ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின், ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பில் இடம் பெறாத சங்கத்தினர், முதல்வர் பழனிசாமியை சந்தித்து, கோரிக்கைகள் குறித்து பேசினர்.
ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு, 2003ல் நடத்திய, பெரிய போராட்டத்துக்கு பின், மீண்டும் தொடர் போராட்டத்தை துவக்கி உள்ளது.
முதற்கட்டமாக, மாவட்டங்களில் ஆர்பாட்டம் முடிந்துள்ளது. வரும், 5ம் தேதி, கோட்டை நோக்கி பேரணி, 22ம் தேதி, ஸ்டிரைக் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜாக்டோ - ஜியோ சங்கத்தினர் முதல்வரை சந்திக்க வருமாறு, அரசு தரப்பில் அழைக்கப்பட்டது. எழுத்துபூர்வ அழைப்பின்றி பங்கேற்க மாட்டோம் என, ஜாக்டோ -
ஜியோ அறிவித்தது.
அதனால், ஜாக்டோ - ஜியோவில் இடம் பெறாத, தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய தலைவர், சண்முகராஜன், தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள், அடிப்படை பணியாளர்கள் மாநில மைய சங்கத் தலைவர், கணேசன், அரசு துறை ஊர்தி ஓட்டுனர்
சங்கத் தலைவர் பாலமுருகன் ஆகியோர், முதல்வர் பழனிசாமியை சந்தித்து மனு அளித்தனர்.
இந்நிலையில், ஜாக்டோ சங்க ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன் கூறுகையில், ”எங்கள் கூட்டமைப்பில், 78 சங்கங்கள் உள்ளன. இன்னும் பல சங்கங்கள் சேரும். எனவே, கோரிக்கையிலிருந்து பின் வாங்காமல், திட்டமிட்டபடி போராட்டம் நடக்கும்,”என்றார்.
No comments:
Post a Comment