பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த காந்திநகர் துவக்கப்பள்ளியில்,மாணவர்கள் யாரும் படிக்காத நிலையில், அங்கு ஒரு தலைமையாசிரியர் மற்றும் ஒரு சத்துணவு ஆயா பணிபுரிந்து வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பாப்பம்பாடி பஞ்.,க்கு உட்பட்டது காந்தி நகர். இங்கு கடந்த, 1984ம் ஆண்டு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில், 95 மாணவர்கள் வரை படித்த இப்பள்ளியில், தற்போது ஒரு மாணவர் கூட இல்லாத நிலையில், பள்ளி இயங்கி வருகிறது.
கடந்த ஆண்டு, ஐந்தாம் வகுப்பில், இரண்டு மாணவர்களும், மற்ற வகுப்பில், இரண்டு மாணவர்களும் படித்து வந்த நிலையில், அவர்களும் நடப்பாண்டு வேறு பள்ளிகளுக்கு சென்று விட்டதால், மாணவர்கள் யாருமின்றி வகுப்பறை வெறிச்சோடியுள்ளது. இப்பள்ளியில் பாபு என்பவர் தலைமையாசிரியராக பணிபுரிந்து வருகிறார். சத்துணவு ஆயாவாக, செம்மரம் வெட்டச் சென்று ஆந்திர மாநிலத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட அரசநத்தம் கிராமத்தை சேர்ந்த சிவக்குமார் என்பவரின் மனைவி விஜயா என்பவர் பணியில் உள்ளார்.
இப்பள்ளி வளாகத்திலேயே குழந்தைகள் நல மையமும் செயல்பட்டு வருகிறது. இம்மையத்திற்கு குழந்தைகள் யாரும் வராததால் பூட்டியே உள்ளது. பள்ளியில் மாணவர்களை சேர்க்கும்படி பெற்றோர்கள் மட்டும் ஊரில் உள்ள முக்கிய பிரமுகர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தலைமையாசிரியர் பாபு கூறுகிறார்.
இதேபோல், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த கோட்டமேடு என்ற துவக்கப்பள்ளியிலும், இரண்டு மாணவர்கள் மட்டுமே படித்து வருகின்றனர். அங்கு சபிதா என்பவர் தலைமையாசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
No comments:
Post a Comment