Tuesday, August 23, 2016

பட்டதாரி ஆசிரியருக்கான கவுன்சிலிங் துவங்கியது

 பட்டதாரி ஆசிரியர்களுக்குமாநில அளவிலான பதவி உயர்வு கவுன்சிலிங்நேற்று துவங்கியது. 

பட்டதாரி ஆசிரியர்கள்முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறுவதற்கான மாநில அளவிலான கவுன்சிலிங்ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் நேற்று துவங்கியது. இதில் மாவட்டத்துக்குள்மாவட்டம் விட்டு மாவட்டத்துக்கு கவுன்சிலிங் நடைபெற்றது. 
இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். முன்னதாக முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் மாவட்டத்துக்குள் பணியிட மாறுதல் பெறுவதற்கான கவுன்சிலிங், 20ம் தேதி நடந்தது. இதில், 56 பணியிடங்களில், 49இடங்கள் பூர்த்தியானது. மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங், 21ம் தேதி நடந்தது. 
இதில், 20 பேர் மாறுதல் பெற்று சென்றனர். வேறு மாவட்டங்களில் இருந்து, 14 பேர் ஈரோடு மாவட்டத்துக்கு மாறுதல் பெற்றனர்.

No comments:

Post a Comment