தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி சார்பில், பொது மாறுதல் கலந்தாய்வு,விரைவில் நடத்தக் கோரி, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், உதவி தொடக்க கல்வி அலுவலகம்,முன்பு நேற்று நடந்தது.
தமிழகம் முழுவதும், இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு,ஆண்டுதோறும், மே மாதம் நடத்துவது வழக்கம். சட்டசபை தேர்தல் காரணமாக, நடப்பாண்டில் மே மாதம், கலந்தாய்வு நடக்கவில்லை. பள்ளி துவங்கி, ஒரு மாதத்துக்கு மேலாகியும்,கலந்தாய்வு நடத்தும் தேதி குறித்த அறிவிப்பை,பள்ளி கல்வித்துறை வெளியிடவில்லை.
இதனால், காலிப்பணியிடம் உள்ள பள்ளிகளில், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும். இதை கண்டித்து,கோவை முழுவதும் உள்ள, 12 உதவித்தொடக்க கல்வி அலுவலர் அலுவலகம் முன், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை, நேற்று நடத்தினர்.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி மாவட்ட செயலாளர் கருப்புசாமி கூறுகையில், தமிழகம் முழுவதும், 350 உதவித்தொடக்க கல்வி அலுவலர் அலுவலகம் முன், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
மாணவர்களின் சேர்க்கை விகிதத்தை பொறுத்து, காலிப்பணியிடம் மாறுபடும். எனவே, காலிப்பணியிடம் வெளியிடும் போது, எவ்வித ஒளிவுமறைவும் இருக்கக் கூடாது. விரைவில், கலந்தாய்வு நடக்கும் தேதியை, அரசு வெளியிட வேண்டும், என்றார்.
No comments:
Post a Comment