சேலம் மாவட்ட அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங் ஆக., 20ம் தேதி தொடங்குகிறது.
இதுகுறித்து, சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி வெளியிட்டுள்ள அறிக்கை:
சேலம் மாவட்ட அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான இடமாறுதலுக்கான கவுன்சிலிங் வரும், 20ம் தேதி தொடங்குகிறது. அன்று, அரசு நகராட்சி மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர்கள் மாவட்டத்துக்குள் மாறுதல் கவுன்சிலிங், 21ம் தேதி முதுகலை ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல், 22ம் தேதி முதுகலை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கவுன்சிலிங் நடக்கிறது.
ஆக., 23ம் தேதி உடற்கல்வி ஆசிரியர்கள், தையல், இசை, கலை ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டத்துக்குள் மாறுதலும், 24ம் தேதி மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலும் நடக்கிறது.
27 ம்தேதி முதல் 29ம் தேதி வரை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கவுன்சிலிங், செப்டம்பர் 3ம் தேதி மாவட்டத்துக்குள் பட்டதாரி ஆசிரியர் மாறுதலும், 4ம் தேதி மாவட்டம் விட்டு மாவட்டம் பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதலும், 6 ம்தேதி இடைநிலை ஆசிரியர், உடற்கல்வி மற்றும் சிறப்பாசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு கவுன்சிலிங் நடக்கிறது.
கவுன்சிலிங் அனைத்தும், சேலம் நான்கு ரோட்டில் உள்ள சிறுமலர் மேல்நிலைப் பள்ளியில் நடக்கிறது. மேற்கண்ட மாறுதல்களுக்கு விண்ணப்பித்த ஆசிரியர்கள், குறிப்பிட்ட நாட்களில் கலந்து கொண்டு பயனடையலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment