Saturday, July 9, 2016

ஆயாக்களுக்கான மரியாதை கூட இல்லை; ஆசிரியைகள் கவலை

 மாநகராட்சி பள்ளிகளில், துப்புரவு பணி செய்யும் ஆயாக்களுக்கு இருக்கும் மரியாதைகூட, எங்களுக்கு இருப்பதில்லை என, மழலையர் பள்ளி ஆசிரியைகள் கவலை தெரிவித்துள்ளனர்.

சென்னை மாநகராட்சியில், 170 பள்ளிகளில்மழலையர் வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன. அந்த பள்ளிகளில்தொகுப்பு ஊதிய அடிப்படையில், 200க்கும் மேற்பட்ட ஆசிரியைகள் பணியாற்றி வருகின்றனர். அதிகபட்சமாக மாதம், 12 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெறுகின்றனர்.
ரூ.1 லட்சம் வரை
தற்காலிக பணி அடிப்படையில்ஆசிரியைகளை பணி நியமனம் செய்யகவுன்சிலர்களும்உதவி கல்வி அதிகாரிகளும், 50 ஆயிரம் ரூபாய் முதல்ஒரு லட்சம் ரூபாய் வரை லஞ்சம் வாங்கியுள்ளனர். தற்போது,பணி நிரந்தரம் செய்யமேலும் ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்பதாக கூறப்படுகிறது. மாநகராட்சி நிர்வாகத்திற்குமழலையர் பள்ளி ஆசிரியைகளை பணி நிரந்தரம் செய்யும் திட்டம் இல்லை. இந்த நிலையில்பணி நிரந்தரம் செய்வதாகக் கூறிபணம் கேட்பதால்ஆசிரியைகள் குழப்பம் அடைந்துள்ளனர்.
மேயரின் கவனத்திற்கு
மழலையர் பள்ளி ஆசிரியைகள் கூறியதாவது:
எங்களுக்கு மேஜைநாற்காலிமதிய உணவருந்த இடம் எனஎந்த கட்டமைப்பு வசதிகளையும்மாநகராட்சி கல்வித்துறை செய்து தரவில்லை. ஆனால், 5ம் வகுப்பு வரை வகுப்பு எடுக்ககல்வித்துறை அதிகாரிகள் கட்டாயப்படுத்துகின்றனர். பள்ளியில் துப்புரவு பணி செய்யும் ஆயாக்களுக்கு இருக்கும் மரியாதைகூட,எங்களுக்கு இல்லை.
மழலையர் பள்ளிகளை அதிகம் துவங்கிமாநகராட்சி வரலாற்றில்கல்வித்துறையில் தற்போது தான் பெரிய சாதனை நடக்கிறது எனபெருமை பேசும் மேயர் சைதை துரைசாமிஎங்களது பிரச்னைகளை கவனத்தில் கொள்ள வேண்டும். அப்போது தான்மாநகராட்சி கல்வித்துறை அதிகாரிகளின் லட்சணம் தெரியவரும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment