திருவாடானை அருகே இரு தனியார் பள்ளிகளில் தேர்வு கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கூண்டோடு இடமாற்றம் செய்யபட்டனர்.
திருவாடானை அருகே இரு தனியார் மேல்நிலை பள்ளிகள் 20 கி.மீ.,தூரத்தில் உள்ளன. இந்த பள்ளி களில் பணியாற்றும் 10 ஆசிரியர்கள் தங்களுக்குள் கலந்து பேசி ஒரு பள்ளியை சேர்ந்த 4 ஆசிரியர்கள் மற்றொரு பள்ளிக்கும், அந்த பள்ளியை சேர்ந்த 6 ஆசிரியர்கள் ஒரு பள்ளிக்கும் கண்காணிப்பாளர்களாக பணியாற்றும் வகையில் உத்தரவை பெற்றனர்.
இதற்கு அரசு பள்ளிகளை சேர்ந்த சில ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தனியார் பள்ளி ஆசிரியர்கள் தங்களுக்குள் மாற்றம் செய்து கொண்டதால் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் உதவி செய்ய வாய்ப்பு உள்ளது என்றும், அரசு பள்ளிகளில் தரம் குறையும் என்றும் மாவட்ட கல்வி அதிகாரியிடம் புகார் செய்தனர். விசாரணை செய்த கல்வி அதிகாரி தனியார் பள்ளியில் பணியாற்றிய அனைத்து ஆசிரியர்களையும் கூண்டோடு இட மாற்றம் செய்தார்.
இது குறித்து மாவட்ட கல்வி அலுவலர் ஜெயகண்ணு கூறியதாவது:
தனியார் பள்ளிகளில் அரசு ஆசிரியர்கள் தான் கண்காணிப்பாளர்களாக பணியாற்ற வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. ஆசிரியர்கள் பற்றாக் குறையாலும், 20 கி.மீ.தூரத்திற்குள் ஆசிரியர்களை இட மாற்றம் செய்து கொள்ளலாம், என்ற வகையில் நியமிக்கபட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கபட்டதால் சம்பந்தபட்ட இரு தனியார் பள்ளிகளில் பணியாற்றிய கண்காணிப் பாளர்கள் நேற்று கூண்டோடு இட மாற்றம் செய்ய பட்டனர், என்றார்.
No comments:
Post a Comment