Saturday, September 10, 2016

அரசு ஆசிரியர்களுக்கு கற்பித்தல் பயிற்சி

கவுண்டம்பாளையத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடந்த முகாமைபெரியநாயக்கன்பாளையம் வட்டார உதவி தொடக்க கல்வி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி துவக்கி வைத்தார்.

இதில்மாணவர்களின் அறிவுத் திறனை மேம்படுத்ததமிழக பள்ளிக்கல்வித் துறையால் வழங்கப்பட்டுள்ள உபகரணங்களை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து விளக்கப்பட்டது. கணக்குகளை எளிய முறையில் கற்பித்தல் குறித்து ஆசிரிய பயிற்றுனர்கள் தமிழ்செல்விவளர்மதி ஆகியோர் விளக்கினர்.
முகாமைகோவை மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் உதவி திட்ட அலுவலர் பெல்ராஜ்,மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார் ஆகியோர் நெறிப்படுத்தினர். நுாற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment