நீலகிரி மாவட்ட அனைவருக்கும் இடை நிலை கல்வித் திட்டத்தின் கீழ், கணித பட்டதாரி ஆசிரியர்களுக்கான, பணியிடைப் பயிற்சி, ஊட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, கூடலுார் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் நடந்து வருகிறது.
பயிற்சியில் பாலின பாகுபாடு தவிர்த்தல், பாலின கண்ணோட்டம், பெண்களுக்கு எதிரான கொடுமைகள்,பள்ளிக் கல்வியில் பாலின பாகுபாட்டை நீக்க வழிமுறைகள், பெண்கள் குறித்த உலகப்பார்வை,பெண்களுக்கான ஆற்றல் மிகுமை, வேலை வாய்ப்பு தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்டன.
பயிற்சியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி, உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் ஆகியோர் துவக்கி வைத்தனர். முதன்மை கருத்தாளர்களாக அகிலா,முத்துமாரியப்பன், சுப்ரமணியம் ஆகியோர் செயல்பட்டனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராமச்சந்திரன் செய்திருந்தார்.
No comments:
Post a Comment