Friday, July 1, 2016

விடைத்தாள் திருத்தத்தில் தவறு; ஆசிரியர்களுக்கு தண்டனை இல்லை!

ஆசிரியர் சங்கங்களின் நெருக்கடியால், விடைத்தாள் திருத்தத்தில் தவறு செய்த ஆசிரியர்கள் மீதான தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது.

பத்தாம் வகுப்புபிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான வினாத்தாள் தயாரித்தல்விடைத்தாள் திருத்தம்,தேர்வறை கண்காணிப்பு பணிதேர்வு மைய ஆய்வுப் பணி போன்ற அனைத்திலும்அரசு பள்ளி ஆசிரியர்களே பெரும்பாலும் ஈடுபடுகின்றனர். இந்நிலையில்சமீபத்தில் முடிந்த பிளஸ் 2மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில்,மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டல் போன்றவற்றில்பல மாணவர்களுக்கு மதிப்பெண்கள் மாறியுள்ளன. 
பிளஸ் 2 தேர்வில், 2,278 பேரும், 10ம் வகுப்பு தேர்வில், 450 பேரும் கூடுதல் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். எனவேஇந்த விடைத்தாள்களை திருத்திய ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க,தேர்வுத் துறை முடிவு செய்துஅவர்களின் பட்டியலை தயாரித்தது.
இதையறிந்த ஆசிரியர் சங்கங்கள்போராட்டம் நடத்துவோம் எனதகவல் அனுப்பின. ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுப்பது போல்சம்பந்தப்பட்ட விடைத்தாள் மைய கண்காணிப்பாளர்முதன்மை கல்வி அதிகாரிமண்டல பொறுப்பு அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனநெருக்கடி கொடுத்தன. 
இதையடுத்துஆசிரியர்கள் மீதான நடவடிக்கையை நிறுத்தி வைக்கதேர்வுத்துறை முடிவு செய்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.

No comments:

Post a Comment