கம்ப்யூட்டர் வழியில் பாடங்களை எளிமையாக கற்பிப்பது குறித்து, திருப்பூர் மாவட்ட ஆசிரியர்களுக்கு, பயிற்சி அளிக்கப்பட்டது.
மாணவர்கள் பாடங்களை சிரமமின்றி கற்க, தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த, அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்டம் (எஸ்.எஸ்.ஏ.,) சார்பில், கம்ப்யூட்டர் வழியில் பாடங்களை கற்பித்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
சில மாதங்களுக்கு முன், ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும், தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, சென்னையில் மூன்று நாள் பயிற்சி அளிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, திருப்பூர் மாவட்ட ஆசிரியர்களுக்கான கம்ப்யூட்டர் வழி கற்பித்தல் பயிற்சி முகாம், ஜெய்வாபாய் பள்ளியில்,கடந்த, 10ல் நடந்தது. முதன்மை கல்வி அலுவலர் முருகன், பயிற்சியை துவக்கி வைத்தார்.
எஸ்.எஸ்.ஏ., கல்வி திட்ட உதவி ஒருங்கிணைப்பாளர் கணேஷ்வரி, பயிற்சியின் நோக்கம் குறித்து பேசினார். சென்னையில் பயிற்சி பெற்ற ஏழு ஆசிரியர்கள், மற்ற ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தனர்.
இரண்டு நாட்கள் நடந்த பயிற்சி முகாமில் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூகஅறிவியல் பாடங்களை, மாணவர்களுக்கு புரியும் வகையில், எளிமையான முறையில், கம்ப்யூட்டர் துணையுடன் கற்பிப்பது குறித்து, செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
No comments:
Post a Comment