Friday, September 30, 2016

இரட்டிப்பு பணிச்சுமை; ஆசிரியர்கள் அதிருப்தி!

உள்ளாட்சி தேர்தலில்இருகட்ட தேர்தல் பணிகளிலும்,குறிப்பிட்ட ஆசிரியர்களையே நியமித்துள்ளதால்கர்ப்பிணிகள்,பாலுாட்டும் ஆசிரியர்கள்அதிக பணிச்சுமையால்அவதிப்பட வேண்டியிருக்கும் என்றகுற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழகம் முழுக்கஇரண்டு கட்டமாகஉள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. கோவை மாவட்டத்தில்தேர்தல் பணிகளில் ஆசிரியர்கள் உட்படஅரசு ஊழியர்கள், 24 ஆயிரம் பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். கல்வித்துறை பரிந்துரைத்தபட்டியல் அடிப்படையிலேமாவட்ட நிர்வாகம்ஆசிரியர்களுக்கு தேர்தல் பணிகளை ஒதுக்கியுள்ளது.
இதில்முதற்கட்ட தேர்தல் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களேஇரண்டாம் கட்ட தேர்தல் பணிகளுக்காகவும்வேறு ஓட்டுச்சாவடிகளுக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால்தொடர்ந்து நான்கு நாட்கள்வீடு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும்கர்ப்பிணிகள்பாலுாட்டும் தாய்மார்களுக்குதேர்தல் பணிகளில் இருந்து விலக்கு அளிக்க வேண்டுமென்றநீண்டநாள் கோரிக்கை உள்ளது. இதை தேர்தல் ஆணையம் கண்டு கொள்ளாமல்,பணிகளில் ஈடுபடுத்துவதால்பெருமளவில் பாதிக்கப்படுவதாகபெண் ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.
தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில செய்தி தொடர்பாளர் மைக்கேல்ராஜ் கூறுகையில், &'&'இரண்டு கட்டமாக நடக்கும் தேர்தல் பணிகளில்ஆசிரியர்களை சுழற்சி முறையில் ஈடுபடுத்தி இருக்கலாம். முதற்கட்ட தேர்தலுக்கு, 16ம் தேதியே
ஓட்டுச்சாவடி செல்லும் ஊழியர்கள்தேர்தல் முடித்துஇரண்டாம் கட்ட தேர்தலுக்காகஅடுத்த ஓட்டுச்சாவடிக்குமுன் ஏற்பாடுகள் செய்யகிளம்ப வேண்டியிருக்கும். பெண் ஆசிரியர்கள் பலர்,ஆனைமலைவால்பாறை உள்ளிட்டநீண்ட துார பயண இடங்களுக்குதேர்தல் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும்நடப்பு கல்வியாண்டு துவக்கத்தில்பணி ஓய்வு பெற்ற ஆசிரியர்கள்கல்வியாண்டு முடியும் வரைபணியில் நீட்டிக்கப்பட்டுள்ளனர். இவர்களும்இரு கட்ட தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால்கடும் பணிப்பளுவை சந்திக்க வேண்டியுள்ளது. இதைமாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கண்காணித்துஉரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்என்றார்.

No comments:

Post a Comment