Friday, October 28, 2016

’எமிஸ்’ பதிவு குளறுபடி; ஆசிரியர்கள் திணறல்

பள்ளி மாணவர்களுக்கு, ஒருங்கிணைந்த அடையாள எண் வழங்கும், ’எமிஸ்’ என்ற கல்வி மேலாண்மை திட்டத்தில், மாணவர் மற்றும் பள்ளி பெயர்களில் குளறுபடி ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசு நிதியுதவியுடன்அனைவருக்கும் கல்வி இயக்ககமானஎஸ்.எஸ்.ஏ.மூலம்எமிஸ் கல்வி மேலாண்மை தொழில்நுட்ப திட்டம்,அமலுக்கு வந்துள்ளது. 
இத்திட்டத்தில்மாணவர்களின் பெயர்படிக்கும் பள்ளிவகுப்புமுகவரிபெற்றோரின் மொபைல் போன் எண் உள்ளிட்ட விபரங்கள் பதிவு செய்யப்படுகின்றன. 
இப்பதிவில்மாணவர்களின் ஆதார் எண் இணைப்புபுதிய மாணவர்களின் விபரங்களை சேர்த்தல்பள்ளி மாறிய மாணவர் விபரங்களை மாற்றுதல் போன்ற பணிகளுக்குபள்ளிகளுக்கு இம்மாத இறுதி வரை கெடு விதிக்கப்பட்டு உள்ளது. 
ஆனால்பெரும்பாலான தொடக்கநடுநிலை பள்ளிகள் இந்த பணிகளை முடிக்கவில்லை. ஆசிரியர்களுக்கு பொம்மலாட்ட பயிற்சி அளிக்கும்எஸ்.எஸ்.ஏ.அதிகாரிகள்கணினியை இயக்கவும்மாணவர் விபரங்களை பதியவும் பயிற்சி அளிக்கவில்லை எனஆசிரியர்கள் குமுறுகின்றனர். 
பயிற்சி அளிக்காமல்எமிஸ் திட்டத்தில் மாணவர் பெயர்களை பதிவு செய்ததால்பல மாவட்டங்களில்மாணவர்களின் பெயரும்அவர்கள் படிக்கும் பள்ளியும் மாறிமாறி பதிவாகி உள்ளது. அதனால்ஆசிரியர்கள்தனியார் கணினி மையங்களை அணுகி உள்ளனர். 
கட்டண அடிப்படையில்அங்குள்ள ஊழியர்கள்கல்வித் துறையின் இணையதளத்தில்பெயர்களை பதிவு செய்கின்றனர். வரும் காலங்களிலாவதுஇது போன்ற பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment