எச்சரிக்கை விடுத்த பின்னரும் வகுப்பறையில் மொபைல் போனை பயன்படுத்திய, அரசு பள்ளி ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.
பள்ளி நேரத்தில் வகுப்பறையில் ஆசிரியர்கள் மொபைல் போனில் பேசுவது, பயன்படுத்துவது கூடாது என, அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகள், மாநகராட்சி, நகராட்சி பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை, கடந்தவாரம் சுற்றறிக்கை அனுப்பியது.
இந்நிலையில், நேற்று முன்தினம் பள்ளிகளில் நடந்த ஆய்வில், பள்ளி நேரத்தில் வகுப்பறையில் மொபைல் போன் பயன்படுத்தியதாக, கவுந்தப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியை சேர்ந்த நான்கு ஆசிரியர்கள், அந்தியூர் புதுப்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியை சேர்ந்த இரண்டு ஆசிரியர்கள், மாணிக்கம்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் என, மொத்தம் ஏழு பேர் கண்டுபிடிக்கப்பட்டனர்.
இவர்களிடம் விளக்கம் கேட்டு, ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். வகுப்பறையில் ஆசிரியர்கள் மொபைல் போன் பயன்படுத்துகின்றனரா? என,முதன்மை கல்வி அலுவலர் மட்டுமின்றி, மாவட்ட கல்வி அலுவலர்களும் ஆய்வு செய்வர் என, பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment