Thursday, February 25, 2016

+2 பொதுத்தேர்வு பணிக்கு ஆசிரியர்களை இருப்பிடத்திற்கு15 கி.மீ. சுற்றளவுக்குள் பணி நியமனம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை

1. துறை அலுவலர், பறக்கும்  படை உறுப்பினர்கள், அறை  கண்காணிப்பாளர்கள் ஆகியோரை பணி மூப்பு அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும்
.
2. துறை அலுவலர், பறக்கும்  படை உறுப்பினர்கள், அறை  கண்காணிப்பாளர்களை வசிக்கும் இருப்பிடத்திற்கு15 கி.மீ. சுற்றளவுக்குள் பணி
நியமனம் செய்ய வேண்டும்.
3.மாற்று திறனாளிகள், உடல் நலம் குன்றியவர்களுக்கு  தேர்வு பணியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்
4.பணியில் மூத்தோர் அறை கண்காணிப்பாளராகவும், இளையோர் பறக்கும் படை உறுப்பினராகவும் இருத்தல்  கூடாது.
  மேற்கண்ட கோரிக்கைகளை  
தருமபுரி மாவட்ட தலைவர், E.P.தங்கவேல்,  மாநில செய்தி  தொடர்பாளர், R.செல்வம்  மாநில துணை.தலைவர், R.சேகர்,
மாவட்ட அமைப்பு செயலாளர், அருண்குமார்,  தலைமையிட செயலாளர் முருகன்,  மாவட்ட செய்தி தொடர்பாளர் ஆரோக்கியம், மாவட்டத் துணைத் தலைவர் காவேரி சிவசங்கர்உள்ளிட்ட   மாவட்ட, வட்ட ஒன்றிய பொறுப்பாளர்கள் , பள்ளிக் கல்வி  இணை இயக்குநர்  (மேல்நிலை) முனைவர் எம்.பழனிச்சாமி அவர்களிடம் 
கோரிக்கை விடுத்தனர்

No comments:

Post a Comment