Thursday, October 13, 2016

பஞ்சப்படி இழுத்தடிப்பு; ஆசிரியர்கள் புலம்பல்!

அடிப்படை ஊதியத்தில் இருந்து வழங்கப்படும் அகவிலைப்படி தொகை,மூன்று மாதங்களுக்கு மேலாகியும்வழங்காமல் இழுத்தடிப்பதாக,ஆசிரியர்கள் புலம்புகின்றனர். 

தமிழகத்தில், 52 ஆயிரத்துக்கும் மேற்பட்டஅரசுஅரசு உதவி பெறும்சுயநிதி பள்ளிகள் உள்ளன. இதில்,அரசுஅரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்குமாதச் சம்பளம் அல்லாமல்,போனஸ்பயணப்படி உள்ளிட்டசில சலுகைகள் வழங்கப்படும். 
இதில்அகவிலைப்படியாகஅடிப்படை ஊதியத்தில் இருந்துகுறிப்பிட்ட சதவீத தொகைஜூன் மற்றும் ஜனவரி மாதங்களில் வழங்கப்படும். நடப்பு கல்வியாண்டு துவங்கிநான்கு மாதங்களுக்கு மேலாகியும்,அகவிலைப்படி தொகை தராமல் இழுத்தடிப்பதாகஆசிரியர்கள் புலம்புகின்றனர்.
இதுகுறித்துஆசிரியர் சங்க நிர்வாகிகள் வைக்கும் கோரிக்கை:
ஆசிரியர்களுக்குதீபாவளி போனஸ் வழங்கப்படுவதில்லைஆண்டுக்கு இருமுறை, 6 சதவீத அகவிலைப்படி வழங்கப்படும். 
இந்த தொகையைத் தந்தால்பண்டிகைக்கால செலவுகளுக்கு உதவியாக இருக்கும். இத்தொகையை விரைவில் தரகல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

No comments:

Post a Comment