என்.ஜி.ஓ.க்களுக்கு எதிராக ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி எஸ்.எஸ்.ஏ., சி.இ.ஓ. அலுவலகம் முன் உண்டு உரைவிடப்பள்ளி நடத்தும் சில முறைகேடான தொண்டு நிறுவன நபர்களை கண்டித்து தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் ஆர்பாட்டம் நடந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 60க்கும் மேற்பட்ட உண்டு உறைவிட பள்ளியை என்.ஜி.ஓ.க்கள் நடத்தி வந்தனர். இவற்றில், முறைகேடு நடப்பதாக அரசுக்கு அடிக்கடி புகார் சென்றது. இதனால், கடந்த மாதம் 50க்கும் மேற்பட்ட உண்டு உறைவிடப்பள்ளி நடத்தும் தொண்டு நிறுவனங்களை மூட அரசு உத்தரவிட்டது.
இதனைக் கண்டித்தும், சி.இ.ஓ. பொன்குமாரை கண்டித்தும் கிருஷ்ணகிரியில் தொண்டு நிறுவனங்களை நடத்தும் என்.ஜி.ஓ.க்கள் சிலர் கண்டன நோட்டீஸ்களை ஒட்டி வந்தனர். இதனை கண்டித்து நேற்று தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பில் எஸ்.எஸ்.ஏ., சி.இ.ஓ. அலுவலகம் முன் 300க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கூடி என்.ஜி.ஓ.க்களுக்கு எதிராக கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மோசடியில் ஈடுபடும் என்.ஜி.ஓ.க்கள் குறித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் கோவிந்தராசு தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் ராஜேந்திரன் வரவேற்றார். மேலும், மாநில துணைத்தலைவர் சென்னப்பன், மாநில பொதுக்குழு உறுப்பினர் பிரபாவதி, மாவட்டத் தலைவர்கள் பொன்னுசாமி, இளங்கோ, பிரபாகரன், மாவட்ட பொருளாளர் நடராஜன், கோபி உள்பட பலர் பங்கேற்றனர்.

No comments:
Post a Comment