Monday, May 15, 2017

ஆசிரியர் பொது மாறுதல் கவுன்சிலிங் நடத்த ஏற்பாடு

தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை மற்றும் சிறப்பாசிரியர்கள் உள்ளிட்டோருக்கான பொதுமாறுதல் கவுன்சிலிங், மே, 19 முதல், மே, 31 வரை அந்தந்த மாவட்டங்களில் நடைபெறுகிறது. 

சேலம் மாவட்ட ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கவுன்சிலிங், சேலம் நான்கு ரோடு சிறுமலர் மேல்நிலைப்பள்ளியில், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஞானகவுரி தலைமையில் நடைபெற உள்ளது. 

இதில், கலந்து கொள்ள விண்ணப்பித்துள்ள ஆசிரியர்கள், இணையதளத்தில் பதிவு செய்து, பெறப்பட்ட ஒப்புகை படிவத்துடன் கலந்து கொள்ளும் வகையில், அனுப்பி வைக்க, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment