மாணவர்கள் எழுதிய விடைத்தாள்களை திருத்தும் போது,தவறு செய்யும் ஆசிரியர்களுக்கு, குஜராத் மாநில கல்வித் துறை அபராதம் விதித்துள்ளது.
குஜராத்தில், முதல்வர் விஜய் ருபானி தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது; இங்கு, 10 மற்றும் பிளஸ்2 மாணவர்களின் விடைத் தாள்களை திருத்தும் ஆசிரியர்கள், மதிப்பெண்களை கூட்டுவதில் அடிக்கடி தவறு செய்வதாக புகார் எழுந்துள்ளது.
விடைத்தாள் திருத்தும் மையங்களில், மதிப்பெண்களை சரிபார்க்கும் பணியும் நடக்கிறது; இதையும் மீறி, தேர்வு முடிவு கள் வெளியான பின், மதிப்பெண் மறு கூட்டலுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கின்றனர். பெரும்பாலான ஆசிரியர்கள், மதிப்பெண் கூட்டலில் தவறு செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நேரம், உழைப்பு வீணாவதுடன், மாணவர்களின் எதிர்காலமும் பாதிக்கப்படுகிறது.
இதனால், நடந்து முடிந்த பொதுத் தேர்வுகளின் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்களில், மதிப்பெண் கூட்டலில் தவறு செய்தவர்களுக்கு, நேரில் வரும்படி, கல்வித்துறை சார்பில், நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
ஒரு மதிப்பெண் குறைந்திருந்தால், 100 ரூபாயும், ஐந்து மதிப்பெண் குறைந்திருந்தால், 500 ரூபாயும்,அவர்களிடம் அபராதமாக வசூலிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment