Wednesday, June 11, 2014

சான்றிதழ் கேட்ட ஆசிரியருக்கு அடி

திருச்சியில் பென்சன் பலன் அடைய ஒரிஜினல் சான்றிதழ்களை கேட்ட ஓய்வு ஆசிரியரை பள்ளி தாளாளர் உட்பட நான்கு பேர் சேர்ந்து சரமாரியாக தாக்கினர்.
திருச்சி ஜங்சன் அருகே உள்ள ஆர்சி மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசியராக பணியாற்றிவர் லூர்துசாமி மரியதாஸ் அந்துவான்(58). கடந்த மே மாதம் ஓய்வு பெற்றார். ஆனால் 15 மாதங்களுக்கும் மேலாக சம்பளம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் பல்வேறு வழிகளில் தனது ஊதியத்தை பெற முயற்சித்து வருகிறார். ஆனால் பள்ளி நிர்வாகம் ஏமாற்றி வருவதாக தெரிகிறது. இந்நிலையில், அரசு பலன்களை அனுபவிக்க பள்ளிக்கு சென்று தனது ஒரிஜினல் சான்றிதழ்களை கேட்டார். அப்போது, பள்ளியின் தாளாளர் சூசைராஜ், தலைமையாசிரியர் குணசேகர் மற்றும் இரண்டு பேர் என 4பேர் சேர்ந்து சான்றிதழை தர மறுத்து லூர்துசாமி மரியதாஸ் அந்துவானை தாக்கினர். இதில் காயமடைந்த அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். இச்சம்பவம் குறித்து கண்டோன்மென்ட் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment