Tuesday, August 9, 2016

மாணவன் முதுகில் அமர்ந்து பாடம் நடத்திய ஆசிரியர்

அரசு பள்ளியில்மாணவனின் முதுகில் அமர்ந்துஆசிரியர் பாடம் நடத்திய சம்பவம்கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம்அன்னுார் அரசு பள்ளி, 7ம் வகுப்பு மாணவன் பிரவீன்குமார். 

வகுப்பில்தமிழாசிரியர் மாரப்பன்பிரவீன்குமார் முதுகில் அமர்ந்துபாடம் நடத்தியதாக அவரது தாயார் பரிமளாகலெக்டரிடம் புகார் அளித்தார்.
நிருபர்களிடம் அவர் கூறியதாவது: 
தமிழாசிரியர் மாரப்பன்என் மகனை படிக்க அனுமதிப்பதில்லைமோசமான வார்த்தைகளால் திட்டியும்,அடித்தும் துன்புறுத்தி வந்துள்ளார். வகுப்பில் அவனை குனியவைத்துமுதுகில் அமர்ந்து பாடம் எடுத்துள்ளார். இது பற்றி பெற்றோரிடம் தெரிவிக்கக் கூடாது எனமிரட்டியுள்ளார். 
கடந்த, 29ம் தேதி ஆசிரியரையும்தலைமை ஆசிரியரையும் சந்தித்து பேசினோம். உங்கள் மகனைப் பார்த்தாலே எரிச்சலாக இருக்கிறது. முகத்தை பார்த்தாலே கோபம் வருகிறது. வேறு பள்ளியில் சேர்த்து விடுங்கள்கடும் மன உளைச்சல் ஏற்படுத்துகிறான் என்று ஆசிரியர் மாரப்பன் கூறுகிறார். எங்களைப் போன்ற ஏழைகளுக்கு அரசு பள்ளி தான்அடைக்கலம் கொடுக்கிறது. 
அங்கு வரும் மாணவர்களுக்குநல்ல விஷயங்களை கற்றுக் கொடுத்துநன்கு படிக்க வைக்க வேண்டிய ஆசிரியர்கள்இதுபோல் நடந்து கொள்வது வேதனை அளிக்கிறது. ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 
பள்ளி தலைமை ஆசிரியர் நேருவிடம் கேட்டதற்குஆசிரியர் மாரப்பன்பிரவீன்குமார் மற்றும் அவரது பெற்றோரைதனித்தனியாக விசாரித்தேன். வகுப்பிலுள்ள, 44 மாணவர்களிடம் விசாரணை நடத்தினோம். 
விசாரணையில்புகார் உண்மையில்லை என தெரிந்தது. மாணவன் குறும்பு செய்ததால் கண்டித்துள்ளார். ஒரு ஆசிரியரின் ஸ்தானத்தில் இருந்துசிறு சிறு தண்டனைகளை மட்டுமே அவர் கொடுத்துள்ளார் என்றார்.
கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருள்முருகன் கூறுகையில்இப்பிரச்னை குறித்து எனக்கு புகார் வந்தது. அதன் அடிப்படையில்மாணவன்பெற்றோர்ஆசிரியரை விசாரணைக்கு உட்படுத்திஅதன் பின்உண்மை நிலவரத்தை தெரிந்துநடவடிக்கை மேற்கொள்ளப்படும்என்றார்.

No comments:

Post a Comment