3 தலைமை ஆசிரியர்களைப் பணியிடை நீக்கம் செய்ததற்கு கண்டனம்
அண்மையில் வெளியான பிளஸ் 2 தேர்வில் குறைந்த சதத் தேர்ச்சி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 3 அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை அந்த மாவட்டக் கல்வித்துறை பணியிடை நீக்கம் செய்ததற்கு தமிழ்நாடு தலைமை ஆசிரியர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அச்சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலர் சாமி. சத்தியமூர்த்தி வெளியிட்ட அறிக்கை:
பிளஸ் 2 தேர்வில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 3 அரசுப் பள்ளிகள் 70 சதத் தேர்ச்சியைப் பெற்றுள்ளன. இந்தத் தேர்ச்சி விகிதம் குறைவு என்பதை காரணமாக வைத்து அப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் 3 பேர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மூலம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இத்தகைய நடவடிக்கை தமிழகத்தில் உள்ள அனைத்து ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இப்பிரச்சினையில் பள்ளிக் கல்வித் துறைச் செயலர் தலையிட்டு பணியிடை நீக்கத்துக்கான உத்தரவை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

No comments:
Post a Comment