வகுப்பறையில் கற்பித்தல் கருவிகளின் துணையுடன், பாடம் நடத்த வேண்டும் என ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் சமச்சீர் கல்வித்திட்டம் நடைமுறைக்கு வந்தபின், செயல்வழி கற்றல் அட்டையை பயன்படுத்தி, தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கப்படுகிறது. நான்காம் வகுப்பு வரை, தேர்வு நடைமுறைகள் இல்லை. இதனால், மாணவர்கள் கல்வியில் பின்தங்குவதால், கற்றல் அடைவுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
கோவை மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், அரசு, அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கு, கற்றல் அடைவுத்தேர்வு, செப்டம்பரில் நடந்தது. இதில், ஆங்கிலம், கணிதம், அறிவியல் பாடங்களில், மாணவர்கள் பின்தங்கியிருப்பது தெரியவந்தது.
பாடத்துக்குப் பின், கேள்விகளை மாற்றி கேட்டால், மாணவர்கள் தடுமாறுவதாக, ஆசிரியர் பயிற்றுனர்கள் தெரிவித்தனர். இதற்கு, பல பள்ளிகளில், கற்பித்தல் கருவிகள் இல்லாமல் பாடம் நடத்துவதே காரணம் என்ற புகார் எழுந்துள்ளது. எனவே, கற்பித்தல் கருவிகளை பயன்படுத்தி, பாடம் நடத்த ஆசிரியர்களுக்கு அதிகாரிகள் உத்தர விட்டுள்ளனர்
No comments:
Post a Comment