புதுச்சேரியில், 19 பேருக்கு மாநில நல்லாசிரியர் விருதுகளை, சட்டசபையில் முதல்வர் நாராயணசாமி அறிவித்தார்.
சட்டசபையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தின்போது,நல்லாசிரியர் விருதை அறிவித்து, முதல்வர் நாராயணசாமி பேசியது:
கல்வித்துறை சார்பில், ஆண்டுதோறும் டாக்டர் ராதாகிருஷ்ணன் பெயரில் 8 ம் வகுப்பு வரையில் பாடம் எடுக்கும் தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் இருவர், 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையில் பாடம் நடத்தும் ஆசிரியர்கள் இருவர் என, நான்கு பேருக்கு விருதுகள் தரப்படுகின்றன.
முதல்வரின் சிறப்பு விருதுகள், மொழி ஆசிரியர் மற்றும் தொழிலாசிரியர் தலா ஒருவர். பெண் ஆசிரியைகள் 4 பேர் என, 6 பேருக்கு வழங்கப்படுகிறது. கல்வி அமைச்சரின் வட்டார விருதுகள்,புதுச்சேரியை சேர்ந்த 6 பேர், காரைக்கால் ஆசிரியர்கள் இருவர், மாகியை சேர்ந்த ஒருவர் என, மொத்தம்19 பேருக்கு விருதுகள் வழங்கப்படுகிறது. ஏனாமில் இருந்து பட்டியல் வரவில்லை வந்ததும் அறிவிக்கப்படும். விருதுடன், ரூ.10,000 ரொக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.
டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது தொடக்க நிலை பிரிவில், பெத்துசெட்டிபேட்டை அரசு தொடக்க பள்ளி தலைமை ஆசிரியை மதி, கொம்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் தேசிங்கு ஆகியோரும், இடைநிலை பிரிவில், கதிர்காமம் தில்லையாடி வள்ளியம்மை அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை ஜெகசிற்பியன் கொல்பேர்ட், காரைக்கால் விழுதியூர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராமதாஸ் ஆகியோரும் பெறுகின்றனர்.
முதல்வர் சிறப்பு விருதுகள் லாஸ்பேட்டை நாவலர் நெடுஞ்செழியன் அரசு பள்ளி தமிழ் விரிவுரையாளர் சேகர் மற்றும் பெண் ஆசிரியைகளுக்கான விருதுகளை, திரு.வி.க., அரசு உயர்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியை லட்சுமி, கொத்தபுரிநத்தம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை மல்லிகா கோபால், கணுவாப்பேட்டை அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் ராஜவள்ளி, காரைக்கால் அரசுத் தொடக்கப் பள்ளி தையல் ஆசிரியை ஜமுனா, காரைக்கால் கா.மன்னவன் அரசு நடுநிலைபப்பள்ளி கலை ஆசிரியர் (இசை) ரங்கராஜன் ஆகியோர் பெறுகின்றனர்.
கல்வி அமைச்சர் வட்டார விருதுகள் புதுச்சேரி திருவள்ளுவர் அரசு பெண்கள் பள்ளி விரிவுரையாளர் சிவராமரெட்டி, சொசியத்தே புரோகிரஸ்தே அரசு உதவி பெறும் பள்ளி பட்டதாரி ஆசிரியர் ராஜேந்திரன்,முத்திரையர்பாளையம் ஆயி அம்மாள் அரசு நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் செந்தில்குமார்,மதகடிப்பட்டுபாளைம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அய்யம்பெருமாள், கிருமாம்பாக்கம் அம்பேத்கர் அரசு மேல்நிலைப் பள்ளி விரிவுரையாளர் கிருஷ்ணகுமார், கணுவாப்பேட்டை அரசு உயர்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் அந்தோணிசாமி, காரைக்கால் நெடுங்காடு நேரு அரசு பள்ளி பட்டதாரி ஆசிரியர் முருகன், கரைக்கால் தேனுார் அரசு மேல்நிலைப்பள்ளி விரிவுரையாளர் சிவக்குமார்,மாகே குமரன் அரசு மேல்நிலைப்பள்ளி விரிவுரையாளர் சந்திரன் ஆகிய 19 பேருக்கு, ஆசிரியர் தின விழாவில் நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.
மேலும், கடந்த 2014ம் ஆண்டு தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற இரு ஆசிரியர்களும், புதுச்சேரி மாநிலத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றி ஓய்வு பெறும் 159 ஆசிரியர்கள்,ஆசிரியர் தின விழாவில் கவுரவிக்கப்படுவர்
No comments:
Post a Comment