Saturday, October 7, 2017

20 சதவீத ஊதிய உயர்வு?

தீபாவளிக்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சி

சென்னை: தமிழக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு 20 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக, தகவல் தெரிவிக்கின்றன. இதற்கான அறிவிப்பு தீபாவளிக்கு முன் வெளியாகும் என்று சொல்றாங்க...
கடந்த சட்டசபை தேர்தலின்போது, 'மத்திய அரசு ஊழியர்களுக்கான, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை அமல்படுத்தப்பட்டதும் தமிழக அரசு பணியாளர்களுக்கும், ஊதிய விகிதங்களை மாற்றி அமைக்க, நடவடிக்கைகள் எடுக்கப்படும்' என்று ஜெயலலிதா அறிவித்து இருந்தார்.
அவரது அறிவிப்பை செயல்முறைப்படுத்த, தமிழக அரசு முடிவு செய்தது. இதன்படி ஊதிய விகிதங்களை மாற்றி அமைக்க, அலுவலர் குழு அமைக்கப்பட்டது.
இக்குழு அறிக்கை அடிப்படையில், அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, 20 சதவீதம் சம்பள உயர்வு வழங்க, அரசு முடிவு செய்திருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது. தீபாவளிக்கு முன்பாக இதற்கான அரசாணை வரும் என்று சொல்றாங்க...

No comments:

Post a Comment