Saturday, August 6, 2016

மேல்நிலை பள்ளி ஆசிரியர் கவுன்சிலிங் துவக்க

அரசு உயர்மேல்நிலை பள்ளி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங் இன்று துவங்குகிறது. 

குளறுபடியை தடுக்கஇணை இயக்குனர்கள் அதிரடி சோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு தொடக்கநடுநிலை பள்ளி ஆசிரியர்களுக்கான விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங், 3ம் தேதி துவங்கியது. இதை தொடர்ந்துஅரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி ஆசிரியர்களுக்குஇன்று முதல் கவுன்சிலிங் துவங்குகிறது. முதல் நாளில்,மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு இடமாறுதல் வழங்கப்படுகிறது. 
காலியிடங்களை மறைக்காமல்நேரடியாக,வெளிப்படையாக நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதனால்மாவட்டந்தோறும் மண்டல வாரியாகஇணை இயக்குனர்களுக்குகவுன்சிலிங் கண்காணிப்பு பணி வழங்கப்பட்டுள்ளது. 
கவுன்சிலிங் நடக்கும் இடங்களில்அதிரடி ஆய்வு மேற்கொள்ளவும்காலியிடங்களை மறைக்கும் கணினி அலுவலர் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது

No comments:

Post a Comment