Tuesday, August 9, 2016

நல்லாசிரியர் விருதுக்கு தகுதி பட்டியல் தயாரிக்க சிறப்புக் குழு

நல்லாசிரியர் விருது பெற விண்ணப்பித்துள்ளஆசிரியர்களின் தகுதிகளை ஆராய்ந்துஇறுதி பட்டியல் தயாரித்து பரிந்துரைக்கமாவட்ட அளவிலான சிறப்பு குழுஇன்று ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை சார்பில்செப்டம்பர் 5 ம் தேதிஆசிரியர் தின விழாவின் போதுசிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களை கவுரவிக்கநல்லாசிரியர் விருது வழங்குவது வழக்கம். இந்த விருதுக்கு தேர்வு செய்யும் ஆசிரியர்கள்நேரம் தவறாமைகற்பிக்கும் முறைபொதுத்தேர்வில் தேர்ச்சி சதவீதம்,நன்னடத்தைபணித்திறன் எனபல்வேறு விஷயங்களில்மதிப்பீடு பெற்றிருப்பவராக இருத்தல் அவசியம்.
இதுதவிரபணி அனுபவம் உள்ளிட்டபல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுதகுதியுள்ளோர் பட்டியல்,மாவட்ட கல்விக்குழு சார்பில் பரிந்துரைக்க வேண்டும். இதில்கோவைதிருப்பூர்நீலகிரி மாவட்டங்களில்கடந்தாண்டுதேர்வு குழு உறுப்பினருக்கேநல்லாசிரியர் விருது அளிக்கப்பட்டதாக,புகார் எழுந்தது. 
இதுசார்ந்துதமிழ்நாடு கலை ஆசிரியர்கள் நலசங்கம் சார்பில்கோர்ட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டு,நிலுவையில் உள்ளது. இந்நிலையில்நடப்பாண்டில் விருதுக்கு விண்ணப்பிக்கஇன்று (ஆக., 9) வரை,கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
முதன்மை கல்வி அலுவலர் அருள்முருகன் கூறுகையில்:
கோவை கல்வி மாவட்டத்தில்தொடக்க கல்விபள்ளிக்கல்விமெட்ரிக்ஆங்கிலோ இண்டியன் பள்ளிகளில் இருந்து, 46 பேர் விருதுக்கு விண்ணப்பித்துள்ளனர். இவர்களில்தகுதியுள்ள, 24 பேர் மட்டுமேபள்ளிக்கல்வித்துறைக்கு பரிந்துரைக்கப்படுவர். 
இதுசார்ந்த ஆய்வுக்கூட்டம்முதன்மை கல்வி அலுவலகத்தில் இன்று நடக்கிறது. இதில்தேர்வுக்குழு உறுப்பினர்களால்தகுதியுள்ளோரை அடையாளம் காணும் பணிகள் நடக்கும்என்றார்.

No comments:

Post a Comment