Tuesday, November 29, 2016

டி.இ.ஓ.,வை கண்டித்து உண்ணாவிரதம்; ஆசிரியர் சங்கங்கள் அறிவிப்பு!

தொடக்கக் கல்வி அலுவலர் காந்திமதியைக் கண்டித்துவரும், 10ம் தேதி முதல்தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதாகதொடக்கப் பள்ளி ஆசிரியர் இயக்கங்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலர் ராஜசேகரன் வெளியிட்ட அறிக்கை:
சூலுார் ஒன்றியத்தில்தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்குநான்கு ஆண்டுகளுக்கும் மேலாகஊக்கத்தொகை நிலுவைப்பணம் தரவில்லை. இதைக் கேட்கபள்ளி நேரம் முடிந்த பின்உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகத்தைஆசிரியர்கள் முற்றுகையிட்டனர்.
இப்பிரச்னைக்கு தீர்வு காணாமல்தமிழக ஆசிரியர் கூட்டணிசூலுார் வட்டார தலைவர் விஜயலட்சுமிசெயலர் ஹென்றி விக்டர் ஆகிய இருவரையும்பணியிடை நீக்கம் செய்துடி.இ.ஓ.காந்திமதி உத்தரவு பிறப்பித்தார்.
மேலும்வினாத்தாள் அச்சடிக்கமாணவர்களிடம் பணம் வசூல் செய்ய கட்டாயப்படுத்துவது தொடர்பாக புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இதைக் கண்டித்துகடந்த 18ம் தேதிடவுன்ஹால்டி.இ.ஓ.அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதன் பின்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவேவரும், 10ம் தேதி முதல்தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தமுடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில்தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணிதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி உள்ளிட்டஐந்து சங்கங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர். இவ்வாறுஅதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment