Wednesday, August 24, 2016

கட்டாய இடமாற்றம்; ஆசிரியர்கள் பதற்றம்

ஆசிரியர்கள் இடமாறுதல் கவுன்சிலிங், முடிவு கட்டத்தை எட்டியுள்ளது.

வரும், 27ம் தேதி கட்டாய இடமாற்றம் நடக்கிறது;இதில்ஆசிரியர்கள்பல்வேறு மாவட்டங்களுக்கு அதிரடியாக மாற்றப்பட உள்ளனர். அரசு பள்ளி ஆசிரியர்களுக்குஆண்டுக்கு ஒருமுறை விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங் நடக்கிறது. 
கடந்த, 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குஇந்த ஆண்டு கவுன்சிலிங்கில்முக்கிய காலியிடங்கள் மறைக்கப்படாமல்ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். வரும், 27 முதல், 29ம் தேதி வரைஅரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில்பணி நிரவல் எனப்படும்கட்டாய இடமாற்றம் செய்யப்படுகிறது.
அதிக அளவில்: 
ஒவ்வொரு பள்ளியிலும்மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்பஇத்தனை ஆசிரியர்கள் இருக்க வேண்டும் என்ற விகிதாச்சாரம் உள்ளது. அதையும் மீறிசில மாவட்டங்களில்அதிகளவில் ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். அவர்களை கணக்கெடுத்துஆசிரியர் பற்றாக்குறை உள்ள மாவட்ட பள்ளிகளுக்கு மாற்றுவதேபணி நிரவல் கலந்தாய்வு எனகூறப்படுகிறது.
அதன்படிபள்ளிக் கல்வித்துறை எடுத்துள்ள பட்டியலில், 3,000 ஆசிரியர்கள் வரைசில மாவட்டங்களில்,கூடுதலாக பணியாற்றுவது தெரியவந்துள்ளது. எனவேகூடுதல் ஆசிரியர் இடங்களைஆசிரியர் தேவைப்படும் பல்வேறு மாவட்ட பள்ளிகளுக்கு மாற்ற முடிவு செய்துள்ளனர். விழுப்புரம்,திருவண்ணாமலைகிருஷ்ணகிரிதிருவள்ளூர்தர்மபுரி போன்ற மாவட்டங்களில்காலியிடங்கள் அதிகமாக உள்ளன. 
எனவேதென் மாவட்டங்கள் மற்றும் மத்திய மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள்வரும், 27ம் தேதி முதல்எந்த மாவட்டத்திற்கும் அதிரடியாக மாற்றப்படலாம்.
எப்படியாவது: 
அதேநேரம்பள்ளிக் கல்வித் துறையில் அதிகமாக பணியாற்றும் தென் மாவட்ட ஆசிரியர்கள்,எப்படியாவதுசொந்த மாவட்டம் அல்லது அதையொட்டிய பகுதிகளுக்கு செல்லஅதிகாரிகளை அணுகியுள்ளனர். ஆனால்சிபாரிசு கூடாது எனஅரசிடமிருந்து கண்டிப்பான உத்தரவு உள்ளதால்,அதிகாரிகளுக்கு நெருக்கடியான நிலையும்ஆசிரியர்கள் மத்தியில் பதற்றமான சூழலும் ஏற்பட்டுள்ளது

No comments:

Post a Comment