மாநிலம் முழுவதும் அரசு பள்ளிகளுக்கு வரும் ஆசிரியர்களின் வருகையை கண்காணிக்க பயோ-மெட்ரிக் முறையை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் கடலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்படுவது தொடர்பாக
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பழனிசாமி கூறுகையில், மாவட்டத்தில், 4 கல்வி மாவட்டங்களில் 2224 பள்ளிகள் உள்ளன. இதில், 143 அரசுப் பள்ளிகள், 75 மெட்ரிக் பள்ளிகள், 29 அரசு உதவிபெறும் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக உள்ளன. இவற்றிலிருந்து கடலூர், விருத்தாசலம், சிதம்பரம், வடலூர் கல்வி மாவட்டங்களில் தேர்வு செய்யப்பட்டுள்ள தலா 10பள்ளிகளில் பயோ-மெட்ரிக் இயந்திரம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த இயந்திரத்தில் பள்ளியின் முழுவிவரங்கள், ஆசிரியர் தனிப்பட்ட பணி விவரங்கள், எத்தனை மாணவ, மாணவியர், அவர்களின் வருகைப்பதிவேடு உள்ளிட்டவையும் பதிவுசெய்ய முடியும். இத்திட்டம் வெற்றிகரமாக அமையும் பட்சத்தில் மாவட்டத்தில் மற்ற பள்ளிகளிலும் நடைமுறைப்படுத்தப்படும் என்றார்.
முன்னதாக, இந்த இயந்திரத்தில் மாணவர்களின் விவரங்களையும் பதிவேற்றம் செய்யும் வகையில் அவர்களிடம் படிவம் வழங்கப்பட்டு அவர்களது சுய விவரக் குறிப்புகள், வங்கி எண், ஆதார் எண் உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இந்த விவரங்கள் அனைத்தும் கணினிமயமாக்கும் பணியும் நிறைவடையும் நிலையில் உள்ளதாம். இப்பணிகள் முடிவடைந்த பின்னர், அவர்களது வருகையும் பயோ-மெட்ரிக் இயந்திரத்தில் பதிவேற்றம் செய்யலாம். இதன் மூலமாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோர் தாங்கள் இருக்கும் இடத்திலிருந்தே குறிப்பிட்ட பள்ளி முதல் அனைத்துப் பள்ளிகளின் ஆசிரியர் வருகை, மாணவர் வருகை உள்ளிட்ட விவரங்களை தெரிந்துகொள்ள முடியும். இது ஆசிரியர்கள், மாணவர்கள் குறித்த நேரத்தில் பள்ளிக்கு வந்து செல்வதை உறுதிப்படுத்தும் எனவே, வரவேற்கத்தகுந்த நடவடிக்கை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment