தாமதமாக வந்த ஆசிரியரிடம் ஏன் காலதாமதமாக வந்தீர்கள் என நாங்கள் கேட்டதற்கு உங்களுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நீங்கள் உங்கள் வேலையைப் பாருங்கள் என்று கூறுகிறார்.

முதலில் 50 மாணவர்கள் வந்த பள்ளியில் தற்போது வருகை குறைந்து கொண்டே போகிறது. மாணவ–மாணவிகளின் நலன் கருதி தினசரி ஆசிரியர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் பள்ளிக்கு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். தகவல் தெரிவித்ததும் அவினாசி உதவி தொடக்கக் கல்வி அலுவலர் மகேஸ்வரி பள்ளிக்கு வந்து அங்கிருந்த ஆசிரியரிடம் விசாரணை நடத்தினார்.
'கவுன்சிலிங்'கில் பங்கேற்க விண்ணப்பித்தும் பெயர் இல்லை; அதிர்ச்சியில் ஆசிரியர்கள்

மதுரையில் பொது மாறுதல் 'கவுன்சிலிங்'கில் பங்கேற்பதற்காக விண்ணப்பித்திருந்த ஆசிரியர்களின் பெயர்கள் விடுபட்டதால் அதிர்ச்சியில் உள்ளனர்.

ஜூனில் துவங்கிய மாறுதல் 'கவுன்சிலிங்'கில் பங்கேற்க விரும்பிய ஆசிரியர்கள், ஏப்.,லில் விண்ணப்பித்தனர். தலைமையாசிரியரிடம் அளிக்கப்படும் விண்ணப்பங்கள், கல்வித் துறை குறிப்பிட்டிருந்த நாளுக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இதற்கு தலைமையாசிரியர்கள் தான் பொறுப்பு. ஆனால், மாநிலத்தில் பல அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் விவரம், இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படவில்லை என்றும், இதனால் 'கவுன்சிலிங்'கிற்கு அவர்கள் அழைக்கப்படவில்லை என்ற சர்ச்சை தற்போது எழுந்துள்ளது.

தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் பிரபாகரன் கூறியதாவது:தலைமையாசிரியர் கவனக்குறைவால் பல பள்ளிகளில் ஆசிரியர்கள் விவரத்தை, இணையதளத்தில் பதிவேற்றம் செய்யாதது தெரியவந்துள்ளது. குறிப்பாக, மேலுார் கல்வி மாவட்டத்தில் ஒரு அரசு பள்ளியில், 5 ஆசிரியர்கள் பெயர் விடுபட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது போன்று பல பள்ளிகளில் ஆசிரியர்கள் விவரம் விடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. எனவே, விண்ணப்பம் அளித்து, விடுபட்ட ஆசிரியர்களையும் 'கவுன்சிலிங்'கில் பங்கேற்க வாய்ப்பளிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

Wednesday, June 25, 2014

மாணவர் ஆலோசனைக்குழு என்னாச்சு? செயல்பாடின்றி கிடப்பதாக புகார்

வளர் இளம் பருவத்தில் உள்ள பள்ளி மாணவர்கள், தங்களின் பாதையை நல்வழிப்படுத்த, அரசுப்பள்ளிகளில் துவங்கப்பட்ட மாணவர்களுக்கான ஆலோசனைக் குழு, தற்போது செயல்பாடின்றி இருப்பதாக புகார் எழுந்துள்ளது.

மாணவர்கள் பல்வேறு காரணங்களினால் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர். இதன் வெளிப்பாடு கல்வியில் பின்னடைவு, தன்னை சுற்றியுள்ளவர்களின் மீது வெறுப்பை ஏற்படுத்தி தீய செயல்களை செய்யத் துாண்டுகிறது. குறிப்பாக வளர் இளம் வயதில் இருக்கும் 9,10,11,12 வகுப்புகளிலுள்ள மாணவ, மாணவியர் தங்களின் எதிர்கால வாழ்விற்கு ஏற்ற வழியைக் காட்டிலும், தீய பாதையாக இருந்தாலும் தங்களுக்கு பிடித்த பாதையில் செல்லவே விரும்புகின்றனர்.
இதற்கு காரணம் மாணவர்கள் மனதளவில், நிலையாக ஓரு முடிவு எடுக்க தயாராக இல்லை என்பது மட்டுமே. மாணவர்களின் இந்நிலையால் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் தற்போது அதிகரித்துள்ளது.

இதை தவிர்க்கவே கல்வித்துறை, ஒவ்வொரு அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளிலும் ஆலோசனைக்குழு அமைக்க வேண்டும் என கடந்தாண்டு உத்தரவிட்டது. இக்குழுவில், பள்ளித்தலைமையாசிரியர் தலைவராகவும், பெண்கள் பள்ளியில் பெண் ஆசிரியர்கள் இருவரும், ஆண்கள் மற்றும் இருபாலார் பள்ளிகளில் இருபால் ஆசிரியர்களும் உறுப்பினர்களாக நியமிக்கப்படுகின்றனர். பள்ளிகளின் சார்பில் ஆலோசனை நிபுணர் ஒருவரை நியமித்து, மாதம் ஒருமுறை மாணவர்களுக்கு, தங்களின் பிரச்னைகளை எதிர்கொள்வது, சுயசிந்தனையை வளர்த்துக்கொள்வது, தன்னம்பிக்கை வளர்ப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை வழங்கும்படி அரசு அறிவித்ததது. தற்போது இக்குழுவினை செயல்படுத்த, பெரும்பாலான பள்ளிகள் மறந்துவிட்ட நிலை உருவாகியுள்ளது. அரசுப்பள்ளி மாணவர்களை வாழ்க்கையில் மேம்பட பல திட்டங்களை கல்வித்துறை செயல்படுத்துகிறது. இருப்பினும், அத்திட்டங்கள் முழுமையாக செயல்படுகிறதா என்பதை கவனிக்க தவறுகிறது என புகார் எழுந்துள்ளது.

உடுமலை, சுற்றுப்பகுதியில் 27 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், பல ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர். தனித்திறன்களை வளர்ப்பதில், கல்வியில் தேர்ச்சி, விளையாட்டு துறையில் வெற்றி உள்ளிட்ட சாதனைகளை பல பள்ளிகள் படைத்து வருகின்றன. சில பள்ளிகளில் உள்ள வசதி குறைபாடுகள், ஆசிரியர் பற்றாக்குறை, விளையாட்டுகளுக்கு முன்னுரிமை வழங்காதிருப்பது போன்றவற்றால் மாணவர்களின் திறமை முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவர்களின் திறன்களை மேம்படுத்த, கல்வித்துறை துவங்கிய மாணவர்களுக்கான ஆலோசனைக்குழு அமைக்கும் திட்டம் செயல்பாடின்றி திட்டமாக மட்டுமே உள்ளதாக பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர். மாணவர்களின் நலன்கருதி கல்வித்துறை வெளியிடும் அனைத்து திட்டங்களும் முறையாக செயல்படுத்துவதில், பள்ளிகள் அலட்சியம் காட்டி வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உடுமலை கல்வியாளர்கள் கூறியதாவது: அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகளையும், திட்டங்களையும் கல்வித்துறை செயல்படுத்தி வருகிறது. தற்போது நிகழ்ந்து வரும் குற்றங்கள் பெரும்பாலும் பள்ளி மாணவர்களை சுற்றியே நிகழ்கிறது. இதனை தவிர்க்கும் பொருட்டு, மாணவர்களுக்கான ஆலோசனைக் குழு பள்ளியில் துவங்க வேண்டும் என கல்வித்துறை உத்தரவிட்டது. மாணவர்களை நல்வழிபடுத்தும் நோக்கில் ஏற்படுத்தப்பட்ட இக்குழு, மாநில அளவில் ஒற்றைப்படை எண்ணிக்கையில் மட்டுமே மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டது. அதிலும், குறிப்பிட்ட பள்ளிகளில் மட்டுமே. மேலும், கடந்த ஆண்டு துவங்கப்பட்ட இக்குழு, இந்த ஆண்டு நடைமுைறயில் உள்ளதா என்பதே பல பள்ளிகளுக்கு சந்தேகமாக உள்ளது. இதுபோன்ற திட்டங்கள் முறையே செயல்படுகிறதா என கல்வித்துறை ஆய்வு நடத்தி, இத்திட்டங்களின் மூலம் மாணவர்கள் முழுமையாக பயனடைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

கல்வி அதிகாரி என்ன சொல்கிறார்? திருப்பூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஆனந்தி கூறுகையில், ''அனைத்து பள்ளிகளிலும் இக்குழு செயல்பட்டு வருகிறது. குழுவின் செயல்பாடுகள் குறித்த விவரங்களை அவ்வப்போது பள்ளிகள் சமர்ப்பிக்க வேண்டும். இதனை செயல்படுத்தாத பள்ளிகளில் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்
ஜிபிஎப் ஆண்டறிக்கை: இணைய தளத்தில் மட்டும் பெற சந்தாதாரர்களுக்கு அறிவுறுத்தல்

நடப்பு நிதியாண்டு முதல், பொது வருங்கால வைப்பு நிதிக்கான(ஜிபிஎப்) ஆண்டு கணக்கு அறிக்கையை சந்தாதாரர்கள், மாநில கணக்காயர் அலுவலக இணையதளத்தின் மூலம் மட்டுமே பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என துணை மாநில கணக்காயர்(நிதி) வர்ஷினி அருண் தெரிவித்துள்ளார்.

இது குறித்து செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழக அரசு ஊழியர்களுக்கான 2013-14- ஆம் நிதியாண்டின் ஜிபிஎப் கணக்கு அறிக்கை, சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு (டி.டி.ஓ.) ஜூலை இரண்டாம் வாரத்திலிருந்து அனுப்பப்பட உள்ளது. ஜிபிஎப் சந்தாதாரர்கள், கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி எந்த அலுவலகத்தில் பணியாற்றினார்களோ, அந்த அலுவலக டி.டி.ஓ.விடம் தங்களின் ஆண்டு கணக்கு அறிக்கையைப் பெற்றுக் கொள்ளலாம்.

மேலும், 2013 -14 -ஆம் ஆண்டு முதல், ஜிபிஎப் சந்தாதாரர்கள் தங்கள் ஆண்டு கணக்கு அறிக்கையின் நகலை மாநில கணக்காயர் அலுவலக இணையதளத்தில் (www.agae.tn.nic.in) பதிவிறக்கம் செய்துக் கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, ஆண்டு அறிக்கை நகல்கள் இனி மாநில கணக்காயர் அலுவலகத்தில் வழங்கப்படமாட்டாது. மேலும் நடப்பு நிதியாண்டு முதல், ஜிபிஎப் ஆண்டு கணக்கு அறிக்கையை சந்தாதாரர்கள் இணையதளத்தின் மூலம் மட்டுமே பதிவிறக்கம் செய்துக் கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tuesday, June 24, 2014

திருச்சியில் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வில் காலிப்பணியிடத்தை மறைத்ததாக புகார் ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

திருச்சியில் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வில் காலிப்பணியிடம் மறைக்கப்பட்டதாக புகார் கூறி ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கலந்தாய்வு
திருச்சி மாவட்டத்தில் தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் மற்றும் பணி நிரவலுக்கான கலந்தாய்வு மேலப்புதூர் புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 17–ந் தேதி தொடங்கியது. இதுவரை நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடந்து முடிந்துள்ளது.

நேற்று காலை தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வும், பிற்பகலில் இடைநிலை ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து கலந்தாய்வில் கலந்து கொள்வதற்காக தலைமை ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் நேற்று காலை குவிந்தனர். காலையில் தலைமை ஆசிரியர்கள் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வில் மொத்தம் 13 ஒன்றியத்தில் 20 இடங்களுக்கு நடந்தது. இதில் 18 பணியிடங்கள் நிரப்பப்பட்டன.

உள்ளிருப்பு போராட்டம்
இந்நிலையில் முசிறி ஒன்றியத்தில் காமட்சிப்பட்டி பள்ளி, நடராஜநகர் பள்ளி ஆகிய 2 இடம் காலியிடமாக அறிவிக்கப்பட்டது. இதில் காமாட்சிப்பட்டி தொடக்கப்பள்ளி பணியிடம் கலந்தாய்வில் மறைக்கப்பட்டு, மணலிஅய்த்தான்பட்டி பள்ளியில் காலியிடம் இருப்பதாக நேற்று அதிகாரிகள் அறிவித்ததாக தலைமை ஆசிரியர்கள் குற்றம்சாட்டினர்.

மணலிஅய்த்தான்பட்டியில் தலைமை ஆசிரியர் ஒருவர் பணியாற்றி வருகிற போது, அந்த இடத்தை காலியிடமாக திடீரென அறிவிக்கப்பட்டதற்கு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் கலந்தாய்வு நடந்த வகுப்பு அறை முன்பு அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி செல்வக்குமார் விரைந்து வந்து போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் (பொறுப்பு) செல்வன் உடன் இருந்தார்.

தடுத்து நிறுத்தம்
அப்போது காமாட்சிப்பட்டி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடத்தை கலந்தாய்வில் நிரப்ப வேண்டும் என்றும் ஆசிரியர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் அந்த பணியிடம் நிர்வாக காரணங்களுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு ஆசிரியர்கள் சம்மதிக்கவில்லை.

முசிறி ஒன்றியத்தில் 2 இடமும் நிரப்பப்படாமல் விட்டு வைத்து விட்டு அடுத்த கட்டமாக இடைநிலை ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடத்த அதிகாரிகள் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கும் ஆசிரியர்கள் சம்மதிக்கவில்லை. தொடர்ந்து வகுப்பறையில் உள்ளே அமர்ந்து போராட்டம் நடத்தினர். மேலும் இடைநிலை ஆசிரியர்களை பதவி உயர்வுக்கான கலந்தாய்வில் கலந்து கொள்ள விடாமல் தடுத்து நிறுத்தினர்.

பதவி உயர்வுக்கான கலந்தாய்வு
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் கண்டோன்மெண்ட் போலீசார் விரைந்து வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து தலைமை ஆசிரியர்கள் பணியிட மாறுதலில் 2 இடங்களை நிரப்பப்படாமல் விட்டு, விட்டு இடைநிலை ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடந்தது. போராட்டம் நடத்தியவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் கலந்தாய்வு நடந்த பள்ளியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு
திருச்சி மாவட்டத்தில் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர்கள் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு பாலக்கரை சையது முர்துசா அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. கலந்தாய்வில் கலந்து கொள்வதற்காக 200–க்கும் மேற்பட்ட முதுகலை ஆசிரியர்கள் நேற்று காலை குவிந்தனர். மொத்தம் 70 இடங்களில் 41 பேர் விரும்பிய இடங்களை தேர்வு செய்தனர். இதற்கான ஆணைகளை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி செல்வகுமார் வழங்கினார். தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) முதுகலை ஆசிரியர்கள், மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கான கலந்தாய்வு நடக்கிறது.
ஆசிரியர்கள் இடையே கோஷ்டி பூசல்; மாணவர்கள் வெளியேறும் அவலம்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே ஆசிரியர்களுக்கிடையே, கோஷ்டி பூசல் உள்ளிட்ட பல்வேறு சீர்கேடுகளால் பாதிக்கப்பட்டுள்ள அரசு பள்ளியில், டி.சி., வாங்கி சென்று, வேறு பள்ளியில் மாணவர்கள் சேரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த பெரணம்பாக்கம் கிராமத்தில், கடந்த, 1968ல், உயர்நிலைப்பள்ளி துவக்கப்பட்டது. இதனால், அப்பகுதியை சுற்றியுள்ள ரெட்டிப்பாளையம், ராந்தம், செம்மியமங்கலம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து, வாழ்க்கைத்தரத்தை உயர்த்தி, பல்வேறு பகுதிகளில் தற்போது பணிபுரிந்து வருகின்றனர்.இந்த பள்ளி, கடந்த, 2009ம் ஆண்டு, மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. தற்போது, இந்த பள்ளியில், ஆறாம் வகுப்பு முதல், ப்ளஸ் 2 வரை, 150 மாணவ, மாணவிகள் மட்டுமே படித்து வருகின்றனர். இவர்களுக்கு, நான்கு பட்டதாரி ஆசிரியர், இரு இடைநிலை ஆசிரியர், இரு தொழிற்கல்வி ஆசிரியர், ஒரு உதவி ஆசிரியர், ஒரு தலைமை ஆசிரியர் என, பத்து பேர் பணிபுரிந்து வருகின்றனர்.இதில், நடப்பாண்டு, ப்ளஸ்2 வகுப்பில், 12 மாணவர், எட்டு மாணவி என, 20 பேர் மட்டுமே உள்ளனர். எஸ்.எஸ்.எல்.சி.,யில், 16 மாணவர், 25 மாணவி, என, மொத்தம் 41 பேர் படித்து வருகின்றனர். நடந்து முடிந்த, எஸ்.எஸ்.எல்.சி., பொது தேர்வில், மொத்தம், 36 மாணவர்கள், தேர்வு எழுதி தேர்ச்சி, 25 பேர் தேர்ச்சி பெற்றனர்.
தேர்ச்சி பெற்ற, 25 மாணவர்களும், இதே பள்ளியில் மீண்டும், ப்ளஸ்1 வகுப்பில், சேர்ந்து படிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 15 மாணவர்கள் டி.சி.,யை பெற்று, வேறு பள்ளியில் சேர்ந்துள்ளனர். மீதி உள்ள, பத்து மாணவர்கள் வேறு பள்ளியில் சேர்ந்து படிக்க திட்டமிட்டு உள்ளனர். அந்த பள்ளியில் படித்தவர்களே, ப்ளஸ்1 வகுப்பில், அதே பள்ளியில் சேராமல் வேறு பள்ளியில் சேர்வதை கண்டு, மற்ற கிராமத்தை சேர்ந்த மாணவர்களும், பெரணம்பாக்கம் பள்ளியில் சேராமல், தேவிகாபுரம், போளூர் போன்ற பகுதிகளில் உள்ள பள்ளிகளில் சேர்ந்தனர். எனவே, இந்த ஆண்டு, ப்ளஸ்1 வகுப்பில், மாணவர்கள் சேர்வதற்கு வாய்ப்பில்லை, இந்நிலை தொடர்ந்தால், அடுத்த ஆண்டு, ப்ளஸ் 2 வகுப்புக்கும், இதே நிலை தொடரும் அபாயம் உள்ளது. இதனால், இதுவரை மேல்நிலைப்பள்ளியாக இருந்த, இந்த பள்ளி வருங்காலங்களில், உயர்நிலைப்பள்ளியாக மாற வாய்ப்பு உள்ளது.
இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது: இந்த பள்ளியில், ஆசிரியர்களுக்கிடையே கோஷ்டி பிரச்சனை ஏற்பட்டு, பள்ளி நிர்வாகம் சரியாக இயங்கவில்லை. கல்வி துறையில், உயர் அதிகாரிகளும், கிராமப்புற பள்ளிகளில், ஆய்வு செய்ய வருவதில்லை. எனவே தான், இந்த பள்ளி நிர்வாக சீர்கேட்டால் சிக்கி தவிக்கின்றன.
மேலும், பணி விகிதாச்சாரத்தை சமன்படுத்தி, தேவையான முதுகலை ஆசிரியர்களை நியமித்து, தேவைக்கு அதிகமாக உள்ள ஆசிரியர்களை மாற்றுவதற்கு கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். ப்ளஸ் 1 வகுப்பில் மாணவர்கள் சேர்ப்பதற்கு போர்க்கால அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.
இதுகுறித்து, திருவண்ணாமலை சி.இ.ஓ., பொன்னையா கூறியதாவது: கவுன்சிலிங் மூலம் வசதியான பள்ளிகளுக்கு, ஆசிரியர்கள் இடம்மாறி செல்வதை எங்களால் தடுக்க முடியாது. இதனால், கிராமப்புற பள்ளிகள் பெரிதும் பாதிக்கப்படுவது உண்மைதான். ஆசிரியர்கள் இல்லாத பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து விடுகிறது. மாவட்டம் முழுவதும், எந்தெந்த கிராமப்புற பள்ளிகளில், எவ்வளவு ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது என்பதை கணக்கெடுத்து, மாணவர்கள் பாதிக்கப்படாத வகையில், உடனடியாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

Saturday, June 21, 2014

தொடக்க கல்வி பள்ளி
ஆசிரியர் கலந்தாய்வு மாறுதலில் முறைகேடு DINAKARAN
தொடக்க கல்வி பள்ளிகளுக்கான கலந்தாய்வு மாறுதலில் நடைபெறும் முறைகேட்டை தடுக்க, பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்கத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் சங்கம் நேற்று வெளியிட்ட அறிக்கை: தொடக்க கல்வி துறையின் கீழ் இயங்கும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கான கலந்தாய்வு மாறுதல் ஜூன் 18 முதல் நடைபெற்று வருகிறது. அரசாணையில் ஒளிவு மறைவற்ற கலந்தாய்வு நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அரசாணைக்கு புறம்பாக கலந்தாய்வு மாறுதல் நடைபெறுகிறது. ஜூன் 24ம் தேதி ஒன்றியத்தில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கான பணிநிரவல் என ஆணையில் உள்ளது.
இதற்கு மாறாக, வெளிமாவட்டத்தில் இருந்து பணி நிரவல் உள்ள ஒன்றிய பள்ளிகளில் மாறுதல் ஆணை பெற்று, 19ம் தேதியே சில ஆசிரியர்கள் பணியில் சேர்ந்துள்ளனர். குறிப்பாக, சென்னைக்கு அருகில் உள்ள மாவட்டத்தில் அதிக அளவில் முறையற்ற மாறுதல் நடைபெறுகிறது. ஜூன் 30 மற்றும் ஜூலை 1ம் தேதிகளில், இணையதளத்தின் மூலமாக மாவட்ட மாறுதல் நடைபெறும் என்பது வெறும் கண்துடைப்பாகவே உள்ளது. அதிகாரிகளிடம் கேட்டால், மேலிடத்து உத்தரவு என அலட்சியமாக பதில் கூறுகின்றனர். எனவே, இந்த முறையற்ற மாறுதலை தடுக்க பள்ளிக் கல்வி துறை செயலர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அரசாணை வெளியிட்டும் நிலுவை பணம் தாமதம்: 20 ஆயிரம் ஓய்வூதியர்கள் பாதிப்பு
அரசாணைப்படி அகவிலைப்படி நிலுவை தொகை வழங்காததால், 20 ஆயிரம் ஓய்வூதியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 1988 ஜூன் 1 முதல் 1995 டிச.,31 வரை அகவிலைப்படி குறைவாக வழங்கப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்ட 30 ஆயிரம் பேர் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இவர்களின் அகவிலைப்படியை கணக்கிட்டு, நிலுவைத்தொகையை வழங்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து, 1988 ஜூன் 1 முதல் 1995 டிச.,31 வரை, ஓய்வுபெற்றவர்கள் தற்போது உயிருடன் இருந்தால் அவர்களுக்கு அகவிலைப்படிக்கான நிலுவை தொகையை வழங்க 2013 ஆக.,23 ல் அரசாணை வெளியிடப்பட்டது. 11 மாதங்களாகியும், அரசாணை நிறைவேற்றப்படாததால், 20 ஆயிரம் ஓய்வூதியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க மாநில துணைத்தலைவர் பொன்னையா கூறுகையில், "பாதிக்கப்பட்டவர்கள் அனைவருமே தற்போது தள்ளாத வயதில் பல்வேறு சிரமங்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். இனிமேலும் காலதாமதப்படுத்தாமல், அரசாணையை நிறைவேற்ற அதிகாரிகள் முன்வர வேண்டும். இறந்த ஓய்வூதியர்களின் குடும்பத்தினருக்கு பண பலன் கிடைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்,” என்றார்.

Thursday, June 19, 2014

சிறப்பு ஆசிரியர்களின் ஊதியமும் குறைவு; பணியிடமும் வெகு தொலைவில்..! தே.சாலமன்

கடந்த 2 ஆண்டுகளாக குறைந்த ஊதியத்தில், சொந்த ஊரிலிருந்து வெகு தொலைவில் பணியாற்றி வரும் தங்களுக்கு இடமாறுதலுக்கான கவுன்சலிங் நடத்த வேண்டும் என்று சிறப்பு ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக குறைந்த ஊதியத்தில், சொந்த ஊரிலிருந்து வெகு தொலைவில் பணியாற்றி வரும் தங்களுக்கு இடமாறுதலுக்கான கவுன்சலிங் நடத்த வேண்டும் என்று சிறப்பு ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 2012ஆம் ஆண்டில் திருவண்ணாமலை மாவட்டத்தில் சுமார் 1,000 பேர் உள்பட தமிழகம் முழுவதும் சுமார் 16 ஆயிரம் பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
5 முதல் 12 கி.மீ தூரத்துக்குள் இருக்கும் பள்ளிகளில் பணி அமர்த்திட வேண்டும், மாத தொகுப்பூதியமாக ரூ.5 ஆயிரம் மட்டுமே வழங்கப்படும், வாரத்துக்கு 3 நாள்கள் வேலை நாள்கள் என பணி நிர்ணயம் செய்யப்பட்டு, பணி ஆணைகள் வழங்கப்பட்டன.
இவர்களில் பெரும்பாலனவர்கள் அருகில் உள்ள பள்ளிகளில் நியமிக்கப்படவில்லை. இதற்கு மாறாக மாவட்டத்தின் பல பகுதிகளிலும், வெகு தொலைவில் உள்ள பள்ளிகளிலும், போக்குவரத்து வசதி இல்லாத கிராமப்புற பள்ளிகளிலும் சிறப்பாசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தூரம் அதிகம், குறைவான சம்பளம் போன்ற பலக் காரணங்களால் நியமனம் செய்யப்பட்ட சிறப்பாசிரியர்களில் 10 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் பணியை விட்டு விலகியுள்ளதாக கல்வித் துறை வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும், இவர்களுக்கு மட்டும் மே மாத சம்பளம் மட்டும் வழங்கப்படுவதில்லை என்றும் கூறப்படுகிறது.
பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையினாலும், மாணவர்களின் நலன் கருதியும் பகுதி நேர சிறப்பாசிரியர்கள் முழு நேரமாகவே பணியாற்றிட வேண்டிய நிலைமை ஏற்பட்டு, பணி பளுவும் கூடியதாகத் தெரிகிறது.
இவ்வளவு சிரமங்களுக்கிடையே தங்கள் கஷ்டத்தை மறந்து சிறப்பாசிரியர்கள் பணியாற்றிவருகின்றனர்.
வழக்கமாக ஆசிரியர்களுக்காக நடத்தப்படும் இடமாறுதல் கலந்தாய்வு போல், பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கும் (கவுன்சலிங் முறை) தமிழக அரசு நடத்தினால் சொந்த ஊருக்கு அருகே பணியாற்றிட வாய்ப்பு கிடைக்கும் என்றே அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
சிறப்பு ஆசிரியர்களின் ஊதியமும் குறைவு; பணியிடமும் வெகு தொலைவில்..! தே.சாலமன்

கடந்த 2 ஆண்டுகளாக குறைந்த ஊதியத்தில், சொந்த ஊரிலிருந்து வெகு தொலைவில் பணியாற்றி வரும் தங்களுக்கு இடமாறுதலுக்கான கவுன்சலிங் நடத்த வேண்டும் என்று சிறப்பு ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக குறைந்த ஊதியத்தில், சொந்த ஊரிலிருந்து வெகு தொலைவில் பணியாற்றி வரும் தங்களுக்கு இடமாறுதலுக்கான கவுன்சலிங் நடத்த வேண்டும் என்று சிறப்பு ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 2012ஆம் ஆண்டில் திருவண்ணாமலை மாவட்டத்தில் சுமார் 1,000 பேர் உள்பட தமிழகம் முழுவதும் சுமார் 16 ஆயிரம் பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
5 முதல் 12 கி.மீ தூரத்துக்குள் இருக்கும் பள்ளிகளில் பணி அமர்த்திட வேண்டும், மாத தொகுப்பூதியமாக ரூ.5 ஆயிரம் மட்டுமே வழங்கப்படும், வாரத்துக்கு 3 நாள்கள் வேலை நாள்கள் என பணி நிர்ணயம் செய்யப்பட்டு, பணி ஆணைகள் வழங்கப்பட்டன.
இவர்களில் பெரும்பாலனவர்கள் அருகில் உள்ள பள்ளிகளில் நியமிக்கப்படவில்லை. இதற்கு மாறாக மாவட்டத்தின் பல பகுதிகளிலும், வெகு தொலைவில் உள்ள பள்ளிகளிலும், போக்குவரத்து வசதி இல்லாத கிராமப்புற பள்ளிகளிலும் சிறப்பாசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தூரம் அதிகம், குறைவான சம்பளம் போன்ற பலக் காரணங்களால் நியமனம் செய்யப்பட்ட சிறப்பாசிரியர்களில் 10 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் பணியை விட்டு விலகியுள்ளதாக கல்வித் துறை வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும், இவர்களுக்கு மட்டும் மே மாத சம்பளம் மட்டும் வழங்கப்படுவதில்லை என்றும் கூறப்படுகிறது.
பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையினாலும், மாணவர்களின் நலன் கருதியும் பகுதி நேர சிறப்பாசிரியர்கள் முழு நேரமாகவே பணியாற்றிட வேண்டிய நிலைமை ஏற்பட்டு, பணி பளுவும் கூடியதாகத் தெரிகிறது.
இவ்வளவு சிரமங்களுக்கிடையே தங்கள் கஷ்டத்தை மறந்து சிறப்பாசிரியர்கள் பணியாற்றிவருகின்றனர்.
வழக்கமாக ஆசிரியர்களுக்காக நடத்தப்படும் இடமாறுதல் கலந்தாய்வு போல், பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கும் (கவுன்சலிங் முறை) தமிழக அரசு நடத்தினால் சொந்த ஊருக்கு அருகே பணியாற்றிட வாய்ப்பு கிடைக்கும் என்றே அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
கவுன்சலிங் தேதி ஒத்திவைப்பு
தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் பொது மாறுதல், பதவி உயர்வு

தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கவுன்சலிங் ஆன்லைன் மூலம் நடக்க இருப்பதால் அதற்கான தேதி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தொடக்க கல்வித் துறை இயக்குனர் இளங்கோவன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தொடக்க கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு கடந்த 16ம் தேதி முதல் 28ம் தேதி வரை பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கவுன்சலிங் நடக்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு கவுன்சலிங் நடந்து வருகிறது. இந்நிலையில் மாவட்ட மாறுதல் கேட்டு விண்ணப்பித்துள்ள ஆசிரியர்களின் வசதிக்காக மாவட்ட மாறுதல் கவுன்சலிங் ஆன்லைன் மூலம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதனால் மாவட்ட மாறுதலுக்கான கவுன்சலிங் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி இடைநிலை ஆசிரியர் மாவட்ட மாறுதல் கவுன்சலிங் 28ம் தேதிக்கு பதிலாக 30ம் தேதி மற்றும் ஜூலை 1ம் தேதி ஆகிய 2 நாட்கள் நடக்கும். பட்டதாரி ஆசிரியர் மாவட்ட மாறுதல் கவுன்சலிங் 21ம் தேதிக்கு பதிலாக ஜூலை 2ம் தேதி நடக்கும். மேற்கண்ட இரண்டு கவுன்சலிங்கும் ஆசிரியர்களின் பயண நேரத்தை குறைக்கும் வகையில் தற்போது பணியாற்றும் மாவட்டத்தில் இருந்தே தங்களுக்கு விருப்பமான மாவட்டத்தை தேர்வு செய்யும் வகையில் ஆன்லைன் மூலம் நடக்கும். மற்ற கவுன்சலிங் அனைத்தும் ஏற்கனவே வெளியிடப்பட்ட கால அட்டவணைப்படி வழக்கம்போல நடக்கும். இவ்வாறு இயக்குனர் இளங்கோவன் தனது அறிவிப்பில் கூறியுள்ளார்.

143 ஆசிரியர்களுக்கு தலைமை ஆசிரியர் பதவி

அனைத்து மாவட்டங்களிலும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கவுன்சலிங் நேற்று முன்தினம் நடந்தது. இந்த கவுன்சலிங்கில் 1,069 நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். அவர்களில் 286 பேர் பொது மாறுதல் கவுன்சலிங் மூலம் விரும்பிய இடங்களுக்கு மாறுதல் உத்தரவு பெற்றனர். மேலும், 101 தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாகவும், 143 பட்டதாரி ஆசிரியர்கள் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் மாவட்ட மாறுதல் கலந்தாய்வு தேதிகள் மாற்றம்

தொடக்கக் கல்வித் துறையின் கீழ் உள்ள இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் மாவட்ட மாறுதல் கலந்தாய்வு தேதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

தொடக்கக் கல்வித் துறையின் கீழ் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு திங்கள்கிழமை முதல் நடைபெற்று வருகிறது. மாவட்ட மாறுதல் கோரும் ஆசிரியர்களின் நலனைக் கருத்தில்கொண்டு மாவட்ட மாறுதல் கலந்தாய்வு ஆன்-லைன் மூலம் நடைபெற உள்ளது. இதனால் கலந்தாய்வு தேதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

இடைநிலை ஆசிரியர் மாவட்ட மாறுதல் கலந்தாய்வு ஜூன் 28-ஆம் தேதிக்கு பதிலாக ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய 2 நாள்கள் நடைபெறும். பட்டதாரி ஆசிரியர் மாவட்ட மாறுதல் கலந்தாய்வு ஜூன் 21-க்கு பதிலாக ஜூலை 2-ஆம் தேதி நடைபெறும். ஆசிரியர்களின் பயணத்தைக் குறைக்கும் வகையில் இப்போது பணிபுரியும் மாவட்டத்திலிருந்தே தங்களுக்கு விருப்பமான மாவட்டத்தைத் தேர்ந்தெடுக்கும் வகையில் ஆன்-லைன் மூலம் நடைபெறுகிறது.

பிற கலந்தாய்வுகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தேதிகளில் நடைபெறும் என இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

530 பேருக்கு பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வு: தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெற்றது.

இந்தக் கலந்தாய்வில் 1,069 நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் பங்கேற்றனர். இவர்களில் 286 பேர் விரும்பிய இடங்களுக்கு மாறுதல் பெற்றனர். மேலும் 101 தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியர்கள், நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களாகவும், 143 பட்டதாரி ஆசிரியர்கள், நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களாகவும் பதவி உயர்வு பெற்றனர்.

Monday, June 16, 2014

'உயிரியல்' ஆசிரியர்களை சோதிக்கும் 'கவுன்சிலிங்': 19 ஆண்டுகளாக தொடருது குழப்பம்

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 'உயிரியல்' பாடத்திற்கு ஆசிரியர் பணியிடங்கள் ஒதுக்குவதில், கடந்த 19 ஆண்டுகளாக நீடிக்கும் குழப்பத்திற்கு, இந்தாண்டு நடக்கும் கலந்தாய்வில் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தமிழகத்தில் 3,000 மேல்நிலை பள்ளிகள் உள்ளன. 1995ம் ஆண்டுக்குமுன் ஒவ்வொரு பள்ளிகளிலும், தாவரவியல் மற்றும் விலங்கியலுக்கு என தனித்தனி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். ஆனால், 1995க்கு பின், தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில், இப்பணியிடத்தை 'உயிரியல்' என மாற்றி, தாவரவியல் அல்லது விலங்கியல் ஆசிரியர்கள் யாராவது ஒருவர் மட்டுமே பணிநியமனம் செய்யப்பட்டனர். இதனால், ஒவ்வொரு ஆண்டும் மாறுதல் 'கவுன்சிலிங்'கின் போதும், இப்பாடப் பிரிவு ஆசிரியர்கள் பேராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் எதிரொலியாக, கடந்தாண்டு இப்பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என, கல்வி அதிகாரிகள் உறுதி அளித்தனர். இந்தாண்டு வெளியிடப்பட்ட 'கவுன்சிலிங்' அறிவிப்பில், 'பொதுமாறுதல் கோரும் ஆசிரியர், உயிரியியல் பாட ஆசிரியர் என்றால், 'உயிரியல்' என்றும் ஆசிரியரின் முதன்மை பாடம் 'தாவரவியலா' அல்லது 'விலங்கியலா' என்பதையும் இணையதள விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், விண்ணப்பப் பதிவின்போது அந்த வசதி இணையதளத்தில் இல்லாததால் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால், இந்தாண்டும் 'கவுன்சிலிங்' போது குழப்பம் நீடிக்கும் வாய்ப்பு உள்ளதாக ஆசிரியர்கள் கவலையில் உள்ளனர்.

தமிழ்நாடு மேல்நிலை பள்ளி முதுகலை ஆசிரியர் கழக மாநில அமைப்பு செயலாளர் பிரபாகரன், மாவட்டத் தலைவர் சரவணமுருகன் கூறியதாவது: இப்பிரச்னை 1995 முதல் 2,000 பள்ளிகளில் உள்ளது. மதுரை மாவட்டத்தில் 40 பள்ளிகளில் 'உயிரியல்' பணியிடம் எனவும்; 19 பள்ளிகளில் 'தாவரவியல்' அல்லது 'விலங்கியல்' பணியிடங்கள் என்றும் உள்ளன. இதனால், உயிரியல் பாடத்தில் காலிப்பணியிடம் ஏற்படும் போது அதில் தாவரவியல் ஆசிரியருக்கு மாறுதல் பெற்றால், அது தாவரவியல் பணியிடமாகவே காண்பிக்கப்பட்டு விலங்கியல் ஆசிரியர் பெற முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. இதை சரிசெய்ய, தாவரவியல் அல்லது விலங்கியல் ஆசிரியர் மாறுதல் பெறும்போது உயிரியியல் மற்றும் அவர்களின் முதன்மை பாடத்தில் ஏற்படும் காலிப்பணியிடமும் காண்பிக்க கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு கூறினர்.
உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் 156 பேருக்கு பணியிட மாறுதல்

பணியிட மாறுதல் கலந்தாய்வில் 156 உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் திங்கள்கிழமை (ஜூன் 16) பணியிட மாறுதல் பெற்றதாக தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் பள்ளிக் கல்வி, தொடக்கக் கல்வித் துறையின் கீழ் பணியாற்றும் அலுவலர்கள், ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கியது.

சென்னையில் உள்ள தொடக்கக் கல்வி இயக்ககத்தில் நடைபெற்ற இந்தக் கலந்தாய்வில் 344 உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் பங்கேற்றனர். இந்த நேரடி கலந்தாய்வில் 156 பேர் முன்னுரிமை அடிப்படையில் தங்களுக்கான பணி மாறுதல் இடங்களைத் தேர்ந்தெடுத்தனர். அவர்களுக்கு உடனடியாக மாறுதல் ஆணைகளும் வழங்கப்பட்டன.

நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவியிலிருந்து உதவித் தொடக்கக் கல்வி அலுவலராக பணிமாறுதல் வழங்கும் கலந்தாய்வில் கலந்துகொண்டவர்களில் 7 பேருக்கு பணி மாறுதல் வழங்கப்பட்டது. இவர்களுக்கான ஆணைகளும் உடனடியாக வழங்கப்பட்டதாக ஆர்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

Saturday, June 14, 2014

நாளை முதல் ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு

காஞ்சிபுரம் மாவட்ட தொடக்கக் கல்வி ஆசிரியர், தலைமை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு, ஜூன் 16-ஆம் தேதி முதல் ஜூன் 28-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பணி புரியும், தொடக்கக் கல்வி ஆசிரியர், தலைமை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல், பதவி உயர்வு, பணி நிரவல் கலந்தாய்வு, இந்த ஆண்டு ஜூன் மாதம் நடை பெறும் என்று அறிவிக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்திற்கான கலந்தாய்வு, காஞ்சிபுரம் சுப்பராய முதலியார் தொடக்கப் பள்ளியில் நடைபெறுகிறது. ஆசிரியர்களுக்கான பணி நிரவல், மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வுக்கான கால அட்டவணையை மாவட்ட கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி வரும் ஜூன் 16-ஆம் தேதி காலை உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு நடைபெற உள்ளது. அன்று பிற்பகலில் நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு, ஜூன் 17-ஆம் தேதி காலை நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல், ஜூன் 17-ஆம் தேதி பிற்பகல் நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியராக பதவி உயர்வு, ஜூன் 18-ஆம் தேதி காலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணிநிரவல், அன்று பிற்பகல் பட்டதாரி ஆசிரியர்கள் ஒன்றியத்திற்குள் பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடைபெறும்.

ஜூன் 19-ஆம் தேதி பட்டதாரி ஆசிரியர்கள் ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதல், ஜூன் 21-ஆம் தேதி பட்டதாரி ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல், ஜூன் 23-ஆம் தேதி பிற்பகல் தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு

பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. ஜூன் 24-ஆம் தேதி இடைநிலை ஆசிரியர்களுக்கு பணிநிரவல் கலந்தாய்வு, ஜூன் 25-ஆம் தேதி இடைநிலை ஆசிரியர் ஒன்றியத்திற்குள் மாறுதல், ஜூன் 26-ஆம் தேதி இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதல், ஜூன் 28-ஆம் தேதி இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் தொடர்பான கலந்தாய்வு நடைபெறும்.
ஜூன் 16-ல் தொடக்கக் கல்வித் துறை கலந்தாய்வு தொடக்கம்

நாகை மாவட்டத்தைச் சேர்ந்த தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நாகையில் ஜூன் 16-ல் தொடங்கப்படுகிறது என மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் நிலஒளி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில், நாகை மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான 2014-15-ம் கல்வியாண்டுக்கான பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நாகை, அண்ணாசிலை அருகே உள்ள புனித அந்தோனியார் உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் ஜூன் 16-ம் தேதி தொடங்கி நடைபெறுகிறது.

ஜூன் 16-ம் தேதி காலை உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களின் மாறுதல் கலந்தாய்வும், பிற்பகலில் நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவியிலிருந்து உதவி தொடக்கக் கல்வி அலுவலராகப் பணிமாறுதல் கோருவதற்கான கலந்தாய்வும் நடைபெறும்.

ஜூன் 17-ம் தேதி காலை நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வும், பிற்பகலில் நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியராகப் பதவி உயர்வு கோரும் கலந்தாய்வும் நடைபெறும்.

ஜூன் 18-ம் தேதி காலை பட்டதாரி ஆசிரியர்கள் பணி நிரவல் கலந்தாய்வும், பிற்பகலில் பட்டதாரி ஆசிரியர்கள் ஒன்றியத்துக்குள் மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வும் நடைபெறும்.

ஜூன் 19-ம் தேதி காலை பட்டதாரி ஆசிரியர்கள் மாவட்டத்துக்குள் மாறுதல் கோரும் கலந்தாய்வு நடைபெறும். ஜூன் 21-ம் தேதி காலை பட்டதாரி ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கோரும் கலந்தாய்வு நடைபெறும்.

ஜூன் 23-ம் தேதி காலை தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மாறுதல் கோரும் கலந்தாய்வும், பிற்பகலில் தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியராகப் பதவி உயர்வு கோரும் கலந்தாய்வும் நடைபெறும்.

ஜூன் 24-ம் தேதி இடைநிலை ஆசிரியர்கள் பணி நிரவல் கலந்தாய்வும், ஜூன் 25-ல் இடைநிலை ஆசிரியர்கள் ஒன்றியத்துக்குள் மாறுதல் கோரும் கலந்தாய்வும் நடைபெறும்.

ஜூன் 26-ல் இடைநிலை ஆசிரியர்கள் மாவட்டத்துக்குள் மாறுதல் கோரும் கலந்தாய்வும், ஜூன் 28-ல் இடைநிலை ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கோரும் கலந்தாய்வும் நடைபெறும்.

இந்தக் கலந்தாய்வுகள் காலை 9 மணிக்குத் தொடங்கி நடைபெறும். மாறுதல் கோரி விண்ணப்பித்துள்ள ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்விலும், தேர்ந்தோர் பட்டியல்படி பதவி உயர்வுக்குத் தகுதிப் பெற்ற ஆசிரியர்கள், பதவி உயர்வுக்கான கலந்தாய்விலும் பங்கேற்க வேண்டும். கலந்தாய்வு முடிவில் உரிய ஆணைகள் வழங்கப்படும் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
பதவி உயர்வு பெற்றவர்களுக்கு வயது தளர்வாணை வழங்கக் கோரிக்கை

தமிழ்நாடு ஊட்டச் சத்துத்துறையில் அங்கன்வாடிப் பணியாளர்களாக உள்ளவர்கள் கிராம சுகாதார செவிலியர்களாக பதவி உயர்வு பெறும்போது அவர்களுக்கு வயது தளர்வாணை வழங்க வேண்டுமென வலியுறுத்தி தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட அமைப்புக்கூட்டம் சி.இளஞ்சியம் தலைமையில் புதுக்கோட்டையில் சனிக்கிழமையன்று நடைபெற்றது.

கூட்டத்தில் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் எஸ்.தமிழ்ச்செல்வி சிறப்புரையாற்றினார். அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் கி.ஜெயபாலன், துணைத் தலைவர் கே.நாகராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழ்நாடு அங்கன்வாடி மையங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து, அவர்களை கிராம சுகாதார செவிலியர்களாக பதவி உயர்வு வழங்குவது கடந்த 1990-களிலிருந்து நடைமுறையாக உள்ளது. இத்தகைய பதவி உயர்வு பெற அங்கன்வாடி மையங்களில் 10 ஆண்டுகள் பணி முடித்து 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இத்தகைய ஊழியர்கள் அரசால் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ஒன்னரை வருடம் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும். இந்த ஒன்னரை வருடத்தில் 6 மாதத்திற்கு ஒருமுறை மூன்று செமஸ்டர்களாக தேர்வுகள் நடைபெறும். இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே கிராம சுகாதார செவிலியர் பணி வழங்கப்படும்.

இத்தகைய பயிற்சி முடித்தவுடன் கிராம சுகாதார செவிலியர்களாக பணியமர்த்தப்படுவதில்லை. பயிற்சி முடித்தாலும் தொடர்ந்து அவர்கள் அங்கன்வாடி பணியாளர்களாகவே நான்கு ஆண்டுகள் முதல் ஏழு ஆண்டுகள் வரை வேலை செய்ய செய்ய நிர்ப்பந்திக்கப் படுகின்றனர். பிறகுதான், சீனியாரிட்டி அடிப்படையில் பணியமர்த்தப் படுகிறார்கள். இப்படி காலம் கடந்து பணியமர்தப்படும் போது அவர்களில் பலருக்கு 40 வயதைக் கடந்து விடுகிறது. இதனால், இதர ஊழியர்களைப் போல அவர்களுக்கு கிடைக்க வேண்டிய ஊதிய உயர்வு, ஒப்படைப்பு சம்பளம், போனஸ், ஓய்வூதியம் உள்ளிட்ட பயன்கள் எதுவும் கிடைப்பதில்லை. எனவே, 40 வயதுக்கு மேல் கிராம சுகாதார செவிலியர்களாக பணியில் சேர்பவர்களுக்கு வயது தளர்வாணை வழங்க வேண்டும்.

அங்கன்வாடியிலிருந்து கிராம சுகாதார செவிலியர்களாக பதவி உயர்வு பெறும் பொது, அங்கன்வாடி மையத்தின் பணிக்காலத்தில் 50 சதத்தை ஓய்வூதியத்திற்கு பயன்பெறும் வகையில் கணக்கில் கொள்ள வேண்டும். இதர ஊழியர்களைப் போல கிராம சுகாதார செவிலியர்களுக்கும் 10 ஆண்டுகள் மற்றும் 20 ஆண்டுகள் பணி நிறைவு செய்யும் பொது பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம் தேவையற்ற பணியிட மாறுதல்களை கைவிடக் கோரிக்கை

நாகப்பட்டினம், ஜூன் 13 -தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியினர், நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பள்ளிகளில் அதிகப்படியாக உள்ள பணியிட மாறுதல்களைக் கைவிட வேண்டும், முறையற்ற மாறுதல் ஆணைகளை ரத்துசெய்து, நேரடியான கலந்தாய்வு முறையில் மாறுதல் ஆணைவழங்க வேண்டும், சேம நிதிக் கணக்குகளை முறைப்படுத்திக் கணக்குச் சீட்டுவழங்க வேண்டும் என்பனஉள்ளிட்ட 5 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் மாவட்டத் தலைவர் தெ.ராமசாமி தலைமை வகித்தார்.மாவட்டத் துணைத்தலைவர் என்.எழிலரசன் வரவேற்றார். மாவட்டச் செயலாளர் எம்.காந்தி விளக்கவுரையாற்றினார். மாவட்ட இணைச்செயலாளர் நா.சத்தியசீலன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஆர்.சித்ரா, மாவட்ட இணைச்செயலாளர் ஆர்.தேன்மொழி, முன்னாள் மாநிலச் செயலாளர் வி.பாலசுப்பிரமணியன், அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் சொ.கிருஷ்ணமூர்த்தி, சத்துணவு ஊழியர் சங்கச்செயலாளர் மரிய.ஜெய ராஜ், புள்ளியியல் சார்நிலை அலுவலர் சங்க மாநிலப் பொதுச்செயலாளர் ப.அந்துவன்சேரல் ஆகியோர் உரையாற்றினர்.அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.டி.ன்பழகன் நிறைவுரையாற் றினார். கொள்ளிடம் வட் டாரச் செயலாளர் இரா.பாலச்சந்தர் நன்றி கூறினார்.

Thursday, June 12, 2014

பணிநிரவல் நடவடிக்கைக்கு, ஆசிரிய பயிற்றுனர்கள் எதிர்ப்பு.

அனைவருக்கும் கல்வி திட்டத்தில், உபரியாக உள்ள, 393 ஆசிரியபயிற்றுனர்களை, பணிநிரவல் மூலம், பிற மாவட்டங்களுக்கு, இடம் மாற்றம் செய்யமுடிவு செய்யப்பட்டு உள்ளது.

மாநிலம் முழுவதும், அனைவருக்கும் கல்வி திட்ட வட்டார வள மையங்களில், ஆசிரியபயிற்றுனர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில், திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர் உட்பட, 13மாவட்டங்களில், 393 பேர் உபரியாக உள்ளனர். இவர்களை, பணிநிரவல் மூலம், காலியாக உள்ள, மற்றமாவட்டங்களுக்கு இடம் மாற்றம் செய்ய, கல்வித் துறை முடிவு செய்துள்ளது. தற்போது, சிவகங்கை,ராமநாதபுரம், கோவை, தருமபுரி உட்பட, 14 மாவட்டங்களில், 393 பணியிடங்கள் காலியாக உள்ளன. உபரியாக உள்ள ஆசிரிய பயிற்றுனர்கள், அந்தந்த, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு சென்று, 'ஆன் - லைனில்'விண்ணப்பிக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. பணிநிரவல் நடவடிக்கைக்கு, ஆசிரிய பயிற்றுனர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஜூன் 16 முதல் 29 வரை ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு

பள்ளி கல்வித் துறை, தொடக்கக் கல்வித் துறையின் கீழ் பணியாற்றும் ஆசிரியர்கள், தலைமையாசிரியர்களுக்கான பணியிட மாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு ஜூன் 16 முதல் 29 வரை நடைபெற உள்ளன.

இதற்கான உத்தரவை பள்ளி கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதா பிறப்பித்துள்ளார்.

இந்த கலந்தாய்வுகள் ஆன்-லைன் மூலம் நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் பணியாற்றும் 350-க்கும் மேற்பட்ட ஆசிரியர் பயிற்றுநர்கள் பணி நிரவல் மூலமாக இந்த ஆண்டு இடமாற்றம் செய்யப்பட உள்ளனர். ஆசிரியர் பயிற்றுநர்கள் அதிகமாக உள்ள மாவட்டங்களிலிருந்து பற்றாக்குறையாக உள்ள மாவட்டங்களுக்கு இவர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட உள்ளனர்.

இவர்களுக்கான கலந்தாய்வு ஜூன் 16-ஆம் தேதி நடைபெறுகிறது.

அதேபோல், பள்ளி கல்வித் துறையில் கூடுதலாக உள்ள 2 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் இந்த ஆண்டு பணி நிரவல் மூலம் இடமாற்றம் செய்யப்படலாம் எனத் தெரிகிறது.

தொடக்கக் கல்வித் துறையின் கீழ் பணி நிரவல் செய்யப்பட வேண்டிய ஆசிரியர்களின் எண்ணிக்கை இன்னும் இறுதி செய்யப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பள்ளி கல்வித் துறையில் பணியிடமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு அட்டவணை விவரம்:

ஜூன் 16 - ஆசிரியர் பயிற்றுநர்கள் பணி நிரவல்.

ஜூன் 18 - அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மாறுதல். (மாவட்டத்துக்குள் மாறுதல் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல்)

ஜூன் 19 - அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் பதவி உயர்வு.

ஜூன் 20 - அரசு, நகராட்சி உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மாறுதல். (மாவட்டத்துக்குள் மாறுதல் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல்)

ஜூன் 22 - அரசு, நகராட்சி உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் பதவி உயர்வு.

ஜூன் 23 - அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளி முதுநிலை ஆசிரியர்கள் இடமாறுதல். (மாவட்டத்துக்குள் மாறுதல்)

ஜூன் 24 - அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளி முதுநிலை ஆசிரியர்கள் இடமாறுதல். (மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல்)

ஜூன் 25 - அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளி முதுநிலை ஆசிரியர்கள் பதவி உயர்வு.

ஜூன் 26 - பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் பணி நிரவல்.

ஜூன் 27 - பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள். (மாவட்டத்துக்குள் மாறுதல்)

ஜூன் 28 - பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள். (மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல்)

ஜூன் 29 - பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு.

தொடக்கக் கல்வித் துறையில் இடமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு அட்டவணை:

ஜூன் 9 முதல் 13 வரை - ஆசிரியர்கள் இடமாறுதல் விண்ணப்பங்களை உதவித் தொடக்கக் கல்வி அலுவலரிடம் வழங்க வேண்டும்.

ஜூன் 16 (முற்பகல்) - உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களின் மாறுதல் கலந்தாய்வு.

ஜூன் 16 (பிற்பகல்) - நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவியிலிருந்து உதவித் தொடக்கக் கல்வி அலுவலராக பணிமாறுதல் கலந்தாய்வு.

ஜூன் 17 (முற்பகல்) - நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு.

ஜூன் 17 (பிற்பகல்) - நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியராகப் பதவி உயர்வு கலந்தாய்வு.

ஜூன் 18 (முற்பகல்) - பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு.

ஜூன் 18 (பிற்பகல்) - பட்டதாரி ஆசிரியர் ஒன்றியத்துக்குள் மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு.

ஜூன் 19 - பட்டதாரி ஆசிரியர் மாவட்டத்திற்குள் மாறுதல் கலந்தாய்வு. (ஒன்றியம் விட்டு ஒன்றியம்)

ஜூன் 21 - பட்டதாரி ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு.

ஜூன் 23 (முற்பகல்) - தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு.

ஜூன் 23 (பிற்பகல்) - தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு.

ஜூன் 24 - இடைநிலை ஆசிரியர் பணி நிரவல் கலந்தாய்வு.

ஜூன் 25 - இடைநிலை ஆசிரியர் ஒன்றியத்துக்குள் மாறுதல் கலந்தாய்வு.

ஜூன் 26 - இடைநிலை ஆசிரியர் மாவட்டத்துக்குள் மாறுதல் கலந்தாய்வு. (ஒன்றியம் விட்டு ஒன்றியம்)

ஜூன் 28 - இடைநிலை ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு.

Wednesday, June 11, 2014

ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் 16-ந்தேதி தொடக்கம்

பள்ளிக்கல்வித்துறை, தொடக்க கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஆண்டு தோறும் இடமாறுதல் பொது ‘கவுன்சிலிங்’ நடத்தப்படுகிறது.

ஆசிரியர்களின் சர்வீஸ் அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்பட்டு விரும்பிய இடங்களுக்கு இடமாறுதல் வழங்கப்படுகிறது.

அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், வட்டார வள மைய ஆசிரியர்கள், தொழிற்கல்வி ஆசிரியர்கள் என அனைவரும் கலந்தாய்வு மூலம் இடமாறுதல் பெற்று செல்வர்.

பாராளுமன்ற தேர்தல் நடைபெற்ற காரணத்தால் கலந்தாய்வு தாமதமாக நடைபெறுகிறது. சொந்த ஊரை விட்டு பிற மாவட்டங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் கலந்தாய்வு எப்போது நடைபெறும் என்று எதிர்பார்த்து கொண்டிருந்த நிலையில் தொடங்க கல்வி துறை ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

வருகிற 16–ந் தேதி கலந்தாய்வு தொடங்கி 28–ந் தேதி வரை நடைபெறுகிறது. 16–ந் தேதி தொடக்க கல்வி அலுவலர்கள், நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு வழங்கப்படும். 17–ந் தேதி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாறுதல் மற்றும் பதவி உயர்வு, பட்டதாரி ஆசிரியர்கள் பணி நிரவல் மற்றும் பதவி உயர்வு மூலம் மாறுதல் வழங்கப்படுகிறது.

19–ந் தேதி பட்டதாரி ஆசிரியர்கள் ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதல், 21–ந் தேதி பட்டதாரி ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல், 23–ந் தேதி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாறுதல், பதவி உயர்வு, 24–ந் தேதி இடைநிலை ஆசிரியர்கள் பணி நிரவல், 25–ந் தேதி இடைநிலை ஆசிரியர்கள் மாறுதல்.

26–ந் தேதி இடைநிலை ஆசிரியர்கள் ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதல்,28–ந் தேதி இடைநிலை ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் வழங்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.
அரசாணைகளை தமிழில் வழங்க வேண்டும்: ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கத்தினர் கோரிக்கை 

தமிழக அரசு ஓய்வூதியர்கள் சம்பந்தமாக வெளியிடும் அரசாணை மற்றும் விவர படிவங்களை தமிழில் வழங்க வேண்டும் என்று திருச்சி மாவட்ட தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
திருச்சி மாவட்ட தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்க மாதாந்திர கூட்டம் புத்தூரில் நடைபெற்றது. திருச்சி மாவட்டத் தலைவர் அருள்ஜோஸ் தலைமை வகித்தார்.
கூட்டத்தில், அரசு கருவூலங்களில் ஓய்வூதியர்களை அழைத்து அவர்களின் விவரங்கள் சரிபார்க்கும் நிகழ்வு நடைபெறும்போது, ஓய்வூதியர்களுக்கு வழங்கப்படும் படிவங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளன.
கிராம உதவியாளர் முதல் அடிப்படை பணியாளர்கள் பலர் ஓய்வூதியம் பெற்று வரும் நிலையில் ஓய்வூதியர்கள் ஆங்கிலத்தில் உள்ள படிவங்களை பூர்த்தி செய்ய மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே கருவூல அலுவலகங்களில் படிவங்களை தமிழில் வழங்கிட ஏற்பாடு செய்ய வேண்டும். அதுபோல தமிழக அரசு ஓய்வூதியம் குறித்து வெளி யிடும் அரசு ஆணைகள் மற்றும் விளக்க கடிதங்கள் அனைத்துமே ஆங்கிலத்தில் உள்ளன. அவற்றையும் தமி ழில் வெளியிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் சங்க பொதுச்செயலாளர் ஆர்தர் காட்வின், பொருளாளர் சந்திரசேகரன், துணைத்தலைவர் நாகப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண் டனர்.
சான்றிதழ் கேட்ட ஆசிரியருக்கு அடி

திருச்சியில் பென்சன் பலன் அடைய ஒரிஜினல் சான்றிதழ்களை கேட்ட ஓய்வு ஆசிரியரை பள்ளி தாளாளர் உட்பட நான்கு பேர் சேர்ந்து சரமாரியாக தாக்கினர்.
திருச்சி ஜங்சன் அருகே உள்ள ஆர்சி மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசியராக பணியாற்றிவர் லூர்துசாமி மரியதாஸ் அந்துவான்(58). கடந்த மே மாதம் ஓய்வு பெற்றார். ஆனால் 15 மாதங்களுக்கும் மேலாக சம்பளம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் பல்வேறு வழிகளில் தனது ஊதியத்தை பெற முயற்சித்து வருகிறார். ஆனால் பள்ளி நிர்வாகம் ஏமாற்றி வருவதாக தெரிகிறது. இந்நிலையில், அரசு பலன்களை அனுபவிக்க பள்ளிக்கு சென்று தனது ஒரிஜினல் சான்றிதழ்களை கேட்டார். அப்போது, பள்ளியின் தாளாளர் சூசைராஜ், தலைமையாசிரியர் குணசேகர் மற்றும் இரண்டு பேர் என 4பேர் சேர்ந்து சான்றிதழை தர மறுத்து லூர்துசாமி மரியதாஸ் அந்துவானை தாக்கினர். இதில் காயமடைந்த அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். இச்சம்பவம் குறித்து கண்டோன்மென்ட் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tuesday, June 10, 2014

அரசாணை 137/ப.க/நாள்:9.6.14 இன் படி தொடக்கக்கல்வித்துறையில் ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு விவரம்:
மாறுதல் பதவிஉயர்வு கலந்தாய்வு:
(அரசாணை 137/ப.க/நாள்:9.6.14)
விண்ணப்பங்கள் பெறுதல்: 9.6.14-13.6.14
ஜூன் 16 காலை AEEOs மாறுதல்
ஜூன் 16 மாலை MHM to AEEO
ஜூன் 17 காலை MHM மாறுதல் மாலை பதவிஉயர்வு
ஜூன் 18 காலை BT பணிநிரவல் மாலை மாறுதல், பதவி உயர்வு
ஜூன் 19 BT ஒன்றியம் விட்டு மாறுதல்
ஜூன் 21 BT மாவட்ட மாறுதல்
ஜூன் 23 காலை PHM மாறுதல் மாலை பதவி உயர்வு
ஜூன் 24 இநிஆ பணிநிரவல்
ஜூன் 25 இநிஆ மாறுதல்
ஜூன் 26 SGT ஒன்றிய மாறுதல்
ஜூன் 28 SGT மாவட்ட மாறுதல்

CLICK HERE TO VIEW TRANSFER GO AND NORMS

https://docs.google.com/file/d/0Bz-TmMOtC_OKTjdvNTBCMUlucGs/edit

Monday, June 9, 2014

தலைமை ஆசிரியர்கள் மீதான சஸ்பெண்டு உத்தரவை ரத்து செய்ய ஆசிரியர்கள் கோரிக்கை

குமரி மாவட்டத்தில் பிளஸ்–2 தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைந்த 3 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். மேலும் 12 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நடவடிக்கைக்கு ஆசிரியர்கள் சங்கங்களும், பல்வேறு அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தன.

மேலும், தலைமை ஆசிரியர்கள் மீதான சஸ்பெண்டு உத்தரவை ரத்து செய்யக்கோரி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் போராட்டங்களும் நடத்தப்பட்டன.

இதையடுத்து தலைமை ஆசிரியர்கள் மீதான சஸ்பெண்டு நடவடிக்கை திரும்ப பெறப்படும் என்று கல்வி அதிகாரிகள் கூறினர். அதையேற்று ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர். எனினும், இதுவரை தலைமை ஆசிரியர்கள் மீதான சஸ்பெண்டு நடவடிக்கை முறைப்படி திரும்ப பெறப்படவில்லை.

இதையடுத்து தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்யக்கோரி இன்று ஆசிரியர்கள் கோரிக்கை தினமாக கடைபிடிக்குமாறு தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் வேண்டுகோள் விடுத்தது. அதன்படி இன்று குமரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பணிக்கு வந்த ஆசிரியர்கள் கறுப்பு பேட்ஜ் மற்றும் கோரிக்கை அட்டை அணிந்து பணிக்கு வந்தனர்.

குறிப்பாக அரசு பள்ளிகளில் 1 முதல் 12–ம் வகுப்பு வரை பணிபுரியும் தொடக்க கல்வி ஆசிரியர்கள், இடை நிலைக்கல்வி ஆசிரியர்கள், மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் அனைவரும் கறுப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு வந்தனர்.

Sunday, June 8, 2014

உபரி பணியிட மாறுதல்களை கைவிட வலியுறுத்தி ஜூன் 12-ல் ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

உபரி பணியிட மாறுதல்களை முற்றிலுமாக கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 12-ம் தேதி தூத்துக்குடி மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தூத்துக்குடி மாவட்ட செயற்குழுக் கூட்டம் மாவட்டத் தலைவர் பவுல் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினர்கள் ரவீந்திரராஜன், செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

பணிநிரவல் மாறுதல்களை முற்றிலுமாக கைவிட வேண்டும், முறையற்ற மாறுதல்களை ரத்து செய்ய வேண்டும், ஒளிவு மறைவற்ற கலந்தாய்வு முறையில் பொதுமாறுதல்களை உடனே வழங்க வேண்டும், பட்டதாரிப் பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம் முன்பு ஜூன் 12-ம் தேதி மாலை ஆர்ப்பாட்டம் நடத்துவது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
உபரி பணியிட மாறுதல்களை கைவிட வலியுறுத்தி ஜூன் 12-ல் ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

உபரி பணியிட மாறுதல்களை முற்றிலுமாக கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 12-ம் தேதி தூத்துக்குடி மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தூத்துக்குடி மாவட்ட செயற்குழுக் கூட்டம் மாவட்டத் தலைவர் பவுல் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினர்கள் ரவீந்திரராஜன், செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

பணிநிரவல் மாறுதல்களை முற்றிலுமாக கைவிட வேண்டும், முறையற்ற மாறுதல்களை ரத்து செய்ய வேண்டும், ஒளிவு மறைவற்ற கலந்தாய்வு முறையில் பொதுமாறுதல்களை உடனே வழங்க வேண்டும், பட்டதாரிப் பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம் முன்பு ஜூன் 12-ம் தேதி மாலை ஆர்ப்பாட்டம் நடத்துவது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.