ஓமலூர் அருகே, ஆசிரியர்களை இடமாற்றம் செய்யக்கோரி,பள்ளியை முற்றுகையிட்டு, மக்கள் போராட்டம் நடத்தினர்.
சேலம் மாவட்டம், ஓமலூர் ஒன்றியம், புதூர்காடம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 150க்கும் மேற்பட்டோர் படிக்கின்றனர். நேற்று காலை, அப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியரின் பெற்றோர், 30க்கும் மேற்பட்டோர், பள்ளியை முற்றுகையிட்டனர். பின், தலைமை ஆசிரியர் சுமதியிடம், புகார் மனு அளித்தனர்.
அதில், 50 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள பள்ளியில், கல்வியையும், ஒழுக்கத்தையும் கற்றுத்தர வேண்டிய ஆசிரியர் ஒருவரும், ஆசிரியை ஒருவரும், தவறான முறையில் செயல்பட்டு, முகம் சுளிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். அவர்களை, வேறு பள்ளிக்கு மாற்ற, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தெரிவித்திருந்தனர்.
இதுகுறித்து மக்கள் கூறியதாவது:
பள்ளி நேரத்தில், இருவரும் அடிக்கடி மொபைலில் பேசிக்கொண்டிருப்பதால், மாணவ, மாணவியரின்,கல்வி பாதிப்பதாக, குழந்தைகள் எங்களிடம் தெரிவித்தனர். இதுகுறித்து, பலமுறை தலைமை ஆசிரியரிடம், வாய்மொழியாக தெரிவித்தும், பலன் இல்லை.
அதனால், இன்று (நேற்று) பள்ளியை முற்றுகையிட்டு, மனு வழங்கினோம். நடவடிக்கை இல்லை என்றால், போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment